Marriage assistance scheme full details 2022
திருமண உதவி தொகை பெறுவது எப்படி 2022
தமிழக அரசு பெண்களின் நலன் கருதி பல்வேறு வகையான சிறந்த திட்டங்களை நடைமுறை செய்து வருகிறது.
அந்த வகையில் ஏழை எளிய பெண்களின் திருமணத்திற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு வகைகளில் நிதி உதவி அளிக்கிறது.
அதாவது தமிழ்நாட்டில் உள்ள ஏழை பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்கமும் 25,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை திருமண உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டங்களில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் எப்படி இந்த திருமண உதவித்தொகை பெறலாம் என்பதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழக அரசின் திருமண உதவி தொகை திட்டம் விவரங்கள்
1 மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதி உதவி திட்டம்.
2 டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவி திட்டம்.
3 அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் நிதியுதவித் திட்டம்.
4 டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம்.
5 ஈ வே ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் நிதியுதவித் திட்டம்.
கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை எளிய பெண்களின் திருமணத்திற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு வகையான நிதி உதவி வழங்குகிறது.
குறிப்பாக பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
ஏழைப் பெண்களின் பெற்றோருக்கும் நிதி உதவி வழங்குவது பெண் கல்வி நிலையை உயர்த்தும்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டத்தின் முழு நோக்கம்.
இரண்டு வகையான திட்டங்கள் உள்ளன
அதாவது இந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் பெறுவதற்கு பெண்கள் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
அந்தப் பெண்களுக்கு ரூபாய் 25,000 உதவியுடன் 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது.
அதேபோல் பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் திருமணத்திற்கு ரூபாய் 50,000 உதவித் தொகையும் 8 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படுகிறது.
வயது நிபந்தனை என்ன
திருமணம் செய்து கொள்ளும் பெண்ணிற்கு குறைந்த பட்சம் 211 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும், ஆணுக்கு 21 வயதும் பூர்த்தி அடைந்திருக்க வேண்டியது அவசியம்.
நிபந்தனைகள் தகுதிகள் என்ன
மணப்பெண் 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்திருக்கலாம் தனியார் தொலைநிலைக் கல்வி மூலம் படித்திருந்தால் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்து இருக்கவேண்டும் கட்டாயம்.
பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக்கல்வி மூலமாகவோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழகங்களில் படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
பட்டயப் படிப்பு எனில் தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
ஆண்டு வருமானம் எவ்வளவு
72,000/-ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் இருக்கக்கூடாது ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும்.
மணமகளின் தாய் அல்லது தந்தை பெயரில் உதவித்தொகை வழங்கப்படும் பெற்றோர் இல்லையெனில் மணமகள் பெயரில் உதவித்தொகை வழங்கப்படும்.
திருமண உதவித்தொகை பெற தேவையான ஆவணங்கள் என்ன
பள்ளி மாற்றுச் சான்றிதழ்
திருமண அழைப்பிதழ் நகல்
வருமானச் சான்றிதழ்
பட்டப்படிப்பு அல்லது பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்
10ம் வகுப்பு படித்தவர்களாக இருந்தால் 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
பாஸ்போர்ட் அளவில் உள்ள ஒரு புகைப்படம்
ரேஷன் கார்டு நகல் ஒன்று
மேலே தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களையும் விண்ணப்பத்துடன் இணைத்து திருமணம் நடப்பதற்கு முன்பு 40 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவி திட்டம்
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன
தமிழகத்தில் கலப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்தி பிறப்பு அடிப்படையிலான ஜாதி, இன, வேறுபாட்டை, அகற்றி தீண்டாமை எனும் கொடுமையை ஒழிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
திட்டம் 1
25,000/-ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கம் நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் ரூபாய் 15,000/- காசோலையாகவும் 10,000/- ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
திட்டம் 2
50,000/- ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கம் நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் ரூபாய் 30,000/- காசோலையாகவும் 20,000/- ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
நிபந்தனைகள் மற்றும் தகுதிகள் என்ன
புதுமணத் தம்பதியரின் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருந்து பிற இனத்தவரை திருமணம் செய்து கொண்டால் நிதி உதவி வழங்கப்படும்.
புதுமண தம்பதிகளில் ஒருவர் முற்பட்ட வகுப்பினராகவும் மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்தால் நிதிஉதவி வழங்கப்படும்.
கல்வித் தகுதி என்ன
திட்டம் 1
இதற்கு கல்வி தகுதி தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது
திட்டம் 2
பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக்கல்வி மூலமாகவோ அல்லது மத்திய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கவேண்டும்.
பட்டயப் படிப்பு எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
வருமான வரம்பு இல்லை விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு திருமணம் முடிந்து 2 வருடங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த திட்டத்திற்கு தேவையான சான்றிதழ்கள்
மணமகன் அல்லது மணமகளின் சாதிச் சான்றிதழ்கள் மணப்பெண்ணின் வயதுச் சான்றிதழ்
பட்டய படிப்பு / பட்டப்படிப்பு தேர்ச்சி சான்றிதழ்
ஆதார் அட்டை
வங்கி கணக்கு புத்தகம் நகல்
திருமண பத்திரிகை அல்லது திருமண பதிவுச் சான்றிதழ்
மேலும் சில குறிப்பு
அனைத்து திட்டங்களுக்கும் மாவட்ட சமூக நல அலுவலர்கள் மற்றும் சமூக நல விரிவாக்க அலுவலர்களை நீங்கள் அணுக வேண்டும்.
