LIC dhan rekha insurance plan full detail 2022
LIC dhan rekha insurance plan full detail 2022
வாழ்க்கையில் நல்லதொரு சேமிப்பை தொடங்க இதை பின்பற்றுங்கள்..!
எல்ஐசி நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய புதிய இன்சூரன்ஸ் திட்டம் தான் எல்ஐசியின் தான் ரேகா திட்டம்.
பெண்களுக்கு குறிப்பாக இந்த திட்டத்தில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளது, மேலும் மூன்றாம் பாலினத்தவர்கள் இந்த பாலிசியில் பயன் பெற்றுக் கொள்ள முடியும்.
இது தவிர இன்னும் பல சலுகைகளும் இந்த பாலிசியில் அடங்கியுள்ளன, அதனை பற்றி முழுமையாக இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த பாலிசியில் பாலிசிதாரரின் முதிர்ச்சியின் போது பாலிசி ஏற்கனவே பெற்ற எந்த தொகையும் கழிக்காமல் முழு காப்பீட்டுத் தொகையும் அவருக்கு வழங்கப்பட்டுவிடும்.
இந்த பாலிசியில் குறைந்த பட்சம் 2 லட்ச ரூபாய் முதலீடு செய்து கொள்ளமுடியும், அதிகபட்ச வரம்பு என்பது இல்லை, இந்த திட்டத்தில் சேர குறைந்தபட்சம் வயது 90 நாட்கள் முதல் அதிகபட்சம் 35 வயது.
பாலிசியின் வகைகள்
இந்த பாலிசியில் 20 ஆண்டுகள், 30 ஆண்டுகள்,40 ஆண்டுகள் என மூன்று வகையான பாலிசி வசதி இருக்கிறது, இதில் உங்களின் தேவைக்கு ஏற்ப பிரீமியம் மற்றும் ஆண்டினை தேர்வு செய்து கொள்ள முடியும்.
இந்த பாலிசியில் 20 வருட பாலிசியில் 10 வருட பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.
30 வருட பாலிசியில் 15 வருட பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.
40 வருட பாலிசியில் 20 வருடம் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.
என்னென்ன சலுகைகள் இருக்கிறது
இந்த திட்டத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடக்கம் முதல் கொண்டு இறுதி வரையில் குறிப்பிட்ட தொகை கிடைக்கும் எனினும் முதிர்ச்சியின் போது.
இதனை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் முழு காப்பீட்டுத் தொகையும் பாலிசிதாரருக்கு கிடைக்கும்.
தனிநபருக்கு இந்த பாலிசியில் முதலீடு செய்யப்படும் தொகையை விட சுமார் 125 சதவீதம் வரையில் பணம் வழங்கப் படலாம், அல்லது முதலீட்டு தொகையில் 7% இருக்கலாம் இவை இரண்டில் எது அதிகமோ அதை வழங்கப்படும்.
மற்ற என்ன பலன்கள் இருக்கிறது
பாலிசிதாரர் ஒருவேளை துரதிஷ்டவசமாக உயிரிழந்தாள் மொத்த முழு தொகையும் பெறாமல் அடுத்த 5 ஆண்டுகளில் காப்பீட்டுத் தொகையும்.
பிற தொகையும் தவணை முறையில் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை எல்ஐசி நிறுவனம் இந்த திட்டத்தில் செய்துள்ளது.
முதலீட்டாளர்களுக்கு ஏற்ற 6 சிறந்த திட்டங்கள்
ஒற்றை பிரீமியம் அல்லது லிமிடெட் பிரீமியத்தின் வரையறை காலம் 10 ஆண்டுகள், 15 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் வரை வழங்கப்பட்டுள்ளன.
Bank or Private house Loan full details 2022
குறைந்தபட்சம் உத்தரவாதத் தொகை 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும், அதிகபட்ச உத்தரவாதத் தொகை என்பது நிர்ணயிக்கப்படவில்லை.
இந்த திட்டத்தின் காலம் வரை இதற்கு ஏற்ப வயது, வரம்புகள், மாறுபடும்.