8 வடிவ நடைப்பயிற்சி நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்(Learn about the benefits of 8 shaped walking)
ஒருவர் தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும் பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.
நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் 8 வடிவத்தில் நடப்பது மிகவும் சிறந்ததாக இருக்கும். இன்றைக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் பாதுகாப்பிற்காக அனைவரும் வீட்டில் இருக்கிறார்கள்.
மேலும் ஐடி வேலை செய்யக்கூடிய நபர்கள் இப்பொழுது பெரும்பாலும் வீட்டிலிருந்தே தங்களுடைய வேலையை செய்கிறார்கள்.
தொடர் நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியாத நபர்களுக்கு இந்த 8 வடிவ பயிற்சியை தங்கள் வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.
இந்த பயிற்சியை எளிமையாக காலை மற்றும் மாலை நேரங்களில் குறைந்தது 1 மணிநேரம் செய்து வந்தால் உங்களுடைய விரல்கள் இரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம்.
குறிப்பாக 70 வயது 50 வயதாக குறையும் முதுமை இளமையாக தோன்றும் சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும்.
உடல் குளிர்ச்சியால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல்கள், போன்ற வியாதிகள் குணமடையும் முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி வெளியேற்றுகிறது, இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் இருக்கும் சளி விலகுகிறது.
செவிகள் கேட்கும் திறன் அதிகமாகும், கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது, கண்ணாடி அணிபவர்கள் கண்ணாடியின் பாயிண்ட் அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது, 5 கிலோ பிராண வாய்வு உள்ளே செல்வதால் உடல் சக்தி பெறுகிறது.
தினமும் 8 நடைப்பயிற்சி செய்வதால் நீங்கள் ஆரோக்கியமாக வாழ முடியும். உடல் பருமன் இரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, கண் நோய்கள், மூக்கடைப்பு, தூக்கமின்மை, மூட்டுவலி, முதுகுவலி, மன இறுக்கம், தோல் நோய், மனப்பதட்டம், உடல் சுறுசுறுப்பு, உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுவது, போன்ற கொடிய நோய்கள்கூட மெல்ல மெல்ல பூரணமாக குணமாகி விடும்.
உடலிலிருந்து தேவையற்ற ஊளைச் சதைகள் குறைவதால் உங்களுடைய உடல் அழகாக தோற்றமளிக்கும் அதுமட்டுமில்லாமல் முகம் பளிச்சென்று மாறும் இதனால் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கலாம்.
இந்த 8 வடிவ நடை பயிற்சியை நீங்கள் காலையில் 5 மணிக்கு தொடங்கினாள் மிக மிக நல்லது ஏனென்றால் அதிகாலை 5 மணி சூப்பர் பவர் மணி நேரம் என்று யோகா செய்பவர்கள் சொல்வார்கள்.
இதற்கு காரணம் ஓசோன் மண்டலத்தில் இருக்கக்கூடிய காஸ்மிக் கதிர்கள் அதிக அளவில் பூமி வளிமண்டலத்தில் அதிக அளவில் அதிகாலையில்வ வந்தடையும்.
அந்த நேரத்தில் நீங்கள் இந்த 8 வடிவ நடை பயிற்சி செய்தால் பல்வேறான நன்மைகள் உங்கள் உடலுக்கு கிடைக்கும் இதை நீங்கள் காலப்போக்கில் உணரலாம்.
இரவு உணவு எடுத்த பிறகு 1மணி நேரம் நீங்கள் இந்த நடைப்பயிற்சி செய்தால் செரிமான பிரச்சனைகள் முழுமையாக நீங்கும் அது மட்டும் இல்லாமல் உடல் எடை கூடுவது முற்றிலும் தவிர்க்கப்படும் குறிப்பாக மன அழுத்தம் முற்றிலும் குறைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது இதனால் நீங்கள் நன்றாக தூங்கலாம்.
முகக்கவசம் அணிந்தால் வாய் துர்நாற்றம் அடிக்கிறதா.
தேவையற்ற விஷயங்களுக்கு உங்களுடைய நேரங்களை நீங்கள் செலவு செய்வதற்கு தினமும் குறைந்தது இந்த 8 வடிவ நடை பயிற்சிக்கு 2 மணி நேரம் ஒதுக்குங்கள்.
10 best foods to help increase blood flow
உங்கள் வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்கும் நீங்கள் அதிக அளவில் பணத்தை மருத்துவமனைக்கு செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படாது.இதனால் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்மகா உங்கள் வாழ்க்கையில் அமைந்துவிடும்.