Kallakurichi student 2 post mortem best report
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் 2வது பிரேத பரிசோதனை அறிக்கை என்ன சொல்கிறது..!
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலை இரண்டாவது முறை பிரேத பரிசோதனை மேற்கொண்ட குழுவிலிருந்த தடவியல் நிபுணர் சாந்தகுமார் மீது மாணவியின் பெற்றோர் தரப்பு புகார் வைத்துள்ளது
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய கோரிக்கை விடுத்த மாணவியின் பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள்.
அதில் மாணவியின் பெற்றோர் தரப்பு தங்களுக்கு தெரிந்த ஒரு மருத்துவரும் பிரேத பரிசோதனையில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
உச்சநீதிமன்றம் இதை விசாரிக்க மறுத்து உயர் நீதிமன்றத்தை நாட சொல்லியது.
இந்த நிலையில் மாணவியின் பிரேத பரிசோதனையில் பெற்றோர் தரப்பு மருத்துவரை ஈடுபட அனுமதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது, சென்னை நீதிமன்றம் தீர்ப்பை மாற்ற முடியாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தடவியல் நிபுணர் ஏன்
இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கு இரண்டாவது பிரேத பரிசோதனை மேற்கொண்ட குழுவிலிருந்த தடவியல் நிபுணர் சாந்தகுமார் மீது மாணவியின் பெற்றோர் தரப்பு புகார் வைத்தார்கள்.
அவர் மீது ஏற்கனவே வேறு சில புகார்கள் இருப்பதாக மாணவியின் தரப்பு புகார் அளித்திருந்தனர்.
இதையடுத்து இன்று தடவியல் நிபுணர் சாந்தகுமார் அழைத்து நீதிபதிகள் விசாரித்தனர், இரண்டாவது பிரேத பரிசோதனையில் செய்யப்பட்டது மாற்றங்கள் என்ன என்று.
என்னென்ன புகார்கள்
அதில் எதுவும் மாற்றங்கள் இருந்ததா என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள் இதற்கு பதில் அளித்த சாந்தகுமார் இரண்டு பிரேத பரிசோதனையில் எந்த வேறுபாடும் இல்லை.
இரண்டுக்கும் எந்த முரண்பாடும் இல்லை, எல்லா வீடியோவும் சரியாக இருக்கிறது, இரண்டாவது பிரேத பரிசோதனையில் புதிதாக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை, என்று வாக்குமூலம் கொடுத்தார்.
நீதிமன்றம் வெளியிட்டிருக்கும் அறிக்கை என்ன
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பேசியபோது மாணவியின் உடல் 10 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் இருக்கிறது.
மாணவியின் உடலை பெற்றுக் கொள்வதில் பெற்றோர் ஏன் இத்தனை தயக்கம் காட்டுகிறார்கள் 45 நிமிடங்களில் உங்கள் முடிவை சொல்லுங்கள்.
நீதிமன்றத்தை நம்பாமல் நீங்கள் சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ் அப்பில் வரும் தகவல்களை நம்புகிறீர்கள் என்று நீதிபதி சரியான கேள்வியை மாணவியின் பெற்றோரை பார்த்து கேட்டார்.
வெளிவரும் அறிக்கைகள் என்ன
இரண்டு பிரேத பரிசோதனைகளுக்கு இடையில் வேறுபாடு இல்லை என்று நீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் மாணவியின் முதல் பிரேத பரிசோதனை இரண்டாம் பிரேத பரிசோதனை முடிவுகள் ஒன்றாக வரும் என்று தகவல்கள் உறுதியாகியுள்ளது.
மாணவியின் முதல் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் அவருக்கு தலையில், மூக்கில், வலது தோள்பட்டையில், அடிபட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அதேபோல் அவரின் பள்ளி சீருடையில் மேலாடை, கால்சட்டை மேல் மற்றும் கீழ் உள்ளாடை இரண்டிலும் ரத்தக்கரை இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
உடலில் காயம் இருக்கும் இடங்கள்
Kallakurichi student 2 post mortem best report மார்பு பகுதி, கை பகுதி, ஆகியவை உடைந்து இருந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது,இடது தலை பகுதி உடைந்து இருந்ததாகவும் அறிக்கையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் உடலில் இருந்த காயங்கள் எல்லாம் புதிய காயங்கள் தான் என்றும் பழைய கிடையாது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Kallakurichi student 2 post mortem best report அதிக அளவில் ரத்தம் வெளியேறியது, காயங்கள் காரணமாக ஏற்பட்ட ஆகியவைதான் மரணத்திற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று அறிக்கையில் இறுதியில் கூறப்பட்டுள்ளது.
உள்ளாடையில் ரத்தக்கரை மார்பில் காயங்கள் அதிர்ச்சிதரும் பிரேத பரிசோதனை அறிக்கை..!
இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கையை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.