Motor Vagana Sattam useful Details 2022
மோட்டார் வாகன சட்டம் மற்றும் அபராதம் முழு விவரங்கள்..!
சட்டம் என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரே சமமாக உருவாக்கப்பட்டு அதில் எப்படி இருந்தால் அனைவரும் உரிமை பெற முடியும்.
அனைவரும் சரியாக வாழ முடியும் என்பதை செயல்படுத்தும் ஒரு முறையாகும், சமத்துவத்தை அடைவதை உறுதி செய்வதற்கு உதவுவதே சட்டதிட்டத்தின் நோக்கமாகும்.
சட்டத்தில் நிறைய பிரிவுகள் இருக்கிறது, அவற்றில் ஒன்றுதான் மோட்டார் வாகன சட்ட பிரிவு, தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும்.
மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராததையும், முழுமையாக தெரிந்து கொண்டால் அதற்கான பிரச்சினைகள் வரும்போது அதனை நீங்கள் எளிமையாக நிவர்த்தி செய்யலாம்.
Motor Vagana Sattam useful Details இந்தக் கட்டுரையில் மோட்டார் வாகன சட்டம் என்றால் என்ன? அதில் என்னமாதிரியான அபராதம் விதிக்கப்படுகிறது, என்பதை முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
மோட்டார் வாகன சட்ட பிரிவு போக்குவரத்து விதிமீறல் தற்போது விதிக்கப்படும் அபராத தொகை விவரம், இதற்கு முந்தைய கட்டணமும் தற்போது அதிகரிக்கப்பட்ட கட்டணமாகவும்.
மோட்டார் வாகன சட்டம் என்றால் என்ன
- Motor Vagana Sattam useful Details பிரிவு 177 போக்குவரத்து விதிமுறைகளுக்கான பொது அபராதம் பழைய அபராதத் தொகை குறைந்த பட்சம் 100 ரூபாய் புதிய அபராதத் தொகை குறைந்தபட்சம் 500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- பிரிவு 177A சாலை ஒழுங்குமுறை விதிகளை மீறுதல் பழைய அபராத தொகை ரூபாய் 100 தற்போது புதிய அபராதத் தொகை ரூபாய் 500.
- பிரிவு 178 பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வது பழைய அபராத தொகை ரூபாய் 200 தற்போது, விதிக்கப்பட்டுள்ள புதிய அபராத தொகை ரூபாய் 500.
- பிரிவு 179 போக்குவரத்து அதிகாரிகளின் உத்தரவை மீறுவது பழைய அபராத தொகை ரூபாய் 500 தற்போது நடைமுறையில் உள்ள புதிய அபராத தொகை ரூபாய் 2000.
- பிரிவு 180 அங்கீகாரமின்றி உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கினால், பழைய அபராத தொகை ரூபாய் 1000 புதிய அபராத தொகை ரூபாய் 5000.
- பிரிவு 181 உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கினால் பழைய அபராதத் தொகை ரூபாய் 500 புதிய அபராத தொகை ரூபாய் 5000.
- Motor Vagana Sattam useful Details பிரிவு 182 தகுதி இழப்பு செய்தபின் வாகனத்தை இயக்கினால் பழைய அபராத தொகை ரூபாய் 500 புதிய அபராதத் தொகையாக அதிகபட்சம் ரூபாய் 10,000.
- பிரிவு 182B நிர்ணயிக்கப்பட்ட அளவை விட பெரிய வாகனம் புதிய அபராத தொகை ரூபாய் 5000.
- பிரிவின் 183 அதிவேகமாக வாகனத்தை இயக்கினால் பழைய அபராத தொகை ரூபாய் 400. 1000 for LMV ரூபாய் 2000 நடுத்தர பயணிகளின் வாகனம்.
- பிரிவு 184 அதிவேகமாக வாகனத்தை இயக்கினால் பழைய அபராத தொகை ரூபாய் 1000 புதிய அபராதத் தொகை ரூபாய் 5000 இரண்டாவது முறையும் இப்படியே வேகமாக வாகனத்தை இயக்கினால் அவர்களுடைய ஓட்டுநர் உரிமம் பறிக்கப்படும்.
