Kadalai mittai seivathu eappadi new idea 2021
லாபத்தை அள்ளித்தரும் கடலை மிட்டாய் தயாரிப்பு தொழில் செய்வது எப்படி.
90’பிறந்த குழந்தைகளின் விருப்பமான கடலைமிட்டாய் தொழில் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்
நெல்லிக்காய் மிட்டாய், கடலை மிட்டாய், மற்றும் கடலை உருண்டை, இது போன்ற மிட்டாய்கள் இப்பொழுதும் சந்தையில் அதிக வரவேற்பு இருக்கிறது.
இவற்றின் தேவை இப்பொழுது அதிகமாக உள்ளதால் நீங்கள் இந்தத் தொழிலை வீட்டிலிருந்து எளிமையாக செய்து நல்ல வருமானத்தை பெற முடியும் அதனை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் பார்ப்போம்.
பன்னாட்டு நிறுவனங்கள் பல்வேறு வகைகளில் சாக்லேட்களை விற்பனை செய்தாலும் எப்போதும் தமிழ்நாட்டில் இந்த குடிசைத் தொழிலாக இருக்கும் இந்த கடலைமிட்டாய் தயாரிக்கும் தொழில் மிகவும் பிரசித்தி பெற்று இருக்கிறது.
காரணம் இதனுடைய சுவை மற்றும் ஊட்டச்சத்து என்று சொல்லலாம் அது மட்டுமில்லாமல் இதனுடைய விலை 5 ரூபாய்க்கு குறைவாக இருப்பதால் இதனை விற்பனை என்பது படுஜோராக நடைபெற்று கொண்டிருக்கிறது.
நெல்லிக்காய் மிட்டாய் தயாரிக்கும் முறை
இதற்கு தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் – 1 கிலோ
சர்க்கரை – 1.12 கிலோ
தண்ணீர் – 500 மில்லி லிட்டர்
சிட்ரிக் அமிலம் – 6.4 கிராம்
பொட்டாசியம் மெட்டா பை சல்பேட் – 1.2 கிராம்
நெல்லிக்காய் மிட்டாய் செய்முறை
சர்க்கரை பாகு தயாரிக்க வேண்டும் முதலில் இதற்கு நீங்கள் 750 கிராம் சர்க்கரையுடன் 500 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்க்க வேண்டும் சரியாக.
அதனுடன் சிட்ரிக் அமிலம் மற்றும் பொட்டாசியம் மெட்டா சேர்க்க வேண்டும் சர்க்கரை கரைசலை 60BX கொதிக்க வைக்கவேண்டும் சரியாக.
நெல்லிக்காயை 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
நெல்லி துண்டுகள் மற்றும் சர்க்கரையின் அளவு (பதப்படுத்தப்பட்ட 1: 1.5 ) மெல்லிய கண்ணாடி குடுவையில் வைக்க வேண்டும்.
இதை நீங்கள் நிழலில் உலர்த்தி நெல்லிக்காய் மிட்டாய் பெறலாம் குறிப்பு இதை நீங்கள் வெயிலில் வைத்துவிடக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
கடலை மிட்டாய் செய்வது எப்படி இதற்கு தேவையான பொருட்கள்
தோராயமாக
வறுத்த நிலக்கடலை 100 கிராம்
வெல்லம் 1/2 கிலோ
செய்முறை
வெல்லத்தை நன்கு பதமான முறையில் பாகு காய்ச்சவும் முக்கியத்துவம் வறுத்த கடலை பருப்பை போட்டு நன்றாக கிளறவும்
கலவையை அரிசிமாவு தடவிய சதுர பலகையில் கொட்டவும் சூடு ஆறுவதற்கு முன்பு பூரிக்கட்டையால் விரித்து உடனே வில்லைகள் போடவும் சுவையான கடலை மிட்டாய் இப்பொழுது ரெடி.
பலகையில் அரிசி மாவு தடவிக் கொள்வதால் கடலை மிட்டாய் பலகையில் இருந்து எளிமையாக எடுக்க வரும் நீங்கள் அரிசி மாவு கட்டாயம் தடவ வேண்டும்.
கடலை உருண்டை தயாரிப்பது எப்படி தேவையான பொருட்கள்
தோராயமாக
வெள்ளம் – அரை கப்
வேர்க்கடலை – 2 கப்
ஏலக்காய்த்தூள் – தேவையான அளவு
கடலை உருண்டை செய்முறை எப்படி
வேர்க்கடலையை முதலில் நன்றாக சுத்தம் செய்து வறுத்து தோல் நீக்கி வைத்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் வெல்லத்தை சீவி பொடியாக்கி கால் கப் தண்ணீர் சேர்த்து பாகு செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு கடலையைப் பாகில் கொட்டி நன்றாக கிளறி விடவும் பின்பு சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி உருண்டைகளாகப் பிடிக்கவும் அவ்வளவுதான் கடலை உருண்டை இப்பொழுது தயார்.
முதலீடு எவ்வளவு தேவைப்படும்
இந்த தொழிலை தூங்குவதற்கு உங்களிடத்தில் குறைந்தபட்சம் 1,000/- ரூபாய் முதல் அதிகபட்சம் 5,000/- ரூபாய் வரை முதலீடு தேவைப்படும்.
நோயின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் கொஞ்சமாவது இந்த உணவுகளை சாப்பிடுங்கள்.
குறிப்பு இந்தத் தொழிலில் சுவை மிக மிக முக்கியம் சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தான் பல நபர்கள் இந்த கடலை மிட்டாய், நெல்லி மிட்டாய், கடலை உருண்டை, போன்றவற்றை வாங்குகிறார்கள்.
Bread business full details in tamil 2021
பெட்டிக்கடை, பள்ளியில், கல்லூரியில், பேருந்து நிலையம், குழந்தைகள் விளையாடும் மைதானம், உள்ளிட்ட இடங்களில் இதனை நீங்கள் விற்பனை செய்யலாம்.