NEEDS Scheme useful details 2022 in tamil
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்..!
தமிழ்நாட்டில் புதிதாக அதிகமான இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்குவதற்காக.
தமிழ்நாடு அரசு, புதிய தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் புதிய தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தில் 5 லட்சம் முதல் 1 கோடி வரை கடன் உதவி வழங்கப்படுகிறது.
இதில் அரசு மானியம் உதவியாக தொழில் திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடு, அதிகபட்சமாக 25 லட்சம் வரை மானியமாக வழங்கப்படுகிறது.
சரி இந்த திட்டத்தை பற்றி முழு விவரங்களையும் இந்த கட்டுரை மூலம் தெரிந்து கொள்வோம்.
இந்த திட்டத்தின் நோக்கங்கள் என்ன
இந்த NEEDS (New Entrepreneur – Cum Enterprise Development Scheme) திட்டம் படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளித்து.
நிதி நிறுவனங்கள் மூலம் கடனுதவி வழங்கி புதிய உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள் தொடங்க உருவாக்கப்பட்ட இது ஒரு சிறந்த திட்டமாகும்.
திட்டத்தின் மதிப்பீடு தொகை எவ்வளவு
தொழில் தொடங்குவதற்காக திட்ட மதிப்பீட்டுத் தொகை குறைந்தபட்சம் ரூபாய் 5 லட்சத்திற்கு மேலும் அதிகபட்சம் 1 கோடி ரூபாய் வரையிலும் இருந்தால் அதற்கான முதலீட்டை இந்த திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
மானியத் தொகை எவ்வளவு கிடைக்கும்
அரசு மூலம் வழங்கப்படும் மானிய உதவித் தொகை இந்த திட்டத்தில் 25% அதாவது அதிகபட்சமாக 25 லட்சம் மற்றும் 3 சதவீதம் வட்டி மானியமாக இதில் வழங்கப்படுகிறது.
வயது வரம்பு என்ன
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
அதிகபட்சமாக பொது பிரிவினருக்கு 35 வயதும்.
அதிகபட்சமாக இதர சிறப்புப் பிரிவினருக்கு 45 வயதும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி என்ன
NEEDS Scheme useful details பட்டயப் படிப்பு மற்றும் குறைந்தபட்சம் ITI அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களின், மூலம் தொழில்சார் பயிற்சி படித்தவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப தொகை எவ்வளவு
பொதுப்பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதமும் இதர சிறப்புப் பிரிவினருக்கு மதிப்பீட்டில் 5 சதவீதமும் பங்களிக்க வேண்டும்.
இட ஒதுக்கீடு முறை எவ்வளவு
NEEDS Scheme useful details ஆதி திராவிடருக்க 18 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
பழங்குடியினருக்கு 1 சதவீதம் மற்றும் மாற்றுத்திறனாளிக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் மேற்கண்ட தகுதி உள்ள ஆதரவற்ற மற்றும் கணவனால் கைவிடப்பட்ட மகளிருக்கு முன்னுரிமை கொடுத்து 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் உள்ள நிபந்தனைகள் என்ன
NEEDS Scheme useful details புதிதாக தொழில் துவங்கப்படும் தொழில்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் மூலம் வாங்கப்படும் பாரத பிரதமரின் சுயவேலை வாய்ப்புத் திட்டம் (PMRY).
பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP)
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP).
கிராமப்புற வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம், மகளிர் சுய உதவி குழுக்கள், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் போன்ற திட்டங்களின் கீழ்.
மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்றிருப்பவர்கள் இந்த திட்டத்தில் கடனுதவி பெற இயலாது.
மேலும் நீங்கள் ஏற்கனவே கல்வி உதவித்தொகை அல்லது மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்ந்த உதவி தொகை பெற்று இருந்தால் இதில் விண்ணப்பிக்க முடியாது.
வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் ஆகிய நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதவர்கள் இதில் விண்ணப்பிக்க முடியாது.
தொழில் தொடங்க விண்ணப்பிக்கும் நபர் குறைந்த பட்சம் தமிழ்நாட்டில் 3 ஆண்டுகள் தொடர்ந்து வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
வியாபாரம் சார்ந்த தொழில்கள் (பலசரக்கு கடை, மளிகை கடையில் பொருட்களை வாங்கி விற்கும் தொழில்) தொடங்க இந்த திட்டத்தில் அனுமதி இல்லை.
படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் மற்றும் தொழில் செய்து கொண்டிருக்கும் நபர்கள் அவர்களுடைய தொழிலை மேலும் விரிவாக்கம் செய்வதற்கு இதில் அனுமதி கோர முடியாது.
இறைச்சி சம்பந்தப்பட்ட தொழில்கள், போதை பொருட்கள் சார்ந்த தொழில்கள், தோட்ட செடிகள், மீன், ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, மது பரிமாறும் உணவு விடுதிகள், மலர்செடிகள், பாலிதீன் பை, தயாரித்தல் போன்ற தொழில்களை தொடங்க இந்த திட்டத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை கடனுதவி பெற தேர்வு செய்யப்பட்ட தொழில் முனைவர் ஒரு மாத தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியை கட்டாயம் பெறவேண்டும்.
மேலும் பல்வேறு வகையான நிபந்தனைகள் அளிக்கப்படுகிறது அதாவது சில தொழில்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் கடனுதவி மறுக்கப்படுகிறது.
அதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள www.msmeonline.tn.gov.in.needs என்ற இணையதள முகவரிக்கு சென்று பார்வையிடுங்கள்.
விண்ணப்பிக்க வேண்டிய இடங்கள்
NEEDS திட்டம் மூலம் நிதி உதவி பெற உங்களுடைய மாவட்ட தொழில் மையத்தை அணுகி விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட தொழில் மையங்கள் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் அமைந்துள்ளது.