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் நிதியுதவித் திட்டம்
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன
தந்தை தாய் இல்லாத ஆதரவற்ற பெண்களுக்கு பொருளாதாரத்தை ஏற்படுத்தும் வகையில் திருமணத்திற்கு உதவி செய்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
திட்டம் 1
25,000/-ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கம் நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.
திட்டம் 2
50,000/- ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கம் நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.
தகுதிகள் என்ன
ஈ வே ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் நிதி உதவி திட்டத்திற்கான தகுதிகளே இந்த திட்டத்திற்கு பொருந்தும் வருமான வரம்பு இல்லை.
மணமகளுக்கு 21 வயதும் நிறைந்திருக்க வேண்டும் வயது உச்ச வரம்பு என்பது இல்லை.
இதற்கு தேவையான சான்றிதழ்கள்
சட்டமன்றம் அல்லது நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து. ஆதரவற்றோர் என சான்று பெற்று வழங்கலாம்.
தாய் தந்தை இறப்பு சான்றிதழ் வழங்கவேண்டும். விண்ணப்பதாரரின் வயதுச் சான்று.
பட்டப்படிப்பு அல்லது பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்றிதழ்.
விண்ணப்பிக்க வேண்டிய கால அளவுகள் என்ன
இதில் திருமணத்திற்கு 30 நாட்களுக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும்.
திருமண நாள் / திருமணத்திற்கு பிறகு விண்ணப்பித்தால் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
ஈ வே ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் நிதியுதவித் திட்டம்.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்
ஏழை விதவையாரின் மகள் திருமணத்திற்கு போதிய பொருளாதார வசதி இல்லாத பட்சத்தில் அவர்கள் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.
திட்டம் 1
25,000/-ரூபாய் மற்றும் 8 கிராம் தங்கம் நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் ரூபாய் 15,000/- காசோலையாகவும் 10,000/- ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
திட்டம் 2
50,000/- ரூபாய் மற்றும் 8 கிராம் தங்கம் நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் ரூபாய் 30,000/- காசோலையாகவும் 20,000/- ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
அதற்கான தகுதிகள் என்ன
திட்டம் 1
இதற்கு கல்வி தகுதி அடிப்படை தேவை இல்லை
திட்டம் 2
பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக்கல்வி மூலமாகவோ அல்லது மத்திய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கவேண்டும்.
பட்டயப் படிப்பு எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
வருமான வரம்பு இல்லை
சில நிபந்தனைகள்
ஆண்டு வருமானம் ரூபாய் 72,000/-ல் இருக்க வேண்டும்.
விதவைத் தாயின் ஒரு மகனிள் திருமணத்திற்கு மட்டுமே இந்த உதவித் தொகை வழங்கப்படும்
மணமகள் குறைந்தபட்சம் 21 வயது நிறைந்திருக்க வேண்டும்
இந்த திட்டம் பொருத்தவரை மணமகளின் தாய்க்கு உதவித்தொகை வழங்கப்படும், ஒருவேளை தாய் இறந்துவிட்டால் மணமகள் பெயரில் உதவி தொகை வழங்கப்படும்.
இதற்கு தேவையான சான்றிதழ்கள்
பள்ளி மாற்றுச் சான்றிதழ்
திருமண அழைப்பிதழ் நகல்
வருமானச் சான்றிதழ்
பட்டப்படிப்பு அல்லது பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்
10ம் வகுப்பு படித்தவர்களாக இருந்தால் 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
ஆதார் அட்டை
வங்கி கணக்கு புத்தகம் நகல்
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம்.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்
விதவைப் பெண்களுக்கு புது வாழ்வளிக்க அவர்களின் மறுமணத்திற்கு நிதி உதவி அளிப்பது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.
இதன் மூலம் விதவைப் பெண்களின் மறுமணத்தை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.
வழங்கப்படும் நிதி உதவி என்ன
திட்டம் 1
25,000/-ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கம் நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் ரூபாய் 15,000/- காசோலையாகவும் 10,000/- ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
திட்டம் 2
50,000/- ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கம் நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் ரூபாய் 30,000/- காசோலையாகவும் 20,000/- ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
திட்டம் 1
இதற்கு கல்வி தகுதி தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது
திட்டம் 2
பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக்கல்வி மூலமாகவோ அல்லது மத்திய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கவேண்டும்.
TNPSC குரூப் 4VAO 5255 காலிப்பணியிடங்கள் கல்வித்தகுதி பதிவுகள் முழுவிவரம் வெளியிடப்படுகிறது.
பட்டயப் படிப்பு எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
வயது என்ன
மணமகளின் குறைந்தபட்ச வயது 21 இருக்கவேண்டும், மணமகனின் வயது 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
unemployment scheme full details in tamil 2022
இதற்கு தேவையான சான்றிதழ்கள்
விதவைத் சான்றிதழ்.
திருமண பத்திரிக்கை மணமகன் அல்லது மணமகளின் வயதுச் சான்றிதழ்.
திருமண புகைப்படம் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு சான்றிதழ்கள்.