kallakurichi violence 278 arrested useful tips
கள்ளக்குறிச்சி கலவரம் காவல்நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்து 4 நபர்களுக்கு கை கால் எலும்பு முறிவு முழு விவரம் என்ன..!
சின்னசேலம் தனியார் பள்ளியில் பள்ளி மாணவி மர்ம மரணம் விவகாரத்தில் கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 278 நபர்களில்.
4 நபர்கள் காவல் நிலைய கழிவறையில் வலிக்கு விழுந்ததாக கை கால் எலும்பு முறிவுக்கு மாவுகட்டு போடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளி விடுதியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி உயிரிழந்தார், அவரது மரணத்திற்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட போராட்டம் மிகப்பெரிய கலவரமாக மாறி விட்டது.
இதில் பள்ளியின் பேருந்துகள், வகுப்பு அறைகள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டு கொளுத்தப்பட்டது, பள்ளியில் வைக்கப்பட்டிருந்த, மாணவர்களின் மாற்று சான்றிதழ்களும் முற்றிலும் கொளுத்தப்பட்டது.
15 பிரிவுகளில் வழக்குகள்
இதையடுத்து கலவரக்காரர்கள் மீது காவல்துறையினர் 15 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.
இந்த நிலையில் முதல்கட்டமாக கலவரத்தில் ஈடுபட்டதாக அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த முத்துலிங்கம், ஏழுமலை, பாபு, முருகவேல், வெங்கடேஷ், பாலு, பிரகாஷ், சத்தியமூர்த்தி, ஆனந்தன், சின்னத்தம்பி, மணிகண்டன், உட்பட 128 நபர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
20 சிறுவர்கள் கைது
இதில் 20 நபர்கள் சிறுவர்கள் இதைத் தொடர்ந்து 108 நபர்களையும் கள்ளக்குறிச்சி 2வது நடுவர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினார்கள் இவர்கள் அனைவரையும்.
வருகின்ற ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார், இதையடுத்து இவர்கள் அனைவரும் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
278 நபர்கள் மேலும் கைது
சிறுவர்கள் 20 நபர்களும் கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர் இதையடுத்து காவல்துறையினர் 2வது கட்டமாக இரண்டு சிறுவர்கள் உட்பட மேலும் 150 நபர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மொத்தம் 278 நபருக்கும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, அதுபோல் கொரோனா வைரஸ் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
எலும்பு முறிவு என்ன நடந்தது
kallakurichi violence 278 arrested useful tips கைது செய்யப்பட்டவர்களில் 4 நபர்களுக்கு காவல் நிலைய கழிவறையில் வழிக்கு விழுந்ததாகவும் அவர்களுக்கு கையில் மாவு கட்டு போடப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
அதுபோல் ஒருவருக்கு காலிலும் கட்டப்பட்டுள்ளது, இந்த கலவரம் தொடர்பாக காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
இதனால் மேலும் பல நூற்றுக்கணக்கான நபர்கள் கைது செய்யப்படலாம், என காவல்துறை சார்பில் அறிவிக்கப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளன.