Nethili meen health benefits 5 list in Tamil

நெத்திலி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்(Nethili meen health benefits 5 list in Tamil)

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இன்றைக்கு நெத்திலி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

மீன் வகைகளில் மிகவும் குறைந்த விலையில் கிடைப்பது நெத்திலி மீன் மற்றும் மத்தி மீன், சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று தான் இந்த மீன்.

ஒவ்வொரு மீன் வகைகளிலும் எண்ண முடியாத அளவிற்கு ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. நம்மில் பெரும்பாலானோர் இறைச்சி வகை உணவுகளையே பெரிதும் விரும்பி எடுத்துக் கொள்கிறோம்.

இறைச்சிகளை விட மீன் உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது இப்போது அதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.

Nethili meen health benefits 5 list in Tamil

இதயத்தை பாதுகாக்கிறது

பாலி அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி என்ற அமிலம் மீனில் அதிகமாக நிறைந்துள்ளது.

இந்த அமிலமானது இருதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது நெத்திலி மீனை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் உங்கள் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் குறைய ஆரம்பித்துவிடும்.

அதுமட்டுமில்லாமல் இந்த மீனில் இருக்கக்கூடிய ஒமேகா-3 இதயத் தமனிகளில் அதிக அளவு கெட்ட கொழுப்பு சேர்வதைக் குறைக்கிறது.

Nethili meen health benefits 5 list in Tamil

சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது

நெத்திலி மீனில் ஃபேட்டி அமிலம், வைட்டமின் ஈ, செலினியம், ஜிங்க், துத்தநாகம், போன்ற சருமத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் உள்ளது.

உங்களுக்கு சரும பிரச்சனைகள் வரக்கூடாது என்று நீங்கள் முடிவு செய்தால், மீன்களை அதிக அளவில் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

குறிப்பாக நெத்திலி மீனை, இதனால் சருமம் சார்ந்த எந்த ஒரு பிரச்சனையும் வராமல் இருக்கும்.

கண்கள் ஆரோக்கியத்திற்கு

உங்களுடைய கண்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு வைட்டமின்-ஏ ஊட்டச்சத்து கட்டாயம் தேவை. நெத்திலி மீனை வாரம் இரண்டு முறை நீங்கள் சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் விரைவில் குறைய ஆரம்பித்துவிடும் கண்பார்வையும் மேம்பட தொடங்கும்.

உடல் எடை பராமரிக்க

இந்த நெத்திலி மீனில் கலோரிகள் குறைவாகவும், புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே உடல் எடை அதிகம் உள்ளவர்கள் இந்த நெத்திலி மீனை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை கூடாது அதுமட்டுமில்லாமல் தேவையற்ற கொழுப்பு குறைய ஆரம்பித்துவிடும்

👉     Click here to view YouTube channel

எலும்புகள் மற்றும் பற்களுக்கு

உங்களுடைய பற்கள் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான அதிகமான கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. நீங்கள் உங்களுடைய எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால்.

👉     Learn about the benefits of 8 shaped walking

வைட்டமின் ஏ சத்தும், கால்சியம், அதிகம் நிறைந்துள்ள இந்த நெத்திலி மீனை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் எலும்பு மற்றும் பற்கள் பலமாக மாறும்.

Leave a Comment