New 4 Neet exam centre in Tamilnadu this year

தமிழகத்தில் கூடுதலாக இந்த ஆண்டு முதல் 4 நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்(New 4 Neet exam centre in Tamilnadu this year)

இன்று மத்திய அமைச்சரவையில் இருந்து வெளிவந்த ஒரு செய்தியில் தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் புதிதாக 4 நீட் தேர்வு மையங்கள் அமைக்க முடிவு செய்திருப்பதாக மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் ஒரு அறிக்கையை செய்தி வாயிலாக வெளியிட்டார்

நீட் தேர்வு பற்றிய முழு விவரம் வெளியிட மத்திய அரசு

உலகத்திலே நடக்கும் மிகப் பெரிய நுழைவுத்தேர்வு என்றால் அது இந்தியாவில் நடக்கும் நீட் தகுதித்தேர்வு என்று சொல்லலாம் ஏனென்றால் இந்த தேர்வில் சுமார் 16 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள்

இந்தியாவில் தேசிய தகுதி மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட்  வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படுகிறது மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இளங்கலை மருத்துவ படிப்பில் சேர முடியும்

New 4 Neet exam centre in Tamilnadu this year

இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக  நீட் நுழைவுத்தேர்வு வழக்கத்தை விட தாமதமாக நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

வருகின்ற செப்டம்பர் 12ஆம் தேதி நீட்தேர்வு இந்தியா முழுவதும் நடத்தப்படும் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மத்திய அமைச்சரவை அறிவித்தது இதற்கான விண்ணப்ப பதிவு ஜூலை மாதம் 13ஆம் தேதி மாலை 5 மணி முதல் தொடங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது

மாணவர்கள் இந்த தேர்விற்கு செப்டம்பர் மாதம் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது மேலும் கூடுதலாக நடப்பாண்டில் நீட் தேர்வு வினாத்தாள் அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும் மருத்துவத் துறை அறிவித்துள்ளது

New 4 Neet exam centre in Tamilnadu this year

தமிழகத்தில் கடந்த ஆண்டு வரை 14 நீட் தேர்வு மையங்கள் இருந்தது மத்திய அமைச்சரவை இந்த ஆண்டு மேலும் 4 தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளது அதன்படி செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், உள்ளிட்ட நகரங்களில் புதிதாக 4 தேர்வு மையங்கள் அமைக்க இருப்பதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க

டெல்லியில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மேலும் 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்க இருப்பதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது

how to get best intense romance in Tamil 2021

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழகம் முழுவதிலும் இருந்து இதற்கான குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது இதற்கு சரியான தீர்வு கிடைக்கும் என்பது காலம் தான் பதில் சொல்லும்

Leave a Comment