Mango ripened with Carbide stone best 3 tips
கார்பைடு கல்லால் பழுக்க வைத்த மாம்பழமா கண்டுபிடிக்க எளிய சில குறிப்புகள்..!
நாடு முழுவதும் இந்த கோடைகாலத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது, இதனைப் பயன்படுத்தி சில சமூக விரோதிகள் தவறான முறையில் மாம்பழத்தை பழுக்க வைப்பதால்.
அதை சாப்பிடும் மக்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்,தி வயிற்று வலி, வயிறு சம்பந்தமான, பல்வேறு வகையான உடல் உபாதைகள் ஏற்படுகிறது.
கோடைக்காலம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது மாம்பழம் தான் அதிலும் தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் விளையும் மாம்பழங்கள் தனி சுவை கொண்டவை.
இது ஒருபுறம் என்றால் மாம்பழ சீசனில் இவற்றை முந்தி விற்பனை செய்வதற்காக அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசைக்காக சில வியாபாரிகள் கார்பைடு கல் கொண்டு மாங்காய்களை செயற்கையாக பழுக்க வைத்த விற்பனை செய்கிறார்கள்.
உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்
இந்த மாம்பழங்களை வாங்கி சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும் என்பதால் இந்த முறையில் பழுக்க வைப்பதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
ஆனாலும் குறுகிய காலத்தில் விற்று அதிகமாக லாபம் பார்க்க வேண்டும், என்பதற்காக காய்களை செயற்கையாக பழுக்க வைக்கும், வியாபாரிகள் சிலர் மக்களின் உயிரோடு விளையாடுகிறார்கள்.
கார்பைடுக்கு மாற்று
மாம்பழங்களை இயற்கையான முறையில் பழுக்க வைக்க பல்வேறு இயற்கை உத்தி வழிகள் இருக்கிறது, இது குறித்து மதுரை வேளாண் அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம் உதவி பேராசிரியர் வள்ளல்கண்ணன் கூறியதாவது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் எத்திரல் வளர்ச்சி ஊக்கியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பெயரில் பல்வேறு நிறுவனங்கள் திட மற்றும் திரவ வாயு தயாரிக்கின்றன வாழைப்பழத்திற்கு மாம்பழத்திற்க்கும் இதனை பயன்படுத்தலாம் இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.
பழுக்க வைப்பது எப்படி
Mango ripened with Carbide stone ஒரு லிட்டர் தண்ணீரில் 100 மில்லி கிராம் கலந்து அதில் ஒவ்வொரு மாம்பழத்தையும் 10 வினாடி மூழ்க வைத்து எடுத்தால் 2 நாட்களில்.
இயற்கை முறையில் பழுத்துவிடும் சதைப்பகுதி பழமாகிவிடும் உடலுக்கு கெடுதல் இல்லை இதை பயன்படுத்துவது நல்லது என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
கண்டுபிடிப்பது எப்படி
Mango ripened with Carbide stone அதே நேரத்தில் நீங்கள் வாங்கும் மாம்பழம் கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்கள் இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டால்.
அதனை அறுத்து பார்க்கவும் பழத்தின் தோல் மஞ்சள் நிறத்திலும் உள்ளே சதைப் பகுதி வெள்ளை நிறத்திலும் இருந்தால், அந்த பழம் கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்தது எனவே அதை சாப்பிட வேண்டாம்.
அதன்பிறகு இதைப்பற்றி நீங்கள் மாவட்ட உணவு கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு புகார் அளிக்கலாம் நீங்கள் எங்கு மாம்பழம் வாங்கினீர்கள் அதைப்பற்றி.