Koduva meen 5 best health benefits list
கொடுவா மீன் இதனை SEA BASS ஆங்கிலத்தில் என்று அழைப்பார்கள்.
கொடுவா மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
மீன் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் குறிப்பாக கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடல் சார்ந்த அனைத்து மீன்கள் கிடைக்கும்.
ஆனால் உள் மாவட்டங்களில் இருக்கும் மக்களுக்கு கடல்மீன்கள் கிடைப்பது அவ்வளவு எளிதில் இல்லை.
மீன்களில் ஒமேகா-3 ஊட்டச்சத்து நிறைந்திருப்பதால் இதனை எடுத்துக்கொள்வதால் இதயம் சார்ந்த பல்வேறு விதமான பிரச்சனைகள் குணமாகிறது.
மருத்துவர்களும் வாரத்திற்கு 2 முறை மீன்களை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள்.
மீன்களில் பலவகை இனங்களும் இருக்கிறது அதில் கொடுவா மீன் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
கொடுவா மீன் ஆரோக்கிய நன்மைகள் என்ன
மீன் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த ஒரு சிறந்த அசைவ உணவாக இருக்கிறது, குறிப்பாக மீன்களில் வைட்டமின் டி, ஈ கொழுப்பமிலங்கள் புரோட்டின்,ஒமேகா 3, போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.
இந்த மீன் உவர்நீர் மற்றும் கழிமுக நீர்களில் வாழக்கூடியது இது 1.5 மீட்டர் நீளமும் வளரக்கூடியது.
மேற்பரப்பில் சாம்பல் வெள்ளி நிறத்தில் மற்றும் அடிப்பகுதியில் வெள்ளை நிறத்தில் காணப்படும்.
தலையில் 7 முதல் 10 வரையிலான செதில்கள் இருக்கும் இத்தகைய சிறப்பு கொண்ட கொடுவா மீன் தமிழ்நாட்டை விட வெளிநாடுகளில் அதிக அளவில் கிடைக்கிறது.
உடலின் கொழுப்பின் அளவை குறைக்கிறது
கொடுவா மீனில் கொழுப்புச்சத்து மிகவும் குறைவாக இருப்பதால் இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் இருக்கும் அதிகப்படியான கொலஸ்ட்ரால் கட்டுக்குள் வரும்.
இந்த மீனை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ந்து எடுத்துக்கொண்டு வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறையும் மற்றும் இதயத் தமனிகளில் சேர்ந்திருக்கும் கொழுப்பு குறையும்.
மூளை ஆரோக்கியத்திற்கு சிறந்தது
கொடுவா மீனை நீங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது இதில் இருக்கும் ஒமேகா-3 ஊட்டச்சத்து கொழுப்பு அமிலங்கள்,உங்கள் உடலில் முக்கியமான உறுப்புகளாக கருதப்படும், மூளை மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது எப்பொழுதும்.
வெள்ளை மற்றும் மென்மையான சருமம்
இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மற்றும் மீன் எண்ணெய் ஆகிய இரண்டும் அதிக அளவில் நிறைந்து இருக்கிறது.
அதனால் இந்த கொடுவா மீனை நீங்கள் உணவில் எடுத்துக் கொள்ளும் போது உங்களுடைய சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறும்.
எலும்பின் ஆரோக்கியம் மேம்படும்
Koduva meen 5 best health benefits list கொடுவா மீனில் துத்தநாகம், மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து, மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகமாக காணப்படுவதால்.
இதனை நீங்கள் எடுத்துக் கொள்ளும் போது உங்கள் உடலில் எலும்பு மற்றும் தசை வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
கண் பார்வை ஆரோக்கியம் மேம்படும்
Koduva meen 5 best health benefits list கொடுவா மீனில் இருக்கும் வைட்டமின் ஊட்டச்சத்து கண்பார்வை அதிகரிக்கும் மற்றும் கண்களில் எந்தவித குறைபாடு வராமல் பார்த்துக் கொள்ளும்.