Marukkal poga useful 8 tips in tamil
சருமத்தில் உள்ள தேவையற்ற மருக்கள் மறைய இயற்கை வைத்தியம் என்ன..!
மருக்களை நீக்குவது எப்படி அதுவும் எந்த ஒரு தழும்பும் இல்லாமல், சில நபர்களுக்கு முகத்தில் மருக்கள் இருக்கும், அவற்றைப் பார்ப்பதற்கு மச்சம் போல் காணப்படும்.
இந்த மருக்கள் எந்த ஒரு பிரச்சனையும் உடலில் ஏற்படுத்தாது என்றாலும், முகத்தின் அழகை கெடுத்துவிடும், பொதுவாக இந்த மருக்கள் முகம், கழுத்து, அக்குள், முதுகு, போன்ற பகுதிகளில் உடலில் தோன்றுகிறது.
இந்த மருக்கள் மறைய மருத்துவரிடம் சென்றால் மருத்துவர் பரிந்துரைப்பது அது என்னவென்றால், அந்த மருக்களை எரிக்க வேண்டும் அல்லது சிறிய அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்று சொல்வார்.
இந்தக் கடினமான செயல் முறையை செய்வதற்கு பதிலாக நீங்கள் வீட்டில் இருக்கும் சில இயற்கை மருத்துவ பொருட்களை வைத்து இந்த மருக்கள் நீக்குவது எப்படி அல்லது மரு உதிர வைப்பது எப்படி என்று அந்த கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மருக்கள் மறைய இஞ்சி பயன்பாடு
இந்த மருக்கள் நீங்க தினமும் ஒரு துண்டு இஞ்சியை மரு உள்ள இடத்தில் தேய்த்து வர வேண்டும்.
அண்ணாச்சி பழம் பயன்பாடு
மருக்கள் நீங்க அன்னாசி பழத்தை சாறு எடுத்து அதனை மரு உள்ள இடத்தில் தேய்த்து 30 நிமிடங்கள் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
இவ்வாறு குறைந்தபட்சம் 10 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
வெங்காய சாறு
மருக்கள் நீங்க வெங்காய சாற்றினைக் கொண்டு தேய்த்தாலும் மருக்கள் மறையும்.
அதிலும் இரவில் தூங்குவதற்கு முன் வெங்காயத்தை உப்பு சேர்த்து ஊற வைத்து காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து அதனை மரு உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.
வேண்டுமானால் இந்த கலவையை இரவில் படுக்கும் போது தடவி இரவு முழுவதும் ஊற வைக்கலாம்.
உருளைக்கிழங்கு பயன்பாடு
மருக்கள் நீங்க உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து மசித்து பசைபோல் ஆக்கி தினமும் தடவி வர மரு உதிர்ந்துவிடும்.
சுண்ணாம்பு பயன்பாடு
இந்த மரு வராமல் இருக்க சுண்ணாம்பை நன்றாக குழைத்து, மருவின் மீது தடவி வந்தால் மரு தானாகவே உதிர்ந்துவிடும்.
கற்றாழை சாறு
மரு வராமலிருக்க அல்லது மரு உதிர்வதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுத்தப்படுகிறது,கற்றாழை மருக்களை போக்கும் தன்மை வாய்ந்தது.
எலுமிச்சை பழம்
Marukkal poga useful மரு உதிர எலுமிச்சை சாற்றினைக் கொண்டு மருக்கள் உள்ள இடத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைத்து கழுவினால் போதும் மருக்கள் சீக்கிரம் மறைந்துவிடும்.
வெள்ளைப்பூண்டு பயன்பாடு
Marukkal poga useful மரு உதிர பூண்டு சாற்றினை மரு இருக்கும் இடத்தில் தடவி ஒரு துணியைக் கொண்டு கட்டி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும் மேலும் இந்த முறையை தினமும் மூன்று முறை செய்து வந்தால் நல்ல பலன் விரைவில் கிடைக்கும்.