Manapen Alangaram new design in tamil 2022
நமது கலாச்சாரத்தில் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஜடை அலங்காரம் செய்வது என்பது வழக்கமாகவே இருக்கிறது.
மணப்பெண் அலங்காரத்தில் பூக்கள், தங்க ஊசிகள், முத்து மணிகள், போன்றவையும் சேர்க்கப்படுகிறது.
மணப்பெண் அலங்காரத்தில் பூச்சாடை அலங்காரமே சிறந்ததாக இருக்கிறது, மணப்பெண்ணை தேவதை போல அழகுபடுத்த ஜடை அலங்காரம் முக்கியத்துவம் பெறுகிறது.
இதில் இரண்டு வகையான அலங்காரங்கள் இருக்கிறது வளை ஜடை அலங்காரம், பொம்மை ஜடை அலங்காரம்
பொம்மை ஜடை அலங்காரம்
ஏற்கனவே தயாராக வைத்திருக்கும் சடையை வாங்கி வந்து மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வார்கள்.
பூக்கட்டும் தாய்மார்கள் வாழைப்பட்டையில் மல்லிகை, கனகாம்பரம், தாழம்பூ, ரோஜா பூ, ஊசிமல்லி, குண்டுமல்லி, என்று பல மலர்கள் பல கொண்டு ஊசி நூலால் தைத்து விற்பார்கள் அந்தக்காலத்தில்.
சிலவேளைகளில் உலர் கொட்டைகள்(Dry Nuts) கொண்டு கூட ஜடை அலங்காரம் செய்யப்படுகிறது.
இன்றைய பெண்களின் விருப்பமாக இருக்கிறது, கலாச்சார பெருமைகள் நிறைந்த தமிழகத்தில் ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயங்களைக் கூட அழகும் ரசனையும் அதிக அளவில் ஏற்படுத்தப்படுகிறது.
வளை ஜடை அலங்காரம்
தமிழ் கலாச்சாரத்தில் வீட்டில் எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் அதற்கு சீமந்தம் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
சீமந்தம் எனில் முதலில் பெண்ணின் சடை அலங்காரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது வளைகாப்பு நடத்தும் போது இது அதிகளவில் பார்க்கப்படுகிறது.
மேலும் அந்தப் பெண் சவுகரியமாக இருப்பதற்கு ஏற்ப அலங்காரமும் செய்யப்படுகிறது.
எனவே எடை குறைவாகவும் குறைவான எளிமையான அலங்காரம் செய்யப்படுகிறது, குறிப்பால் உணர்த்தும் வகையில் வளையல் கொண்டு சடை அலங்காரம் செய்பவர்களும் இருக்கிறார்கள்.
கணையப் புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது அதன் அறிகுறிகள் என்ன..!
மணப்பெண் அலங்காரம், மஞ்சள் நீராட்டு விழா, பிறந்தநாள் விழா, வீட்டில் விசேஷம், ஊர் திருவிழா, என பல விசேஷங்களுக்கு பெண்களுக்கு அதிக அளவில் ஜடை அலங்காரம் எப்பொழுது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியமாக பண்டைய காலத்திலிருந்து இது பின்பற்றப்படுகிறது.
Patta Name Transfer Online new in tamil 2022
அலங்காரம் செய்யும் போது பெண்ணின் உயரம், பருமன், கழுத்தின் உயரம், போன்றவற்றைக் கணக்கிட வேண்டும்.
குட்டையான பெண்களுக்கு சற்று தூக்கியவாறு கொண்டையும், நீளமான கழுத்துள்ள பெண்களுக்கு, கழுத்தை மறைக்கும் அளவில் கொண்டையை, போட வேண்டும்.