மதுரை ஆவின் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.(Madurai aavin new job announced 2021)
மதுரை ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
மேலும் 01/03/2021 தேதியில் நேர்காணல் நடைபெறவுள்ளது விருப்பம் உள்ள நபர்கள் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | ஆவின் மதுரை |
மொத்த பணியிடங்கள் | 05 |
பணியின் பெயர் | கால்நடை ஆலோசகர் |
நேர்காணல் முறை | interview |
நேர்காணல் தேதி | 01/03/2021 |
காலிப்பணியிடங்களை பற்றிய விவரங்கள்.
Veterinary Consultant. கால்நடை ஆலோசகர் பதவிக்கு 5 பணியிடங்கள் காலியாக உள்ளது என்று மதுரை ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வயது வரம்பு
அதிகபட்சம் 50 வயதுக்குள் இருக்க வேண்டும் 01/03/2021 தேதியின்படி மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டு உள்ள தளவுர்களை பற்றி தெரிந்துகொள்ள ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
கல்வித்தகுதி.
மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் B.V.Sc பட்டம் படித்திருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்.
மதுரை ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு குறைந்தபட்சம் 30 ஆயிரம் முதல் அதிகபட்சம் 43 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை.
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் 01/03/2021 தேதியன்று
விண்ணப்பிக்கும் முறை.
இந்த பணியிடங்களுக்கு விருப்பம் தகுதியுடைய நபர்கள் தங்களது கல்வி சான்று அனுபவ சான்று மற்றும் 2 புகைப்படங்களுடன் நேர்காணல் நடைபெறும் தேதியன்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
5 Best tips prevent white hair and hair damage
Junior Executive and extension officer ஆவின் மதுரை 2021 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு.
மதுரை ஆவின் நிறுவனம் 2021 ஆம் ஆண்டுக்கான Junior Executive and extension officer வேலை வாய்ப்பினை அறிவித்துள்ளது மொத்த காலிப்பணியிடங்கள் 10 இந்த பணியிடங்களுக்கு விருப்பம் தகுதியுடைய நபர்கள் 03/03/2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | மதுரை ஆவின் |
பணியின் பெயர் | Junior Executive and extension officer |
மொத்த பணியிடங்கள் | 10 |
விண்ணப்பிக்கும் தேதி | 03/03/2021 |
விண்ணப்பிக்க முறை | offline |
காலிப்பணியிடங்கள்.
Junior Executive and extension officer வேலை வாய்ப்பினை அறிவித்துள்ளது மொத்த காலிப்பணியிடங்கள் 10
கல்வித்தகுதி.
குறைந்தபட்சம் ஏதோ ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் எம்பிபிஎஸ் எஸ்ஸில் 10 ஆண்டுகள் சேவை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் விவரம்.
விரிவாக்க அலுவலர் ரூபாய் 20600-65500
இளநிலை செயலாளர் ரூபாய் 19500-62000
விண்ணப்ப கட்டணம்.
OC/MBC/DNC/BC விண்ணப்பதாரருக்கு ரூபாய் 250/-
SC/ST/SCA/ விண்ணப்பதாரருக்கு ரூபாய் 100/-
தேர்வு செய்யும் முறை.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று மதுரை ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை.
இந்த பதவிகளுக்கு விருப்பம் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 03/03/2021 தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
TNEB Field Assistant 2021 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பினை பெரிய அளவில் அறிவித்துள்ளது.
பொது மேலாளர் மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட் சிவகங்கை சாலை மதுரை 625020.