கள்ளக்குறிச்சி மாவட்டம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020(Kallakurichi District Vacancy 2020 Quick Apply)
தமிழக அரசு கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து ஊராட்சி துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது. அதன் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகளில் காலியாக இருக்கும் செயலாளர் பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாக படிக்கவும்.
நிர்வாகம்:கள்ளக்குறிச்சி மாவட்டம்
மேலாண்மை நிர்வாகம்: தமிழ்நாடு அரசு
பதவி:ஊராட்சி செயலாளர்
பணியிடம்:கள்ளக்குறிச்சி மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 9/11/2020
ஊதியம்:9/11/2020
வயது வரம்பு.
18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் தமிழக அரசின் விதிமுறைகளின்படி குறிப்பிட்ட விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி.
தமிழக அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படி இப்பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Best Plan Indian Government 2020 in Tamil
விண்ணப்பிக்கும் முறை.
விண்ணப்ப படிவத்தை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்
பள்ளி மாற்றுச் சான்றிதழ், கல்வித் தகுதி சான்று,( SSLC MARKSHEET) ஆதார் அட்டை, பான் கார்டு, இருப்பிடச் சான்று, சாதி சான்றிதழ், அடையாள அட்டை, வீட்டு வரி ரசீது, குடும்ப அட்டை, போன்ற சான்றிதழ்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும்போது இணைக்கப்பட வேண்டும்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் அனுப்பப்படும்
Best Scheme kisan vikas patra 2020 in tamil
தேர்வு செய்யப்படும் முறைகளில் தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளதால் விண்ணப்பதாரர்கள்அதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வது நல்லது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை சமர்ப்பிக்கலாம் அல்லது பதிவு அஞ்சல் மூலமும் அனுப்பலாம் விண்ணப்பிக்க கடைசி தேதி 9/11/2020.
விண்ணப்பத்தை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.twitter