Mathi meen fish 14 health benefits in tamil
வாரத்தில் குறைந்தது ஒரு முறையாவது இந்த மீனை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.
தமிழ்நாட்டில் அதிகமாக கிடைக்கக்கூடிய மீன் வகைகளில் ஒன்று தான் இந்த மத்தி மீன்.
மத்தி மீனில் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது குறிப்பாக புரதச்சத்து, கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள், செலினியம், அதிகமாக நிறைந்துள்ளது.
விலை குறைவாக இருக்கிறது, அது மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் இந்த மீனில் எளிமையாக கிடைக்கிறது.
உணவில் மத்தி மீனைச் சேர்த்துக் கொண்டால் பல நோய்களில் இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளலாம். இப்போது இந்த மீனை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை முழுமையாக இந்த கட்டுரையில் காணலாம்.
உடலுக்கு எப்பொழுதும் இயற்கை முறையில் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துக்களை அதிக அளவில் கொடுத்தால் மட்டுமே சரியாக இயங்க முடியும்.
உங்களுக்கு ஒமேகா-3 ஊட்டச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், போன்ற ஊட்டச்சத்துகள் அவசியம் தேவை என்றால் நீங்கள் கடல் சார்ந்த உணவுகளை அதற்கு அதிக அளவில் நாடலாம்.
இரத்த அணுக்களை அதிகரிக்கிறது
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி எப்பொழுதும் அதிகமாக இருக்க வேண்டுமென்றால், முதலில் இரத்த அணுக்களை சரியாக பராமரிக்க வேண்டும்.
அதற்கு இரும்புச்சத்து, துத்தநாகம், போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தேவை, இதற்கு நீங்கள் மீன் அல்லது வேர்க்கடலை போன்ற எளிய முறையில் கிடைக்கக் கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
குறிப்பாக கடலிலிருந்து கிடைக்கும் இந்த மத்தி மீனை நீங்கள் உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.
உடல் எடையை பராமரிக்க
உங்களுடைய உடல் எடையை நீங்கள் சரியாக பராமரிக்க விரும்பினால் அதிக கொழுப்பு இல்லாத உணவுகளுக்கு நீங்கள் மாற வேண்டும்.
குறிப்பாக பிராய்லர் கோழி இறைச்சியில் அதிக அளவு உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய ஊட்டச்சத்துகள் நிறைந்து உள்ளது.
இது அனைவரும் அறிந்த ஒரு விஷயம், இதற்கு பதிலாக நீங்கள் இந்த மத்தி மீனை எடுத்துக் கொள்ளலாம், விலையும் குறைவு ஆரோக்கியத்திற்கு எந்த ஒரு தீங்கும் இல்லை.
பார்வை மேம்பட
கண்கள் ஆரோக்கியமாகவும் எப்போதும் சரியாக இயங்க அதற்கு வைட்டமின் ஏ ஊட்டச்சத்து மிகவும் தேவை, அத்தகைய ஊட்டச்சத்துக்கள், இதுபோல் இருக்கக்கூடிய கடல் சார்ந்த உணவுகளில் அதிகமாக நிறைந்துள்ளது.
முடி உதிர்வுக்கு
தலைமுடி பிரச்சனை என்பது இன்றைக்கு இருக்கும் இளைஞர்களின் தீராத பிரச்சனையாக இருக்கிறது, இதற்கு பல்வேறு வகையான சரியான முறையில் தயாரிக்கப்பட்ட மருந்துகள், மாத்திரைகள், கிரீம்கள் மற்றும் உயர்தர சிகிச்சைகள் இருந்தாலும்.
இதனை நிரந்தரமாக சரிசெய்ய முடியவில்லை, எந்த ஒரு வியாதியாக இருந்தாலும் இயற்கையில் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் மட்டுமே அதை முழுமையாக குணப்படுத்தும்.
ஆனால் அதற்கு சிறிது காலம் எடுத்துக் கொள்ளும் உங்களுக்கு முடி சார்ந்த பிரச்சனைகள் இருந்தால் அடிக்கடி இந்த மத்தி மீனை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
கால்சியம் குறைபாட்டுக்கு
கால்சியம் குறைபாட்டால் நீங்கள் அவதிப்பட்டால் இந்த மீனை எடுத்துக் கொள்ளலாம் இதில் அதிக அளவு கால்சியம் நிறைந்துள்ளது கால்சியம் உடலுக்கு எலும்புகளை வலுப்படுத்த அவசியம் தேவைப்படும் ஒரு ஊட்டச்சத்தாக இருக்கிறது.
