Kadan pathiram format full details 2022
கடன் பத்திரம் எழுதுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கையில் எல்லா சூழ்நிலையிலும் இது பயன்படும்..!
பொதுவாக நம்முடைய வாழ்க்கையில் எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் செலவுகள் காரணமாக நண்பர்கள், உறவினர்கள் அல்லது தெரிந்தவர்களிடம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.
அந்த சமயம் பெரிய அளவில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது, கடன் கொடுக்கக் கூடிய நபர்கள் கட்டாயம் 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பர் அல்லது பச்சை நிறத்தில் இருக்கும் பாண்டு பத்திரத்தில் ஒப்பந்தம் எழுதித் தருமாறு கேட்டுக் கொள்வார்கள்.
இதனை கடன் உறுதி பத்திரம் என்று சொல்வார்கள், அதாவது நாம் சில மாதங்கள் அல்லது சில வருடங்களுக்குள் கடன் கொடுத்தவர்களிடம் வாங்கிய தொகையை.
வட்டியுடன் திருப்பிக் கொடுத்து விடுவோம், என்பதற்கான ஒரு அர்த்தமாகும், சரி இந்த கட்டுரையில் கடன் பத்திரம் எப்படி எழுதுவது என்பதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
கடன் பத்திரம் எழுதுவது எப்படி
உறுதிப்பத்திரம் என்று சொல்லக்கூடிய கடன் பத்திரம் எழுதுவதற்கு முதலில் குறைந்தபட்சம் 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பர் அல்லது பச்சை நிறத்தில் இருக்கும் பாண்டு பத்திரம் வாங்கிக் கொள்ளவேண்டும்.
அவற்றில் உங்களது உறுதிமொழியை எழுதுங்கள், உதாரணத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள உதவிக்குறிப்பு போல் இருக்கும்.
நீங்கள் எவ்வளவு கடன் தொகை வாங்கப் போகிறீர்கள் அந்தத் தொகையை பத்திரத்தின் இடதுபுறத்தில் எழுதிக்கொள்ள வேண்டும்
அதன்பிறகு நீங்கள் கடன் வாங்க இருக்கும் அந்த நாளின் தேதி பத்திரத்தின் வலதுபுறத்தில் எழுதவேண்டும்.
பிறகு கடன் உறுதி பத்திரம் என்று நடுப்பகுதியில் தலைப்பிடுங்கள்.
அதன்பிறகு கடன் தொகையின் முழு விவரம், உங்களுடைய விவரம், உங்களுடைய முகவரி, தொலைபேசி எண், வீட்டு எண், உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இருக்க வேண்டும்.
கடன் தொகையை எப்பொழுது திருப்பி கொடுப்பீர்கள், என்ற விவரங்களையும் தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
பிறகு சாட்சிகளின் கையொப்பம் பத்திரத்தின் இடது புறத்தில் இடவேண்டும்.
அதன்பிறகு ஒரு ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி கடன் வாங்குபவரின் பெயரையும் கையொப்பம் இட வேண்டும்.
கடன் பத்திரம் எழுதும் முறை
கடன் தொகை: ரூபாய் 2,00,000/- தேதி : XXX
கடன் உறுதி பத்திரம்
XXX ஆகிய நான் என்ற முகவரியில் வசித்து வருகிறேன், எனது சுய செலவிற்கு ரூபாய் 2 லட்சம் ரூபாய் YYY என்பவரிடம் கடனாக வாங்கியுள்ளேன்.
இந்தத் தொகையை அடுத்த 1 வருடத்தில் அசல் மற்றும் அதற்கு வட்டியுடன் திருப்பிக் கொடுத்து விடுவேன், என தெளிவாக, மனப்பூர்வமாக, உறுதியளிக்கிறேன்.
கடன் கொடுத்த நாள் (தேதி /மாதம் /ஆண்டு) அன்று சாட்சிகள் முன்பு கொடுக்கப்பட்டது.
மீன் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி..!
இந்த பணத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் நான் கொடுக்கவில்லை என்றால் நீங்கள் சட்டரீதியாக என்ன மாதிரியான நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு நான் சம்பாதிப்பேன் என்பதை தெளிவாக கூறுகிறேன்.
Which is the most delicious fish in tn 2022
முழு விவரம் :கடன் கொடுக்கப்பட்ட நபரின் அனைத்து விவரங்கள்.
சாட்சிகள் கையொப்பம்
XXXX
XXXX
XXXX
கடன் வாங்கிய நபரின் பெயர் கையொப்பம் (XXX)