Minister Senthil Balaji bail case 2023
இந்த வழக்கை, யார் விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார் என கூறிய நீதிபதி எம் சுந்தர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதியிடம் முறையிடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதன் பிறகு நீதிபதி ஆர் சுரேஷ் குமார் தலைமையிலான அமர்வில் நாளை மனுதாக்கல் செய்யப்படும் என செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியின் சிறைகாவல் இரண்டு நாட்களுக்கு முன்பே முடிவடைந்த நிலையில்.
அன்றைய தினம் செந்தில் பாலாஜியை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும் படி சிறை துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,அதன்படியே செந்தில் பாலாஜியும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் N.R இளங்கோவுக்கும் அமலகத் துறையினர் வழக்கறிஞருக்கு மட்டுமே நீதிமன்ற அறைக்குள் அன்றைய தினம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
என்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,அப்போது அவரிடம் 150 பக்க குற்ற பத்திரிக்கை நகலும் வழங்கப்பட்டுள்ளது.
இதன்பிறகு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் நீதிபதி ரவி அமலாக்கத்துறை தொடர்பான வழக்கில் ஜாமீன் கோரிய மனுவை இந்த நீதிமன்ற விசாரிக்க முடியாது என்பதால்.
அதற்கான சிறப்பு நீதிமன்றமான சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தை அணுகும்படி தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த முறை காவல் நீட்டிப்புக்கு நேரில் ஆஜர்படுத்த தேவையில்லை என்றும் காணொளி காட்சி மூலமாக ஆஜர் படுத்தினால் போதும் என்று நீதிபதி சிறைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன்பிறகு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெற செந்தில் பாலாஜி வழக்கறிஞர் குழுகளமிறங்கியது அதிரடியாக.
நேற்று முன்தினம் காலை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் புதிதாக செய்யப்பட்டது.
அத்துடன் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும்,முதன்மை நீதிபதி எஸ் அல்லி முன்பு செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் குழு முறையீடு செய்தார்கள்.
அப்போது முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி அவர்கள் செந்தில் பாலாஜியின் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கும் என்றும் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும்.
சிறப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால்,நீங்கள் அங்கே ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம்.
சிறப்பு நீதிமன்றம் தான் இது குறித்து விசாரிக்க முடியும் அங்கே சென்ற முறையிடுங்கள் என்று தெரிவித்தார்.
நீதிபதி அமலாக்க துறையின் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா என்பது.
சென்னை உயர் நீதிமன்றத்திடம் தெளிவுபடுத்தி வரும்படி அறிவுறுத்தினார்கள்,இதன்பிறகு செந்தில் பாலாஜி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை இன்று நாட உள்ளதாக தெரிகிறது.
உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்திய பிறகு சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் புதிதாக செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி மூத்த வழக்கறிஞர் இளங்கோ நீதிபதிகள் எம் சுந்தர் சக்திவேல் அமர்வில் முறையிட்டார்கள்.
அப்போது இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி சக்திவேல் ஏற்கனவே விளங்கிய நிலையில்,இந்த முறையீட்டு எப்படி ஏற்பது என்று நீதிபதி எம் சுந்தர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மூத்த வழக்கறிஞர் இளங்கோ மாற்ற அமர்வு இன்று இல்லை என்பதால்தான் தங்களிடம் முறையிடுவதாகவும் நிர்வாக ரீதியாக உத்தரவை பிறப்பித்தால் கூட போதுமானது என்று தெரிவித்தார்.
எந்த வழக்கை, யார் விசாரிப்பது,என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார் எனக் கூறி நீதிபதி எம் சுந்தர் இந்த வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதியிடம் முறையிடுங்கள் என்று தெரிவித்தார்.
இதன் பிறகு இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி ஆர் சுரேஷ் குமார் தலைமையில் அமர்வில் நாளை முறையிடப்படும் என செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பான விசாரணையில் இருந்து நீதிபதி சக்திவேல் விலகியது குறிப்பிடத்தக்கது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
tn rs 1000 scheme 63 lakhs applicants rejected