Mobile application loan 5 safety full details

Mobile application loan 5 safety full details

கவனமாக இருங்கள் இணையதள கடன் மோசடிகளை தவிர்க்க கவனத்தில் கொள்ள வேண்டிய இந்த விஷயங்களை பின்பற்றுங்கள்..!

கொரோனா வைரஸின் வருகைக்குப் பிறகு உலகம் முழுவதும் டிஜிட்டல் வளர்ச்சித்துறை வளர்ச்சி என்பது உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

இப்பொழுது ஒவ்வொரு துறையிலும் பெரிய அளவில் டிஜிட்டல் பங்கு என்பது உள்ளது.

குறிப்பாக வங்கித் துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன இந்தியாவில் உடனடியாக கடன் பெறும் (Mobile Applications) பல ஆயிரம் செயலிகள் புதிதாக வந்துள்ளன.

ஒருபுறம் மக்களின் மிக அவசர தேவைக்கு பயன்படும் விதமாக இருந்தாலும் இதில் பல மோசடி சம்பவங்கள் தினம்தோறும் அரங்கேறி வருகிறது.

வங்கி வாடிக்கையாளர்கள் ஒரு வங்கியில் கடன் பெறுவதற்கு பல்வேறுவகையான நடைமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது.

இதனால் பொதுமக்கள் இப்பொழுது வங்கிகளை நாடுவதை தவிர்த்து இது போன்ற உடனடி கடன் கொடுக்கும் செயலிகளை (Mobile Applications) நாடுகிறார்கள்.

இது போன்ற மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி என்று இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.

செயலிகளை (Mobile Applications) இந்த உடனடி கடன் கிடைக்கும் என்ற ஒரு தூண்டலை மக்களிடத்தில் ஏற்படுத்துகிறார்கள் இதனால் பலரும் உடனடியாக தங்களின் அவசர தேவைக்கு பணம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் இதுபோன்ற மோசடியில் எளிதாக சிக்கிக் கொள்கிறார்கள்.

இப்படி மோசடியில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க என்ன வழி கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று வாருங்கள் தெரிந்துகொள்வோம்.

Mobile application loan 5 safety full details

போலி செயலிகள் Mobile Applications

சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ஒரு எச்சரிக்கை அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட்டது உடனடியாக கடன் கொடுக்கும் 1.100 கடன் செயலிகளில் (Mobile Applications) 600 செயலிகள் போலியானது என வல்லுநர்கள் குழு தெரிவித்துள்ளது.

அந்த அளவிற்கு இணையதள மோசடிகள் இப்பொழுது நாட்டில் பெருகிவிட்டன இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் இருந்தால் போதும் இதன் மூலம் நிமிடங்களில் கடன் பெறும் வசதிகள் வந்துவிட்டது.

இதற்காக நாள்கணக்கில் ஆவணங்களை எடுத்துக்கொண்டு வங்கிகளுக்கு அலைய வேண்டியதில்லை, மேலும் இதற்காக எந்த ஒரு சொத்தையும் அடமானம் வைக்ககூடிய ஆவணங்களும் தேவையில்லை.

Mobile application loan 5 safety full details

முக்கியமாக கவனிக்க வேண்டியது

நீங்கள் கடன் வாங்க திட்டமிடும் இந்த மொபைல் செயலி (Mobile Application) இந்திய ரிசர்வ் வங்கியிடம் அங்கீகாரம் பெற்றுள்ளதா மற்றும் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

அதற்குப் பிறகு விதிமுறைகளை இந்த செயலிகள் (Mobile Application) சரியாக பின்பற்றுகிறது என்பதையும், சரி பார்த்துக் கொள்ளுங்கள் அப்படி ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் கடன் வாங்குவதை முற்றிலும் தவிர்க்கலாம்.

மதிப்புகளை கட்டாயம் பார்க்க வேண்டும்

நீங்கள் கடன் வாங்க தீர்மானிக்கும் முன்பு அந்த செயலின் (Mobile Application) மதிப்புகளை (Review) பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அந்த செயலி எந்த நிதி நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

அந்த செயலி நிறுவனம் ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்பட்டிருக்கிறார், அந்த செயலி அல்லது நிறுவனத்திற்கு என பொதுவான இணையதளம் இருக்கிறதா.

அதில் என்னென்ன விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது அல்லது கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதையும் முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நிபந்தனைகளில் கவனமாக இருங்கள்

நீங்கள் கடனுக்கு விண்ணப்பித்து அதனை இறுதியாக முடிக்கும் முன்பு இருக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சில இணையதள மோசடி பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களைப் போல இணையம் என அனைத்து வசதிகள் விதிமுறைகள் சரியாக வைத்திருப்பார்கள்.

எனவே கடனுக்கு விண்ணப்பித்து இறுதியாக (Proceed) கொடுக்கும் முன்பு விதிமுறைகள் என்ன நிபந்தனைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தவிர்க்க முயற்சி செய்யுங்கள்

இப்பொழுது அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணமாக செயலிகளின் (Mobile Application) பயன்பாடு அதிகரித்துள்ளது ஆகவே நீங்கள் முடிந்த அளவில் அதிகாரப்பூர்வமற்ற (Mobile Application) செயலிகளை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்.

குறிப்பாக உங்களது வங்கி விவரங்கள், கிரெடிட் கார்டு, பின் முகவரிகள் உள்ளிட்டவற்றை தவிர்த்துவிடுங்கள் இதனை தவறாக பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் அதிகமாக நிறைந்துள்ளது.

புதிய கொரோனா ஓமிக்ரானின் அறிகுறிகள் என்ன

வட்டி விகிதத்தை கணக்கிட வேண்டாம்

சிலர் கடன் வாங்கும் பொழுது எங்கு குறைந்த வட்டி வீதம் என்றுதான் முதலில் கவனிப்பார்கள் ஏனெனில் வட்டிக்கு கடனை முன்கூட்டியே கட்டினால் அதற்கு எவ்வளவு கடன் செயல்பாட்டு கட்டணம் எவ்வளவு என தெரிந்து கொள்ளுங்கள்.

8 Simple Tips to Grow a Mustache Beard Faster

இதன் மூலம் பிரச்சனைகளில் இருந்து தப்பிப்பதற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.

Leave a Comment