Koottu patta piripathu eppadi useful tips 2022
கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவது எப்படி முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்..!
நம் தமிழ்நாட்டில் நிலம் சம்பந்தமான பிரச்சினைகள் என்பது அதிகமாக நிறைந்துள்ளது.
கூட்டு பட்டா, தனி பட்டா, சொத்து சம்பந்தமான ஆவணங்கள் தொலைந்து போதல்,வேறு ஒருவரின் பெயரில் நிலம் இருத்தல், என பல்வேறு வகையான பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
பொதுவாக கூட்டு பட்டாவில் நிலம் இருந்தால் சொத்து பிரச்சினை, நிலம் பிரச்சினை, மற்றும் நில எல்லை தகராறு போன்றவைகள் ஏராளமான பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும்.
அதனை சரி கட்டவே ஒருசிலர் கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டாவாக மாற்றிக் கொள்ள விரும்புவார்கள், ஆனால் சில சமயம் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் ஒரு நிலத்தின் உரிமையாளராக இருந்தால் கூட்டுபட்டா என்றழைக்கப்படும்.
ஆனால் ஒரே சர்வே எண் அல்லது இரண்டு சர்வே எண்களுக்கும் நிலங்கள் ஒட்டுமொத்தமாக தான் காட்டும்.
ஒருவருக்கு இந்த சர்வே எண் அல்லது ஒருவருக்கு மட்டும் குறிப்பிட்ட நிலங்களை பட்டாவில் காட்டாது.
கூட்டு பட்டா தனி பட்டா சரி செய்வது எப்படி
Koottu patta piripathu eppadi கூட்டு பட்டாவில் இருக்கும் ஒரு நபர் மட்டும் தனியாக பட்டா வாங்க வேண்டும் என்று நினைத்தால், அந்த சொத்தின் நகல் மற்றும் பாகப்பிரிவினை பத்திரம் கட்டாயம் வேண்டும்.
பாகப்பிரிவினை பத்திரம் எதற்கு என்றால் உங்களுக்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பார்கள்.
அந்த நிலம் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு என எந்த திசையில் இருக்கிறது, எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இதனை தவிர்ப்பதற்கு நிலம் சர்வேயர் கொண்டு உங்களுக்கான நிலங்களை அளந்து அதற்கு ஒரு வரைபடத்தை கொடுக்க வேண்டும்.
பிறகு தான் நீங்கள் இ சேவை மையம் அல்லது கிராம நிர்வாக அலுவலகம் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
கூட்டு பட்டா பிரிப்பது எப்படி
Koottu patta piripathu eppadi கூட்டு பட்டாவில் இருக்கும் இதர ஆட்கள் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று ஒரு கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டும்.
இதனை முதலில் கிராம நிர்வாக அலுவலர் (VAO) சரிபார்த்த பிறகு, தாசில்தார் சரிபார்த்த பிறகு தான். தனிப்பட்ட மாற்றிக் கொடுப்பார்கள்,இதர ஆட்களும் இதேபோல் செய்து அவர்களும் தனி பட்டாவாக மாற்றிக் கொள்ள முடியும்.
ஒருவேளை நீங்கள் கூட்டு பட்டாவில் இருக்கும் சொத்தை வாங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனென்றால் சொத்தை விற்கும் போது யார் யார் கூட்டு பட்டாவில் மற்றும் பத்திரத்தில் இருக்கிறார்களோ, அவர்கள் அனைவரின் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம், இதனை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.