Ministry of AYUSH issued new drug for covid-19

மத்திய ஆயுஷ் அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது(Ministry of AYUSH issued new drug for covid-19)

எந்தவிதமான அறிகுறியும் இல்லாத லேசான கொரோனா  தொற்றவை குணப்படுத்துகிறது கபசுரக் குடிநீர் ஆயுஷ் அமைச்சகம் ஆராய்ச்சியில் உறுதியானதால் அனைத்து மாநிலங்களுக்கும் பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.

மத்திய ஆயுஷ் அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது அதில் கொரோனா அறிகுறி இல்லாத லேசான  தொற்றை  கபசுரக் குடிநீர் குணப்படுத்துவது ஆராய்ச்சியில் உறுதியாகத் தெரிகிறது அதை உடனடியாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது

கொரோனா தொற்றுக்கு தொடக்கத்தில் ஆங்கில மருத்துவ மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது ஆனால் நாட்கள் கடக்க கடக்க நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதால் மருத்துவமனைகளில் போதிய இடவசதி இல்லாததால் லேசான மிதமான தொற்றுக்கு இருப்பவர்களுக்கு சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.

Ministry of AYUSH issued new drug for covid-19
மத்திய ஆயுஷ் அமைச்சகம்

இதையடுத்து தமிழகம் முழுவதும் சித்த மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் சில மூலிகை குடிநீர் வழங்கப்பட்டது அதில் நல்ல முடிவு தெரிந்ததால் பல்வேறு தரப்பினரும் இந்த சித்த  வைத்தியதை  பயன்படுத்தலாம் என்று கோரிக்கை வைக்கிறார்கள் ஏனெனில் சித்த மருத்துவத்தில் உயிரிழப்புகள் என்பது இதுவரை இல்லை.

இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறது அதில் ஒன்றுதான் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளை கையாளுகிறது.

மத்திய ஆயுஷ் அமைச்சகம் கொரோனா நோய்க்கு உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அவ்வபோது பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி கொண்டே இருக்கிறது அந்த  வகையில்  வீட்டில் இருக்கும் மஞ்சள், துளசி, கிராம்பு, பட்டை, இஞ்சி, கருசீரகம் உள்ளிட்ட பாரம்பரிய பொருட்களை பயன்படுத்தி கபசுரக் குடிநீர் தயாரித்தல், மூலிகை தேனீர் தயாரித்தல் போன்றவற்றை பின்பற்றுமாறு தெரிவிக்கிறது.

 Ministry of AYUSH issued new drug for covid-19
மூலிகை குடிநீர்

இந்த நிலையில் கொரோனா வைரஸின்  2வது அலை தீவிரமாக பரவி வருவதால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு இப்பொழுது சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்க முடிவு எடுத்துள்ளது சமூக ஆர்வலர்களும் சித்த மருத்துவத்தை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி வந்தனர்.

புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தமிழக முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் சென்னை  வியாசர்பாடி அம்பேத்கர் கலை அறிவியல் கல்லூரிகளில் 240 படுக்கைகள் மீனம்பாக்கம் ஏ எம்  ஜெயின் கல்லூரியில் 70 படுக்கை வசதிகளுடன் சித்த மருத்துவ சிகிச்சை மையங்களை அமைக்க உத்தரவிட்டார்.

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் தாம்பரத்தில் செயல்படும் தேசிய சித்த மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடன் புதிய  சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது மேலும்  உள்ள மாவட்டங்களில் தேனி, நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, அரியலூர், மதுரை, தென்காசி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, கரூர்,நாகப்பட்டினம்,தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் தமிழக அரசு சித்த மருத்துவமனை  விரைவில் அமைக்க உள்ளது.

கபசுர குடிநீர் மூலம் அறிகுறி இல்லாத லேசான மற்றும் மிதமான கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவது மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் நடத்திய ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்ட பின்பு நமது உடலில் நிகழும் மாற்றங்கள் என்ன.

இதேபோல் ஆயுஷ் 64 என்ற ஆயுர்வேத மருந்து தொற்றை  குணப்படுத்துவதும் மத்திய ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சி  குழுமத்தின் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது இந்த இரண்டு மருந்துகள் குறிப்பிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தேவையானவர்களுக்கு கொடுக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது.

தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்கள் சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி கபசுர குடிநீர் குடிக்கலாம்.

what are the Corona symptoms for children 2021

JOIN US TELEGRAM GROUP

 

Leave a Comment