Mukesh Ambani continues to grow in 2020

அசத்தும் முகேஷ் அம்பானி மணிக்கு 90  கோடி ரூபாய்…!(Mukesh Ambani continues to grow in 2020)

2020 ஆம் ஆண்டு முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகரிக்கத் தொடங்கியது. IIFL wealth harun India rich list   2020 ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி லாக்டவுன் தொடக்கத்திலிருந்தே IIFL wealth harun India rich list   2020 படி மணிக்கு 90 கோடி ரூபாய் சம்பாதித்து வருவதாக தெரியவந்துள்ளது.

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு  2,77,000 ரூபாய் அதிகரித்து 6,58,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது.

ஜியோவில் பேஸ்புக் முதலீடு

Mukesh Ambani continues to grow in 2020

ரிலையன்ஸ் ஜியோவிற்க்கு  பெரிய ஊக்கமளிக்கும் விதமாக சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் நிறுவனம் 5.7  பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது. இந்திய மதிப்பில்  சுமார் (43,574) கோடி ரூபாய் ஆகும். இதன்படி ஃபேஸ்புக் நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோவின்  9.99% ஈக்விட்டி பங்குகளை முழுமையாக வாங்கியுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம்

ரிலையன்ஸ் ஜியோவில் கூகிள் முதலீடு

2020ம் ஆண்டு ஜூலை மாதம் ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில். உலகில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோவில் (33,737) கோடி ரூபாய் முதலீடு செய்யும் என்று அறிவித்தது. இதன் மூலம் 7.73 சதவீத பங்குகளை கூகுள் நிறுவனம் வாங்கிவிடும். பேஸ்புக், இன்டெல், குவால்காம் மற்றும் கூகிள் போன்ற மிகப் பெரிய நிறுவனங்கள்  ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்து  வளர்ச்சி

Mukesh Ambani continues to grow in 2020

கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பட்டத்தினை முகேஷ் அம்பானி பெற்றுள்ளார். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பானது 2,77,000 கோடி அதிகரித்து  கோடி 6,58,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே தனது நிறுவனத்தை விரிவுபடுத்த உலகளவில் மிகப்பெரிய நிதிகளை திரட்டி வருகிறார். இதனால் ரிலையன்ஸ் நிறுவனம் உச்சகட்ட வளர்ச்சியை அடைந்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை நிலவரம்

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து உயரத் தொடங்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கின் விலை 6 சதவீதத்திற்கு மேலாக அதிகரித்து 2250 ரூபாயாக உள்ளது. வரும் காலங்களில் மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கின் விலை உயர்ந்துகொண்டே இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

Top 1 Tech Richest in India 2020

தென்னிந்திய பக்கம் திரும்பிய ரிலையன்ஸ் நிறுவனம்

Mukesh Ambani continues to grow in 2020

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் (ஆர்.ஆர்.வி.எல்) தமிழகத்திலுள்ள கோயமுத்தூரில் பிரபலமாகத் திகழும் ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர் பிரைவேட் லிமிடெட் கோவை (எஸ்.கே.டி.எஸ்)  இல் 100 சதவீத பங்குகளை  152.5  ரூபாய்க்கு வாங்கியுள்ளது. twitter

அதிகரித்துக்கொண்டே செல்லும் வளர்ச்சி

Mukesh Ambani continues to grow in 2020

முகேஷ் அம்பானி (63)  என்னும் மிகப்பெரிய தொழிலதிபர் தொழில்நுட்பம் மற்றும் சில்லறை விற்பனை வளர்ச்சியை மேம்படுத்த திட்டமிட்டு வருகிறார். இவர் கொண்டு வரும் எந்த ஒரு திட்டத்திற்கும் சர்வதேச நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு முதலீடு செய்கின்றன இதனால் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு வருங்காலங்களில் உயர்ந்து கொண்டே செல்லும். ஏனென்றால் இந்தியா 100  கோடிக்கு  அதிகமான மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய சந்தையாக விளங்குகிறது.

Leave a Comment