Kerala murder case special news 2023
அரிசி திருடியதாக அட்டப்பாடி பழங்குடி இளைஞர் மது அடித்துக் கொலை 13 குற்றவாளிகளுக்கு தண்டனை வெளியிடப்பட்டுள்ளது..!
திருவனந்தபுரம் கேரளா மாநிலம் அட்டப்பாடியில் அரிசி திருடியதாக பழங்குடி இளைஞர் மது அடித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 13 நபர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது மன்னார்காடு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரளாவை சேர்ந்த பழங்குடி இனத்த இளைஞர் மது கடுகுமன்னா என்ற பழங்குடி கிராமத்தை சேர்ந்த மல்லாணியில் மகன் மது அட்டப்பாடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு பல சரக்கு கடையில் அரிசி திருடினார் என்பதற்காக மதுவை அப்பகுதியினர் அடித்து சித்தர்வதை செய்தனர்.
Kerala murder case special news 2023 அப்போது காவல்துறையினர் தலையிட்டு மதுவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் மது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அப்பாவி பழங்குடி இளைஞர் மதுவை அடித்து படுகொலை செய்யும் காட்சிகளை கொடூரர்கள் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்ந்த கொடூர முகமும் அதிர வைத்தது.
மதுவை உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் பட்டினியால் மது வாடிக் கொண்டிருந்ததாக தெரிவித்தனர் ஆம் மதுவின் வயிற்றில் ஒரு பருக்கை கூட உணவு பொருள் எதுவும் இல்லாமல் இருந்தது.
Kerala murder case special news 2023 ஒட்டுமொத்த நாட்டையே தலைகுனிய வைத்தது இந்த சம்பவம் இது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டு மன்னார்காடு எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்ற விசாரணை நடத்தியது.
கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த வழக்கில் 3,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது,குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
Kerala murder case special news 2023 ஆனால் அட்டப்பாடி மது கொலை வழக்கு ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டு இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வந்தனர்.
கேரளா அரசு சிறப்பு வழக்கறிஞராக கோபிநாத் நியமிக்கப்பட்டு இருந்தார் அவருக்கு எந்த வசதியும் செய்து தரப்படாத காரணத்தால் பின்னர் தமது பதிவை ராஜினாமா செய்த அவலமும் நிகழ்ந்தது.
பின்னர் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ரகுநாத் நீதிமன்றத்தில் ஆஜராகவே இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
ஒரு வழியாக இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது அட்டப்பாடி பழங்குடி இளைஞர் மதுவை படுகொலை செய்த 16 நபர்களில் 14 நபர்கள் குற்றவாளிகள் என மன்னார்காடு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இன்று குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன குற்றவாளிகளில் 14 நபர்களில் 13 நபர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி.