kiramathu nethili karuvadu kulambu best 2022
கிராமத்து நெத்திலி கருவாட்டு குழம்பு செய்வது எப்படி..!
கருவாட்டு குழம்பு செய்வது எப்படி அதுவும் கிராமத்து நெத்திலி கருவாட்டு குழம்பு என்றால் பல நபர்களுக்கு பிடித்த குழம்பு.
ஆனால் வீட்டில் கருவாட்டு குழம்பு அதுவும் கிராமத்து கருவாட்டு குழம்பு செய்வது என்பது மிகக் கடினம் அப்படி செய்தாலும் சரியான சுவை கிடைப்பதில்லை.
இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள குறிப்புகளை நீங்கள் பின்பற்றினால் கட்டாயம் உங்களுக்கு மிகுந்த சுவையான கருவாட்டு குழம்பு கிடைக்கும்.
கருவாட்டு குழம்பு செய்ய தேவையான பொருட்கள்
நெத்திலி கருவாடு – 250 கிராம்
கத்தரிக்காய் – 1/4 கிலோ
முருங்கைக்காய் -3
பச்சை மிளகாய் – 3
தக்காளி – 2 (சிறு துண்டுகளாக நருக்கியது)
புளி – எலுமிச்சை பழ அளவு
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
கடலை எண்ணெய் – எண்ணெய்
உப்பு – எண்ணெய்
சுவையான மசாலா அரைப்பதற்கு
சின்ன வெங்காயம் தேவையான அளவு
மல்லி தூள் – 50 கிராம்
சீரகம் -1/2 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் – (3காய்ந்தது)
கறிவேப்பிலை – சிறிதளவு
பூண்டு – 4 பற்கள்
துருவிய தேங்காய் – 1/4 கப்
கருவாட்டு குழம்பு செய்யும் முறை எப்படி
நெத்திலி கருவாட்டு குழம்பு செய்வது எப்படி முதலில் கருவாட்டை தண்ணீரில் நன்கு ஊறவைத்து சில மணி நேரங்கள் கழித்து கருவாட்டை நன்றாக சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு கத்திரிக்காய், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் முருங்கை காய், அனைத்தும் நன்றாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
புளியை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து, ஊறியதும் புளி கரைத்து வைத்துக் கொள்ளவும்.
கருவாட்டு குழம்பு செய்யும் முறை
kiramathu nethili karuvadu kulambu best 2022 ஒரு மண் சட்டியை எடுத்துக் கொள்ளவும் அவற்றை அடுப்பில் வைத்து மண்சட்டியில் சூடேறியதும் கொஞ்சம் கடலை எண்ணெய் ஊற்றி.
எண்ணெய் காய்ந்ததும் காய்ந்த மிளகாயை வறுத்து பின்பு அதனுடன் சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகு, மல்லி தூள், மற்றும் கறிவேப்பிலை, ஆகியவற்றை வதக்கி நன்கு ஆறியதும்.
அதனுடன் தேங்காய் சேர்த்து, அம்மியில் அல்லது மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும், நீங்கள் அம்மியில் அரைத்தால் சுவை இன்னும் அதிகமாக கூடும்.
கருவாட்டு குழம்பு செய்யும் முறை
kiramathu nethili karuvadu kulambu best 2022 பின்பு மற்றொரு மண் சட்டியை அடுப்பில் வைத்து சூடேறியதும் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய், மற்றும் சிறிதளவு சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பின்பு அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும், பின்பு அவற்றில் கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.
காய்கள் நன்றாக வெந்ததும் அதில் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சில மணி நேரம் நன்கு கொதிக்கவிடவும்.
கருவாட்டு குழம்பு செய்யும் முறை
kiramathu nethili karuvadu kulambu best 2022 பின்பு கரைத்து வைத்துள்ள புளி சாறு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும், புலி சாறானது நன்கு கொதித்ததும், அதில் நெத்திலி கருவாடு சேர்த்து குறைந்தபட்சம் 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
இப்போது சுவையான கிராமத்து நெத்திலி கருவாட்டு குழம்பு தயாராகிவிட்டது, சமைக்கும் போது அதிகமான வாசனை வீடு முழுவதும் வரும்.