- பிரிவு 185 மது அருந்திவிட்டு வாகனத்தை அதிவேகமாக ஓட்டுதல் பழைய அபராத தொகை ரூபாய் 2,000/- புதிய அபராதத் தொகை ரூபாய் 10,000/- மேலும் ஓட்டுநர் உரிமம் முற்றிலும் ரத்து செய்யப்படும்.
- பிரிவு 189 சாலையில் வேகமாக இரண்டு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனத்தில் பந்தயத்தில் ஈடுபடுதல் பழைய அபராத தொகை ரூபாய் 500 புதிய அபராத தொகையாக ரூபாய் 5000.
- பிரிவு 192 A அனுமதி (குறிப்பாக பர்மிட்) இல்லாமல் வாகனம் ஓட்டுதல் பழைய அபராதத் தொகை ரூபாய் 5000 புதிய அபராதத் தொகை அதிகபட்சம் ரூபாய் 10,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
- பிரிவு 193 முகவர்கள் உரிமம் தொடர்பான விதிமீறல்கள் புதிய அபராத தொகையாக ரூபாய் 25,000 முதல் 1,00,000/- ரூபாய் வரை.
- பிரிவின் 194 வாகனங்களில் அதிக அளவில் நிர்ணயிக்கப்பட்ட விட சுமை ஏற்றுதல் பழைய அபராத தொகை ரூபாய் 2000 மற்றும் ரூபாய் 1000 ஒவ்வொரு கூடுதல் டன் எடைக்கும். புதிய அபராத தொகையாக ரூபாய் 20,000 மற்றும் ரூபாய் 2000 ஒவ்வொரு கூடுதல் டன் எடைக்கும்.
- பிரிவின் 194 அதிக அளவில் பயணிகளை ஏற்றுதல் விதிமுறைகளை மீறுதல் புதிய அபராத தொகையாக ரூபாய் 1000 கூடுதல் பயணிகளுக்கும்.
- பிரிவு 194 B சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு பழைய அபராத தொகையாக ரூபாய் 100 புதிய அபராத தொகையாக ரூபாய் 1000.
- பிரிவு 194 C இருசக்கர வாகனத்தில் அதிக அளவில் அமர்ந்து செல்லுதல் அபராத தொகையாக ரூபாய் 100 புதிய அபராதத் தொகையாக ரூபாய் 2000 ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு தகுதி இழப்பு செய்யப்படும்.
- பிரிவின் 194 D இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் செல்லுதல் பழைய அபராதத் தொகையாக ரூபாய் 100 புதிய அபராதத் தொகையாக ரூபாய் 1000 ஓட்டுனர் உரிமம் மூன்று மாதங்களுக்கு தகுதியிழப்பு செய்யப்படும்.
- பிரிவின் 194 E அவசர ஊர்தி மற்றும் அவசர சேவை வாகனங்களுக்கு வழிவிடாமல் செய்தால் புதிய அபராத தொகையாக ரூபாய்10000/-
- பிரிவு 196 காப்பீடு இல்லாமல் வாகனத்தை இயக்குதல் பழைய அபராத தொகையாக ரூபாய் 1000 புதிய அபராத தொகையாக ரூபாய் 2000.
- பிரிவு 199 சிறு குழந்தைகள் அல்லது சிறார்கள் புரியும் போக்குவரத்து விதிமீறல்கள் அல்லது காப்பாளர்கள், வாகன உரிமையாளர், குற்றவாளியாகக் கருதப்படுவார்கள்ர. ரூபாய் 25 ஆயிரம் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை சிறார்கள் Juvenile Justice act படி நடவடிக்கை வாகனத்தின் பதிவு முற்றிலும் ரத்து செய்யப்படும்.
- பிரிவு 206 முழு ஆவணங்களையும் பறிமுதல் செய்ய போக்குவரத்து அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் உள்ளது.
சிறுவர்கள் வாகனத்தை இயக்கி ஒருவேளை தவறு செய்தால் அதிகபட்சமாக ரூபாய் 25 ஆயிரம் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 12 மாதங்களுக்கு மோட்டார் வாகன பதிவு முற்றிலும் ரத்து செய்யப்படும் அந்த சிறுவர் 25 வயது ஆகும் வரை எம்.எல் கூட வாங்க முடியாது, தகுதியற்ற பட்டியலில் சேர்த்து விடுவார்கள்.