இந்த மரம் உங்கள் அருகில் இருந்தால் நீங்கள்தான் அதிர்ஷ்டசாலி(Meswake Best health benefits 2020 in Tamil)
உகா மராம்,( மிஸ்வாக்) இதைப்பற்றி தமிழ்நாட்டில் தெரிந்தவர்கள் மிக மிக குறைந்த நபர்களே உள்ளார்கள். உலக சுகாதார மையம் இந்த மரத்தினுடைய வேர்களை பல் துலக்குவதற்கு பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கிறது. நாம் சிறிய வயதில் பல் துலக்குவதற்கு இயற்கையாக கிடைக்கும் வேப்ப மரக் குச்சி, ஆலமர குச்சி போன்றவைகளை பயன்படுத்தலாம் என்று நம்மளுடைய சுகாதார மையம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த மிஸ்வாக் மரத்தினுடைய வேர்களை பல் துலக்குவதற்கு அரபு நாடுகளில் அதிக அளவில் பண்டைய காலங்களில் இருந்து பயன்படுத்துகிறார்கள் இந்தியாவில் இந்த மரம் ஒரு சில இடங்களில் வளர்கிறது இதனுடைய நன்மைகளை அறிந்த சிலர் இந்த மரத்தினுடைய வளங்களை இந்த சமுதாயத்திற்கு தெரியாமல் இன்னும் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள்
உகா மரம் வரலாறு.
கிமு 5,000 முதல் ஆயுர்வேதத்தில் இந்த மரத்தினை பயன்படுத்துகிறார்கள். பல் துலக்குதல் மற்றும் பற்பசையில் செயல்பாடுகளை இணைத்து மிஸ்வாக்கின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பல மக்களை பயங்கரமான பல் சிதைவு மற்றும் பல நூற்றாண்டுகளாக மோசமான நிகழ்வுகளிலிருந்து காப்பாற்றியுள்ளது பண்டைய பாபிலோனியர்கள் மற்றும் எகிப்தியர்கள் கூட இந்த மிஸ்வாக் மரத்தினை பல் துலக்குதலுக்கு பயன்படுத்தினார்கள் என்ற வரலாறு உண்டு.
ஆப்பிரிக்கா ஏமன் உள்ளிட்ட நாடுகளில் இந்த உகா மரம் அதிக அளவில் வளர்கிறது தமிழ்நாட்டில் குறிப்பாக ராமநாதபுரம், கீழக்கரை உள்ளிட்ட இடங்களில் மிக அரிதாகவே வளர்கிறது.
இந்த மரத்திற்கு உள்ள பல்வேறு பெயர்கள்
மிஸ்வாக், சிவாக், சால்வடோரா பெர்சிகா, பீலு, அராக், எல்-அராக், மிஸ்வாக் மரம், அராக், கார ஜல், மிஸ்வாக், மெஸ்வாக், கடுகு மரம், பிலு, சால்ட் புஷ், சிவாக், டூத் பிரஷ் மரம், உகா மராம் போன்ற பெயர்கள் உண்டு.
பற்கள் எப்படி பாதிக்கப்படுகிறது.
குறிப்பாக சர்க்கரை நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை இன்றைய காலகட்டத்தில் உள்ள மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள் இதனால் பற்சிதைவு என்பது எளிதாக அனைவரையும் தாக்குகிறது.
நம் வாயில் நூற்றுக்கணக்கான பாக்டீரியாக்கள் உள்ளன அவற்றில் சில வகை நம்மளுடைய ஈறுகளை பாதுகாக்கிறது மற்றும் கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்களும் உள்ளது.
உகா மராம்,( மிஸ்வாக்) நன்மைகள்.
உகா மரத்தில் இருக்கும் சோடியம் குளோரைடு, சோடியம் பை கார்பனேட் மற்றும் கால்சியம் ஆக்சைடு (சுட்ட சுண்ணாம்பு) பற்களை வலுப்படுத்த உதவுகிறது, இதனால் பற்கள் வெண்மையாக்குவதை ஊக்குவிக்கிறது..
புத்துணர்ச்சியூட்டும் சுவை.
உகா மராம்,( மிஸ்வாக்) பயன்படுத்துவதன் ஒரு முக்கிய நன்மை அதன் புத்துணர்ச்சியூட்டும் சுவை மற்றும் வாசனை இயற்கையாக நிகழும் நறுமண சேர்மங்களின் சுவை முழுவதும் நிரம்பியதாக உள்ளது. இப்பொழுது வரும் வணிகரீதியான பற்பசை சுவை போலவே இருக்கும்.
மிஸ்வாக்கில் உள்ள பெராக்ஸிடேஸ், கேடலேஸ் மற்றும் பாலிபினோலாக்ஸிடேஸ் போன்ற ஆக்ஸிஜனேற்ற நொதிகள் புற்றுநோய்க்கு எதிரான பண்புகளை கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. அதாவது அவை புற்றுநோயை தடுக்க உதவுகிறது.
உடலிலுள்ள புற்றுநோயை மிஸ்வாக் எவ்வளவு எதிர்த்து போராடுகிறது என்பது பற்றி இன்னும் நிறுவப்படவில்லை.
இந்தியாவில் இந்த மரத்தினுடைய வேர்களைக் கொண்டு ஒரு பிரபல முன்னணி நிறுவனம் பற்பசையை தயாரிக்கிறது உங்களுக்கு இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசை வேண்டுமானால் இந்த பற்பசையை பயன்படுத்தலாம்.twitter