March get ready to pay more money 2022
பர்ஸை பதம் பார்க்க வரும் மார்ச் மாதம் நடுத்தர குடும்பங்களின் நிலை என்ன..!
இந்தியாவில் ஏற்கனவே பணவீக்கம் மற்றும் உற்பத்தி பொருட்களின் விலை கடுமையான அதிகரிப்பால் மக்களுக்கு தேவையான அடிப்படை பொருட்கள் அனைத்தும் விலை அதிகரிப்பால் இருக்கிறது.
இதேவேளையில் மக்களுக்கு புதிய நெருக்கடி இப்பொழுது உருவாகியுள்ளது, அது என்னவென்றால் ரஷ்யா உக்ரைன் போர்.
இதன் மூலம் மார்ச் மாதம் நடுத்தர மக்களின் குடும்பத்தில் மிகப் பெரிய பட்ஜெட் துண்டு விழும் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் நுகர்வோர் சந்தையும் கடுமையாக பாதிக்கப்படும்.
நாட்டின் ஒட்டுமொத்த வர்த்தகமும் பாதிக்கப்பட்டு மோசமான நிலைக்கு செல்லும் வாய்ப்பு இருக்கிறது.
இது வெறும் விலைவாசி மட்டுமில்லாமல் வேலைவாய்ப்பில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சமையல் எண்ணெய் நிலவரம்
இந்தியா உக்ரைன் நாட்டில் இருந்து அதிகப்படியான சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்து வரும் நிலையில் இப்பொழுது ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து உள்ள காரணத்தால்.
ஏற்கனவே ஆடர் செய்யப்பட்ட சூரிய காந்தி எண்ணெய் மற்றும் புதிய ஆடர் செய்யப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ளது.
உக்ரைன் நாட்டில் இப்போது அனைத்து நிறுவனங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது, மக்கள் நாட்டை விட்டு அவசர அவசரமாக வெளியேறி வரும் நிலையில் ஆடர் செய்யப்பட்ட சமையல் எண்ணெய் இந்தியாவுக்குக் கிடைக்க இப்பொழுது வாய்ப்பு இல்லை.
இதனால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை மார்ச் மாதத்திலிருந்து மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என்பது உண்மை.
பாமாயில் விலை ஏற்றம்
இப்பொழுது பாமாயில் விலை ஏற்கனவே சிங்கப்பூர் சந்தையில் அதிகரித்துள்ளது, சூரியகாந்தி எண்ணெய் வருகை எண்பது குறைவதாலும், சமையல் எண்ணெய் விலை ஒரு லிட்டர் கட்டாயம் 200 ரூபாயை தாண்டும்.
ஆழ்துளை கிணறு அமைக்க 50% தமிழக அரசு மானியம்.
உற்பத்தி பொருட்கள் பாதிக்கப்படும்
இதேபோல் உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக அலுமினியம், ஸ்டீல், பிளாஸ்டிக், ஆகியவற்றின் மூலப்பொருட்களின் விலை பணவீக்கம் ஆகியவற்றின் காரணமாக விலை தாறுமாறாக உயர தொடங்கியுள்ளது.
இதனால் இந்த 5 பொருட்களை நம்பி இருக்கும் அனைத்து துறைகளும் பாதிக்கப்படும்.
what are the amazing benefits of cashew 2022
இதன்மூலம் ஏசி, பிரிட்ஜ், கார், டிவி, போன்ற அனைத்துப் பொருட்களின் விலை மீண்டும் ஒரு முறை இந்த ஆண்டு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதற்கான அறிவிப்பை விரைவில் ஆட்டோமொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் அறிவிக்கும்.
கச்சா எண்ணெய் விலை உயரும்
ரஷ்யா உக்ரேன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கட்டாயம் உயரும் நிலை இருப்பதால் போக்குவரத்து செலவுகள் மூலம் அனைத்து விற்பனைப் பொருட்களும் மார்ச் மாதம் முதல் விலை அதிகரிக்கும் இதனால் நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.