Marachekku oil business full details 2021
நண்பர்களுக்கு வணக்கம் இன்றைக்கு நமது இணையதளத்தில் தினமும் குறைந்தது 3,000 முதல் 5,000 ரூபாய் வரை நஷ்டம் இல்லாமல் லாபம் கிடைக்கும் எண்ணெய் தயாரிப்பு தொழிலை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம்.
இந்த சிறிய தொழில் செய்வதற்கு தேவைப்படும் மூலப் பொருட்கள் இயந்திரம் பற்றிய முழு விவரங்களையும் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது.
சமையலில் முதன்மையாக இருப்பது எண்ணெய் அதிலும் செக்கு எண்ணெய் என்றால் அனைவரும் விரும்பக் கூடியதாக இருக்கிறது ஏனென்றால் செக்கு எண்ணெய் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறது.
அதனால் அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது, இதனால் எந்த ஒரு தீய விளைவுகளும் உடலுக்கு அதிகமாக ஏற்படாது.
இந்த செக்கு எண்ணெய் தொழில் நஷ்டம் இல்லாமல் எப்படி தொடங்கி அதிக லாபத்துடன் தொழிலை மேற்கொள்ளலாம் என்று விரிவாக இப்பொழுது பார்க்கலாம்.
இயந்திரம்
செக்கு எண்ணெய் தயாரிக்கும் தொழில் செய்ய முடிவு செய்தால் முதலில் நீங்கள் தேர்ந்தெடுக்க கூடியது தானியங்கி இயந்திரத்தை தான்.
இந்த இயந்திரத்தில் எண்ணெய் தயாரிக்கும் பொழுது. மூலப்பொருட்கள் அந்த இயந்திரத்தின் நடுப்பகுதியில் அதிக அளவில் சேர்ந்து விடாமல் செய்தால் போதும்.
நீங்கள் விலை குறைவாக இருக்கிறது என்று தரம் குறைந்த இயந்திரத்தை வாங்கினால் உங்களுக்கு தொழில் செய்யும்போது பல்வேறு தொல்லைகள் ஏற்படும் அதனால் இயந்திரம் வாங்குவதற்கு முன்பு ஆட்டோமேட்டிக் இயந்திரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த இயந்திரத்தின் விலையானது குறைந்த பட்சம் 1 லட்சம் முதல் அதிகபட்சம் 3 லட்சம் வரை இதனை நீங்கள் இணையதளம் மூலம் வாங்கலாம் அல்லது கோயம்புத்தூரில் நேரடியாக ஆர்டர் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் இதற்கு பல்வேறு தொழிற்சாலைகள் அதிக அளவில் கோயமுத்தூரில் இயங்கி வருகிறது.
தோராயமான செலவுகள்
இந்தச் செக்கு எண்ணெய் தயாரிப்பு தொழில் பொருத்தவரை வேலையாட்கள் 1 நபர் இருந்தால் போதுமானது,மாதச் சம்பளம் குறைந்தபட்சம் 10,000 என்று வைத்துக் கொண்டாலும் அடுத்த மின்சாரம் சம்பந்தமான செலவுகள் மாதத்திற்கு 25,000 முதல் 35,000 வரை இதற்கு செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைவரும்.
இதற்கு தேவையான மூலப்பொருட்கள்
நீங்கள் என்ன மாதிரியான எண்ணெய் தயாரிக்கப் போகிறார்கள் அதற்கேற்றார்போல் மூலப்பொருட்கள் வேண்டும் உதாரணமாக கடலை எண்ணெய் தயாரிக்க முடிவு செய்தால் அதற்கு வேர்கடலை தேவைப்படும்.
தேங்காய் எண்ணெய் தயாரிக்க முடிவு செய்தால் உலர்ந்த தேங்காய் அதற்கு அதிக அளவில் தேவைப்படும், உங்களுடைய பொருளுக்கு ஏற்றவாறு விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம்.
விற்பனை முறை சரியாக இருக்க வேண்டும்
நீங்கள் இரண்டு விதமாக விற்பனை செய்யலாம்
சொந்தமாக நீங்களே இரண்டுக்கும் மேற்பட்ட இயந்திரங்கள் வைத்து எண்ணெய் எடுத்து வெளியில் விற்பனை செய்யலாம்.உங்களைத் தேடி வருபவர்களுக்கு எண்ணெய் தயாரித்துக் கொடுக்கலாம் ஒரு சேவை மாறியும் இதனை செய்யலாம்.
இன்னொரு முறை நீங்களே எண்ணெய் தயாரித்து அதிக அளவு உற்பத்தி செய்து உங்களுடைய தொழிலுக்கு என்று தனியாக ஒரு பெயர் உருவாக்கி உங்களுடைய மாவட்டத்தில் அதிக அளவில் நேரடியாக உணவு சம்பந்தமான தொழில் செய்பவர்களுக்கு விநியோகம் செய்யலாம், இந்த முறை உங்களுக்கு அதிக அளவில் பணத்தை கொடுக்கும்.
தொழில் லாபம் முறை
தோராயமாக கடலை எண்ணெய் 20 கிலோவிற்கு 10 லிட்டர் எண்ணெய் கிடைக்கும்.
20 கிலோவிற்கு சராசரியாக ரூபாய் 1,500 முதல் 2,000 ரூபாய் வரை செலவாகும்.
சந்தை நிலவரம்
இப்பொழுது இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்க்கு அதிக அளவில் வரவேற்பு இருக்கிறது 1 லிட்டருக்கு குறைந்தபட்சம் 300 முதல் அதிகபட்சம் 450 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த செக்கு எண்ணெய் மொத்த விற்பனைக்கு ரூபாய் 250 முதல் 280 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
செக்கு எண்ணெய் தயாரிப்பு தொழிலை மொத்தம் விற்பனை செய்வதோடு இல்லாமல் வாடிக்கையாளர்களை அதிகளவில் தக்க வைத்து அதன் மூலம் தொழில் துவங்கினால் தினமும் அதிக லாபம் அடைய முடியும்.
குறிப்பாக சிறிய அளவில் மட்டும் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்யாமல் பல இடங்களில் உங்களுடைய எண்ணெய் விற்பனை செய்வதற்கு நீங்கள் ஒரு சரியான ஏற்பாடு செய்தால் அதிக லாபத்தை பெற முடியும்.
குறைவான முதலீட்டில் எந்த ஒரு நஷ்டமும் ஏற்படாமல் நீங்கள் தொழில் செய்ய வேண்டும் என முடிவு செய்தால், புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த தொழிலை தாராளமாக தொடங்கி நிறைய லாபம் பெற முடியும்.
வேர்க்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்
உங்களுடைய மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையத்தில் இலவசமாக பல்வேறு வகையான தொழில் பயிற்சி மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து நடத்துகிறது.
Click here to view our YouTube channel
அதற்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும் விண்ணப்பித்து விட்டு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதத்தில் உங்களுக்கு அழைப்பு வரும் அந்த அழைப்பு மூலம் இலவசமாக உங்களுக்கு பிடித்தமான தொழிலுக்கு பயிற்சி பெறலாம்.
karpuravalli leaf amazing 5 benefits list
இதற்கு நீங்கள் எந்த ஒரு முன் பணம் கட்ட தேவையில்லை அது மட்டுமில்லாமல் மதிய உணவு தேநீர் போன்றவையும் அங்கு இலவசமாக வழங்கப்படுகிறது.