Neethi katchi enral enna best tips 2022
நீதிக்கட்சி என்றால் என்ன?நீதிக்கட்சி கொண்டு வந்த திட்டத்தால் 100 ஆண்டு கழித்து பயனடையும் தமிழகம்,நீதிக்கட்சியின் வரலாறு என்ன..!
இன்று இந்தியாவில் தமிழ்நாடு மிகச் சிறந்த மாநிலமாக இருப்பதற்கு முக்கிய காரணம் நீதிக்கட்சித் தான்.
நீதிக்கட்சி முதன்முதலாக தமிழகத்தை ஆட்சி செய்த போது பல்வேறு வகையான சிறந்த திட்டங்களை கொண்டு வந்தது.
நீதிக்கட்சி ஆட்சியில் தான் அறநிலை பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.
காவிரி நீர் பங்கீடு ஒப்பந்தம் செய்யப்பட்டது,பெண்கள் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை கொண்டுவரப்பட்டது.
அனைவருக்கும் கல்வி, சமத்துவம், என பல்வேறு திட்டங்களை நீதிக்கட்சி தான் கொண்டு வந்தது.
நீதிக்கட்சி என்றால் என்ன?
தென்னிந்திய நல உரிமை சங்கம் என்ற பெயரில் உருவாகி நீதிக்கட்சி என அழைக்கப்பட்ட பேரியக்கம் நவம்பர் 20,1916ல் தோற்றுவிக்கப்பட்டது.
அனைவருக்கும் சம உரிமை, சமநீதி,சமத்துவம்,கோட்பாடு, நிலைபெற தோற்றுவிக்கப்பட்ட நீதிக்கட்சி ஆட்சியில் தான் வகுப்பு உரிமை ஆணையம் நடைமுறைக்கு வந்தது.
இதன் மூலம் கோடான கோடி பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.
நீதிக்கட்சி அரசால் இந்திய நாட்டிற்கு சமூகநீதி கொண்டுவரப்பட்டது திராவிட இயக்கம் என்ற பெருமை வரலாற்றின் பொன்னேடுகள் பொறிக்கப்பட்டுள்ளது.
நீதிக்கட்சி கொண்டுவந்த சென்னை தொடக்கக் கல்வி சட்டம் 1920ல் ஆண் பெண் குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தியது.
அனைவருக்கும் வேலைவாய்ப்பு கல்வி சமவாய்ப்பு
பெரும்பாலான அரசு கல்லூரிகளில் பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு இடம் கிடைக்காத சூழ்நிலை இருந்துவந்தது.
அரசு பணிகளில் மட்டும் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு பங்களிப்பு போதாது.
அரசு பணிகளில் நுழையும் தகுதியை உருவாக்கும் கல்வித் துறையிலும் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும் என மாணவர்களை கல்லூரியில் சேர்க்க நீதிக்கட்சி புதிய திட்டத்தையும் கொண்டு வந்து.
அதனை நடைமுறைப்படுத்தி ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்த குழந்தைகளும் மேல்படிப்புக்கு செல்ல வழிவகை ஏற்படுத்தியது நீதிக்கட்சி மட்டுமே.
அதனாலதான் இன்று இந்தியாவில் பள்ளிக் கல்வி முடித்த பிறகு அதிகமான மாணவர்கள் கல்லூரியில் சேரும் முதல் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
கல்லூரியில் குழுக்கள் அமைக்கப்பட்டது
ஒவ்வொரு கல்லூரியிலும் நீதிக்கட்சி ஒரு குழுவை அமைத்து அதன் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் கல்லூரி தலைவர் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற கூடாது என்ற ஒரு ஆணையை பிறப்பித்தது.
இதன்மூலம் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மாணவர்களும் முதன்முதலில் கல்லூரிப்படிப்பை படிக்கத் தொடங்கினார்கள்.
பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் ஆற்றிய பங்களிப்புக்கள் அதிகம்.
பெண்கள் கல்விக்காக பெண்களுக்கான ஆசிரியர் பயிற்சி கல்வி நிலையங்களை தொடங்கி வைத்தது நீதிக்கட்சி.
பெண்கள் 10ம் வகுப்புவரை படிப்பதற்கு கட்டணமில்லாத இலவச கல்வி வழங்குவதற்கு நீதி கட்சி பல்வேறு முயற்சிகளை எடுத்து அதில் வெற்றியும் பெற்றது.
பெண்கள் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை
Neethi katchi enral enna best tips 2022 சென்னை மாகாண பெண்கள் 1921இல் முதல் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை நீதிக்கட்சி பெற்றுக்கொடுத்தது.
இந்தியாவிலேயே முதன்முதலில் பெண்கள் வாக்களிக்கும் உரிமை பெற்ற மாநிலமாக தமிழகம் இருந்தது அதற்கு நீதிக்கட்சி தான் முழுப் பொறுப்பு.
பொதுத்துறையில் தாழ்த்தப்பட்டோர் உட்பட எல்லா மக்களுக்கும் உரிய இடங்கள் வழங்கப்பட்டால்தான் தாழ்த்தப்பட்ட,ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு பணி உயர்வு.உயர் பதவி,நியமனங்களும் வழங்கப்பட்டது.
பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டது
Neethi katchi enral enna best tips 2022 தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் கருதி தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கு அவர்களின் எண்ணிக்கையை உயர்த்தப்பட்டது.
கூடுதல் நிதி அளிக்கும் சலுகைகள் வழங்கப்பட்டன நீதிக்கட்சி ஆட்சியில் தான் அறநிலை பாதுகாப்பு சட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டது.
தேவதாசி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டது,பணியாளர் தேர்வு வாரியம் 1924இல் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேட்டூர் அணை கட்ட ஒப்பந்தம்
Neethi katchi enral enna best tips 2022 இதுவே இந்தியாவின் முதல் பொதுப்பணித்துறை தேர்வாகும் 1924இல் பனகல் அரசர் காலத்தில் தான் சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் சமஸ்தான அரசுக்கும் இடையே காவிரி நீர் பங்கீடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அதன் பயனாக மேட்டூர் அணை கட்ட திட்டம் உருவாக்கப்பட்டு இந்திய ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற்று மேட்டூர் அணை கட்டப்பட்டது.
Neethi katchi enral enna best tips 2022 இதன்மூலம் தமிழ்நாடு வேளாண்மையில் முதன்மை மாநிலமாக இன்றுவரை இருக்கிறது.
நீதிக்கட்சி ஏற்படுத்திய தாக்கத்தால் தமிழகத்தில் மிகப்பெரிய ஒரு புரட்சி அமைதியாக நடைபெற்றது.
அந்தப் புரட்சியின் மூலம் கல்வி,வேலைவாய்ப்பு,விவசாயம், அனைத்தும் தமிழகத்தில் இப்பொழுது அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமாக கிடைக்கிறது.