List of 7 best health benefits of mustard oil
கடுகு எண்ணெயின் சிறந்த ஆரோக்கிய நன்மைகளின் பட்டியல்
இந்தியா என்றாலே சற்று வித்தியாசமான நாடு இந்த உலகில், அதிலும் குறிப்பாக சமையல் என்றால் மற்ற உலக நாடுகளை விட பல்வேறு வகையான வித்தியாசங்களை காணலாம்.
இந்தியர்களின் சமையலில் எப்பொழுதும் முதன்மை வகிப்பது மசாலாப் பொருட்கள் தான்.
மசாலாப் பொருட்கள் பண்டைய காலங்களில் இருந்து தொன்றுதொட்டு சமையலில் இருந்து வருகிறது, இந்தியா முழுவதிலும் உள்ள பல மொழி பேசும் மக்கள்.
ஒரே மாதிரியான மசாலா பொருட்களை பயன்படுத்துகிறார்கள் என்பது ஒரு தனி சிறப்பாக இருக்கிறது.
குறிப்பாக வடகிழக்கு இந்தியாவில் அதிக அளவில் கடுகு எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது, குளிர்ச்சியை குணப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், சருமத்திற்கு ஊட்டமளிக்கும் பயன்படுத்தப்படுகிறது.
குளிர்காலத்தில் கடுகு எண்ணெயுடன் மசாஜ் செய்து சூரிய ஒளியில் குளிக்கும் குழந்தைகளுக்கு வைட்டமின் டி ஊட்டச்சத்து கிடைக்கிறது.
அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள்
கடுகு எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால்.
இது இதய ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியமாகும், மேலும் சருமத்தை ஒளிரச் செய்கிறது, தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது, முடி நரைப்பதை தடுக்கிறது.
இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
கடுகு எண்ணெயில் சூரியகாந்தி எண்ணெயை விட மோனோ சாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பதால் இது ரத்தத்தில் கொழுப்பு அளவை குறைக்கிறது மற்றும் கட்டுப்படுத்துகிறது மேலும் இரத்த சுழற்சிக்கு உதவுகிறது.
தொற்று நோய்க்கு எதிராக பாதுகாக்கிறது
கடுகு எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு போன்ற பண்புகள் நிறைந்துள்ளன.
அதன் வெளிப்புற மற்றும் உள் பயன்பாடு செரிமான பாதை நோய் தொற்றுகள், உட்பட தொற்று நோய்களுக்கு எதிராக போராட, பல வழிகளில் உதவுகிறது.
இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது
ஆயுர்வேத மருத்துவத்தின் படி கடுகு எண்ணெயை பயன்படுத்தி மசாஜ் செய்தால், உடலில் ரத்த ஓட்டம், தோல் அமைப்பு மற்றும் சுருக்கத்தை குணப்படுத்துகிறது.
இது வியர்வை சுரப்பிகளை செயல்படுத்துகிறது, மற்றும் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது, எனவே இது இயற்கையான சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது.
தோலுக்கு நல்லது
health benefits of mustard oil கடுகு எண்ணெயில் வைட்டமின்-இ ஊட்டச் சத்து நிறைந்துள்ளது, இது சருமத்திற்கு தேவையான ஊட்டச் சத்தாகும், இதனை மசாஜ் செய்தால் தோலில் இருக்கும் தேவையற்ற கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைக்கிறது,மேலும் ஒரு சன்ஸ்கிரீன்யாக செயல்படுகிறது.
இருமல் மற்றும் சளியிலிருந்து நிவாரணம்
health benefits of mustard oil இருமல் மற்றும் சளி சிகிச்சைக்கு கடுகு எண்ணெய் ஒரு பழங்கால மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது,கடுகு எண்ணெய் சூடு காரணமாக சுவாசக் குழாயில் இருக்கும், தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது.
முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
வட இந்தியாவில் உள்ள மக்கள் தங்கள் தலைக்கு கடுகு எண்ணெயை பயன்படுத்துகிறார்கள், இது ஒரு பழைய காலத்து நடைமுறை.
கடுகு எண்ணெயில் பீட்டா கரோட்டின் உள்ளது, இது உச்சந்தலையில் மசாஜ் செய்யும் போது முடி வளர்ச்சிக்கு சிறந்தது.
இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, மேலும் அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், உச்சந்தலையில் நோய்தொற்று ஏற்படுவதை தடுக்கிறது.