பால் சார்ந்த பொருட்கள் உங்களால் சாப்பிட முடியவில்லை அல்லது உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் அதற்கு மாற்றாக இந்த மத்தி மீனை எடுத்துக் கொள்ளுங்கள் இதில் அதிக அளவில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.
இளமையாக இருக்க
உங்களுக்கு எப்பொழுதும் இளமையான தோற்றம் வேண்டுமென்றால் அதற்கு முதலில் நீங்கள் உங்களுடைய முகம் மற்றும் தோலை பளபளப்பாக வைத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
இந்த மத்தி மீனில் ஒமேகா-3 ஊட்டச்சத்து, கால்சியம், தாமிரம், போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால். இது உங்களை எப்போதும் புத்துணர்வுடன் வைத்திருக்கும் அதுமட்டுமில்லாமல் தோல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.
மாரடைப்பைத் தடுக்கிறது
மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கியமாக இருப்பது இதய தமணிகளில் அதிக அளவு தேவையற்ற கொழுப்புகள் உருவாகுவது மட்டுமே.
இதற்கு உணவு முறைகள், வாழ்க்கை முறைகள், முதன்மையாக இருக்கிறது. நீங்கள் அன்றாடம் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்தால் இதனை தடுக்க முடியும்.
கடல் சார்ந்த உணவுகளில் இருக்கக்கூடிய ஒமேகா-3 ஊட்டச்சத்துக்கள், அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம். இது இதயத் தமனிகளில் சேரக்கூடிய கெட்ட கொழுப்பை முற்றிலும் தடுக்கிறது.
நீரிழிவு நோய்
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கட்டாயம் ஒமேகா-3 ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
இது உடலில் குளுகோஸின் அளவை கட்டுப்படுத்தவும் மற்றும் ஆரம்பநிலை சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு இந்த ஊட்டச்சத்து பயனுள்ளதாக இருக்கிறது.
மத்தி மீன் எடுத்துக்கொண்டால் உங்கள் உடலின் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தும் மற்றும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
கர்ப்பிணி பெண்களுக்கு
பொதுவாக மீன் ஒரு அற்புதமான ஊட்டச்சத்து நிறைந்த உணவாக இருக்கிறது, கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இந்த மீனை உணவில் சேர்த்துக் கொண்டால்.
இரும்புச்சத்து, துத்தநாகம், போன்றவை உடல் வலுப்பெறவும் கால்சியம் எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கும் உதவுகிறது.
உடல் எடை அதிகரிக்க
உங்களுடைய உடல் எடையை நீங்க அதிகரிக்க வேண்டும் அதே நேரத்தில் கெட்ட கொழுப்பு சேராமல் அழகான உடல் தோற்றத்தைப் பெற வேண்டும் என முடிவு செய்தால்.
கட்டாயம் இந்த மீனை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் இதில் புரதச்சத்து அதிகமாக இருப்பதால் உடலில் தசைகள் உருவாகுவதற்கு உதவுகிறது.
ஹார்மோன்கள்
நமது உடலில் இருக்கும் நலமில்லாத சுரப்பிகள் உடலின் அத்தியாவசியமான செயல்பாடுகளுக்கு பல ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது,இந்த மத்தி மீனை சாப்பிட்டால் இந்த ஹார்மோன்களின் செயல்பாடு சரியான சமநிலையில் இருக்கும்.
கர்ப்பப்பை பிரச்சனைகள்
பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வு தான் மாதவிடாய் சுழற்சி, சீரான ஊட்டச்சத்துகள் சரியாக இருந்தால் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் சீராகி கர்ப்பப்பையில் இருக்கும் தீங்கான கழிவுகள் நீங்கும்.
வேர்க்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்
இதனால் பெண்களின் உடல்நலம் மேம்பாடும் மற்றும் வளர்சிதை மாற்றம் சரியாக இருக்கும்.
Click here to view our YouTube channel
நரம்புத் தளர்ச்சிக்கு
உடலின் பல பாகங்களுக்கு இரத்தத்தை சீரான முறையில் கொண்டு செல்லும் பணியை நரம்புகள் செய்கிறது. கடல் சார்ந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு நரம்புகள் நன்கு வலுப்பெறும் நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்கள் விரைவில் குணமடையும் உடல் எப்போதும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
Best Health effects of too much uric acid 2021
இரத்த சோகை நீங்க
இந்த மீனில் அதிக அளவு புரதச்சத்து இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த உற்பத்தி உடலில் அதிகமாகும் இதனை உணவில் சேர்த்துக் கொண்டால்.
Best 10 signs that your heart is unhealthy
இரத்த அணுக்கள் சரியாக இயங்கினால் மட்டுமே உடல் வலுபெறும் மற்றும் அதிகமாக எடை தூக்க முடியும் எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியும் உங்களால்.