Karur district recruitment 2020 Quick apply

கரூர் மாவட்டத்தில் 7,800 காவலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.(Karur district recruitment 2020 Quick apply)

கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 7,800 காவலாளர் பணியிடங்களை   நிரப்புவதற்கு   அறிவிப்புகள்  வெளியிடப்பட்டு உள்ளது.14/10/2020 தேதி முதல் 26/10/2020 தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் 13/12/2020  குறைந்தபட்ச  கல்வித்தகுதி  10  ஆம் வகுப்புயானா  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்.

முன்னாள் படை வீரர்களுக்கு முன்னுரிமை.

Karur district recruitment 2020 Quick apply

கரூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரர்கள் இப்பணியிடங்களுக்கு  விண்ணப்பித்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் விண்ணப்பித்த முன்னாள் படை வீரர்கள் 27/10/2020 தேதிக்குள் திருச்சிராப்பள்ளி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் தெரியப்படுத்த வேண்டும்.

பணி விவரங்கள்.

Karur district recruitment 2020 Quick apply

ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர்: 695

இரண்டாம் நிலை காவலர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை: 6545

சிறைத்துறை  இரண்டாம் நிலை காவலர் : 112

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் : 458

இவற்றில் 5%  (390) இடங்கள் முன்னாள் படைவீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தேர்வு கட்டணம் ரூபாய் 130

விண்ணப்பிக்கும் முறை

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள tnusrbonline.org இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் மற்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியாது மேலும் விண்ணப்பிக்கும்போது எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று தகவல் சிற்றேடு (PDF) பதிவிறக்கம் செய்து முழுமையாக படித்து பார்த்து விண்ணப்பிக்க வேண்டும்.

தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு.

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி 18 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது மேலும் முன்னாள் படை வீரர்களுக்கும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் அதிகமாக இருப்பதால் விண்ணப்பிக்க முன்பு அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை நன்றாகப் படிக்க வேண்டும்.

TN rural department vacancy 2020 Quick apply

ஊதிய விகிதம்.

18,200 முதல் 52,900 வரை

இப்பணியிடங்கள் குறித்து மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

Notification PDF

Leave a Comment