அமேசான் நிறுவனத்தில் புதிதாக 20 லட்சம் வேலைவாய்ப்புகள் 2025 ஆம் ஆண்டுக்குள் திட்டம்( new 20 lakh job opportunities amazon planned)
உலகின் முன்னணி இ-காமர்ஸ் அமேசான் நிறுவனம் சில ஆண்டுக்குள் சுமார் ஒரு கோடி சிறிய மற்றும் பெரிய வணிக தளங்களை டிஜிட்டல் மயமாக திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இதன் மூலம் சுமார் 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் செயல்பட்டு வரும் e-commerce தொழில் நிறுவனங்கள் அனைத்தும் வருகின்ற 2030ஆம் ஆண்டிற்குள் சுமார் 12 மில்லியன் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க இலக்கு வைத்து உள்ளதாக தெரிவித்துள்ளது.
அதற்கு முன்பு குறைந்தது 2025ஆம் ஆண்டுக்குள் அமேசான் நிறுவனம் 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டு அதற்கான வேலைகள் தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இப்பொழுது ஒரு கோடி சிறு, நடுத்தர மற்றும் பெரிய வணிகங்களை மேம்படுத்தவும் மின் வணிகம் மற்றும் டிஜிட்டல் கட்டண தளத்தில் புதிதாக ஒரு கோடி உள்ளூர் கடைகளை டிஜிட்டல் மயமாக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அமேசான் நிறுவனம் இந்தியாவின் உள்ளூர் வணிகர்களுக்கு உதவுவதற்கு சுமார் 74,113 கோடி அறிவித்துள்ளது. இந்தியாவில் அமேசான் விற்பனையாளர் தளம் தற்போது 8.5 லட்சத்தை தாண்டி உள்ளதாகவும்.
அதில் கடந்த 18 மாதங்களுக்குள் 3 லட்சம் புதிய வணிகங்கள் சேர்ந்து உள்ளதாகவும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் வணிகங்கள் மற்றும் விற்பனையாளர்களான இந்தியர்கள் தங்களது அன்றாட வாழ்வில் டிஜிட்டல் சேவைகளை அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.
இந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு அமேசான் பங்களிப்பு ஒரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது அதன்படி இன்று சுமார் 70,000 மேற்பட்டவர்கள் அமேசான் மூலம் தங்களுடைய பொருட்களை உலகளவிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.
Benefits of having sex for pregnant women
இவை அனைத்தும் கடந்த 6 ஆண்டுகளாக மட்டுமே இந்தியாவில் நடைபெறுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் ஏற்றுமதிக்கு புதிய 22,237 வருவாய் கிடைத்துள்ளது.
அதேநேரம் அமேசான் பே தளத்தின் மூலம் இதுவரை 50 லட்சத்திற்கு அதிகமான சிறு வணிகர்கள் இணைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள்.
8 Amazing Benefits of Eating Tuna fish
அமேசான் நிறுவனம் இந்தியாவில் தனது வர்த்தகத்தை தொடங்கிய பிறகு இணையதள விற்பனை என்பது பல மடங்கு அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் வருகின்ற 2030ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் வர்த்தகம் 60 சதவீத அளவிற்கு இணையதளம் மூலமே நடைபெறும் என குறிப்பிட்டுள்ளது.