Meen ennai mathirai payangal full list 2022
மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் நிறைந்துள்ளதா..!
மீன்களில் ஏராளமான ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளது சில மீன்கள் பல்வேறு வகையான நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டுள்ளன.
இயற்கையான முறையில் கடலில் இருந்து பிடித்து வரப்படும் மீன்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை தொடர்ந்து மீன் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்கும்.
இன்று இயற்கை முறையில் வளர்ந்த மீன்கள் கிடைப்பது மிக கடினம் அது மட்டுமில்லாமல் பண்ணைகளில் வளர்க்கப்படும் மீன்களுக்கு செயற்கை முறையில் ஊசி செலுத்தி.
மீன்களை இனப்பெருக்கம் செய்வது அதுமட்டுமில்லாமல் எடை கூடுவதற்கு பல்வேறு வழிமுறைகள் செய்கிறார்கள்.
அது போல் இருக்கும் மீன்களை நீங்கள் சாப்பிட்டால் பல்வேறு வகையான உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும்.
மீன் எண்ணெய் மாத்திரை இன்று மருந்து கடைகளில் எளிமையாக கிடைக்கிறது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
இதில் உள்ள நன்மைகள் என்ன என்பதை இந்த கட்டுரையில் முழுமையாகப் பார்ப்போம், மீன் எண்ணெய் மீன்களின் ஈரல் பகுதிகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவது ஆரோக்கியம் சார்ந்த விஷயமாக மருத்துவர்களால் பார்க்கப்படுகிறது.
மீன் எண்ணெய் மாத்திரையில் பொட்டாசியம், சோடியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, ஒமேகா-3 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்தினால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்.
மீன் எண்ணெய் மாத்திரைகளில் உள்ள ஒமேகா-3 ஊட்டச்சத்து கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ ஊட்டச்சத்து கண் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது, அது மட்டுமில்லாமல் குறைபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது.
மூட்டுவலி சார்ந்த பிரச்சனையால் அவதிப்படும் நபர்கள் மீன் எண்ணெய் மாத்திரையை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடைந்து மூட்டுவலி பிரச்சனைக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.
மீன் மாத்திரை சாப்பிட்டு வந்தால் இதயத்துக்குள் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைவதால் இருதய பாதிப்புகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது.
மீன் எண்ணெய் மாத்திரையை தொடர்ந்து சாப்பிட்டு வரும் நபர்களுக்கு அல்சர் எனப்படும் வயிற்றுப் புண்கள் வருவதில்லை அது மட்டுமில்லாமல் சாப்பிட்ட உணவு நன்கு செரிமானம்மாகும்.
மீன் எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளையை நன்கு சுறுசுறுப்பாக வைத்திருக்கும் இதனால் தேவையற்ற மன அழுத்தம் ஏற்படாது.
எது சிறந்தது எங்கு வட்டி விகிதம் அதிகம்
குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள், சிறுநீரக பிரச்சனை இருக்கும் நபர்கள், மருத்துவர்களின் பரிந்துரை, இல்லாமல் மீன் மாத்திரை சாப்பிடக் கூடாது.
These foods can cause bad breath 2022
இந்த மாத்திரைகளை தினமும் சாப்பிடலாமா அல்லது எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு சாப்பிடுவது நல்லது.