மகேந்திரா தார் எஸ்யூவி ( Mahindra thar suv new model 2020 in Tamil)
மகேந்திரா தார் எஸ்யூவி பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போது முற்றிலும் புதிய அவதாரத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. புதிய தலைமுறை மாடல் மகேந்திரா கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று முதல்முறையாக பொதுப்பார்வைக்கு கொண்டுவரப்பட்டது. மகேந்திரா நிறுவனம் அக்டோபர் இரண்டாம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்தது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மகேந்திரா தார் எஸ்யூவி இந்தியாவில் இன்று அதனுடைய விற்பனையை தொடங்கியது.2020 மகேந்திரா தார் எஸ்யூவில் , புதிய பம்பர், ரி-டிசைன், செய்யப்பட்டு கிரில் 18 இன்ச் அலாய்வீல்கள் மற்றும் புத்தம் புதிய டெயில்லைட்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மகேந்திரா நிறுவனத்தில் இருந்து வெளிவரும் தார் எஸ்யூவி பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஆப்ரோடு எஸ்யூவியாக திகழ்ந்து வருகிறது. பழைய தலைமுறை மாடல் உடன் ஒப்பிடும்போது மகேந்திர நிறுவனம் பல்வேறு தொழில்நுட்பரீதியான மாற்றங்களை செய்துள்ளது.
6 இருக்கைகள் மற்றும் 4 இருக்கைகள் என இரண்டு வகையான அமைப்புகளுடன் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி வெளியிடப்பட்டுள்ளது.
மகேந்திரா தார் எஸ்யூவில் AX, AX ஆப்ஷனல், LX என மொத்தம் மூன்றும் மாடல்களை மகேந்திரா நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. புதிய தலைமுறை மாடல்களில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை மகேந்திரா நிறுவனம் வழங்கியுள்ளது.
Best sales bike in India 2020 in Tamil
2020 மகேந்திரா தார் எஸ்யூவில் 7 இன்ச் டச்ஸ்கிரீன், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் வாட்ச்கனெக்டிவிடி, கி-லெஸ், எண்ட்ரி, க்ருஸ் கண்ட்ரோல், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட், கன்சோல்மல்டி இன்பர்மேஷன், டிஸ்ப்ளே ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் மற்றும் ஆப்பிள்கார்பிளே வசதிகளுடன் ஏழு இன்ச்டச் ஸ்கிரீன் சிஸ்டம் இடம்பெற்றுள்ளன.
ஸ்டீயரிங் வீலில் பல்வேறு கட்டுப்பாட்டுகளுக்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. முன்பகுதியில் 2 ஏர்பேக்குகள் ஏபிஎஸ், இஎஸ்பி, ஹில் ஹோல்ட் கட்டுப்பாடு மற்றும் ஹில் டெஸெண்ட் கண்ட்ரோல் டேஷ்போர்டு முற்றிலும் புதிய வகையில் டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இன்ஜின் மாடல்கள் மற்றும் டிரன்ஸ்மிஷன் சிஸ்டம்.
2.0 டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 152 ஹச்பவர் 320 என்எம் டார்க் ஆற்றலை வெளியிட கூடியது. மற்றும் 2.2 டர்போ டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 132 ஹச்பவர் 300 என்எம் டார்க் திறனை உருவாக்கும்
6 ஸ்பீடு மேனுவல் அதே நேரத்தில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரன்ஸ்மிஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மஹிந்திரா தார் எஸ்யூவி இதுவரைக்கும் அப்ரோடு பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய மாடல் ஆகவே இருந்தது தற்போது வெளியிடப்பட்டிருக்கும் புதிய தலைமுறை தார் எஸ்யூவி சாதாரண சாலைகள் மற்றும் தினசரி பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா தார் எஸ்யூவியின் AX மாடலின் விலை 9.80-10.85 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது,AX ஆப்ஷனல் மாடலின் விலை 11.90-12.20 லட்ச ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படும், LX மாடலின் விலை 12.49-13.75 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். twitter,