தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மாற்றப்பட்டுள்ள 5 முக்கியமான அம்சங்கள்(National pension scheme 5 big benefit in tamil)
இன்றைய சூழலில் எல்லா மக்களும் எதிர்பார்க்கும் ஒரு முடிவு என்றால் அது 60 வயதிற்கு மேல் பணத்திற்கு என்ன செய்வது என்பது மட்டுமே இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு அஞ்சல் அலுவலகம் மூலம் பல திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது
மத்திய அரசு 2004 ஆம் ஆண்டு அரசு அலுவலர்களுக்கு மட்டுமே ஓய்வூதியத் திட்டத்தினை அறிமுகம் செய்தது ஆனால் நாட்டில் தனியார் துறையில் வேலை செய்யும் நபர்கள் மற்றும் சுய தொழில் செய்யும் நபர்கள் 60 வயதிற்கு பிறகு சரியான பண வரத்து இல்லாமல் கஷ்டப்படுவதாகவும்.
அதற்கு ஒரு தீர்வு வேண்டும் என பலதரப்பட்ட மக்களிடம் இருந்து ஒரு கோரிக்கை தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது 2009ஆம் ஆண்டு மத்திய அரசு நாட்டில் உள்ள அனைத்து மக்களும் அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.
என்ற ஒரு அறிவிப்பினை வெளியிட்டது இது மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்று இப்போது சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது நமது நாட்டில்.
முதியோர்களின் நலன் கருதி
நாட்டில் இருக்கும் முதியோர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல நன்மைகளை சேர்த்து வழங்கும் ஒரு திட்டமாக NPS இதனை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த திட்டமானது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு கொண்டிருக்கிறது(PFRDA)
இந்த திட்டத்தில் யார் இணையலாம்
அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், சுய தொழில் செய்யும் நபர்கள், விவசாயம் செய்யும் நபர்கள், தனிநபர்கள், ஏழை மக்கள், என அனைவரும் இந்தத் திட்டத்தில் இணையலாம் அதுமட்டுமில்லாமல் வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும்.
இந்த சேவைகளை பொதுத்துறை வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் வங்கிகள் உட்பட பல நிறுவனங்கள் பொது மக்களுக்கு வழங்கி வருகிறது.
முழு தொகையும் இப்பொழுது பெறமுடியும்
சமீபத்தில் அரசின் இந்த ஓய்வூதிய திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது அவற்றில் முக்கியமாக ஓய்வூதியதாரர்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு முழு தொகையும் பெற முடியும்.
இது முன்னர் ஓய்வூதியத்தை முழுவதும் ஒரே நேரத்தில் பெற முடியாது இதில் 60% மட்டுமே பெறமுடியும் மீதமுள்ள 40 % நீங்கள் வருடாந்திர திட்டத்தில் கண்டிப்பாக வைக்க வேண்டும் இதன் மூலம் மாதந்தோறும் உங்களுக்கு ஒரு தொகை கிடைத்துக்கொண்டே இருக்கும்.
நிபந்தனைகளை தெரிந்து கொள்ளுங்கள்
இந்த திட்டம் குறித்து வல்லுநர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள் அதில் அவசர நிலைக்கு மட்டுமே பணத்தை கொடுக்க வேண்டும் மற்ற காரணங்களுக்கு கொடுக்கக்கூடாது. தொகை 5 லட்சம் ரூபாய் வரை இருந்தால் மட்டுமே வருடாந்திர ஓய்வூதிய திட்டத்தை பெறாமல் முழு தொகையையும் திரும்பப் பெற முடியும்.
வயது அதிகரிக்கப்பட்டுள்ளது
இதற்கு முன்பு இந்த ஓய்வூதிய திட்டத்தில் அதிகபட்சமாக வயது 65 வரை இருந்தது இப்பொழுது வயது 70 வயதாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் முதிர்வு வயது 75 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது அதோடு அரசின் இந்த திட்டத்தில் பல புதிய சலுகைகளும் உள்ளதால் முதிர்வு காலத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த திட்டமாக மக்களால் கருதப்படுகிறது
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
பணத்தை முன்கூட்டியே பெற முடியும்
தேசிய ஓய்வூதிய கணக்கிலிருந்து ஒரு நபர் முதிர்வுக்கு முன்பு ஒரு தொகை பெற முடியும் அது முன்னதாக 1 லட்ச ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டது ஆனால் இப்பொழுது 2 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது
TN Ration shop 2400 vacancy full details
இளமையிலே திட்டமிடுங்கள்
நீங்கள் இளம் வயதிலேயே இந்த திட்டத்தில் சேமிக்கத் தொடங்கினால் முதிர்வு காலத்தில் உங்களுக்கு மிகப்பெரிய தொகை கிடைப்பது உண்மையான விஷயம் உங்கள் வயதின் அடிப்படையில் இந்த தொகைகள் மாறுபடலாம் அதனால் முடிந்த அளவிற்கு நீங்கள் இளமையாக இருக்கும்போதே ஒரு கணிசமான தொகையை இதில் சேமிக்கத் தொடங்குங்கள்