60,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்பினை உறுதி செய்த தமிழக அரசு.!!!(New Amazing IT Park Coimbatore 2020)
தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் கோவை மாவட்டத்தில் புதிய தொழில் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இதன் மதிப்பு சுமார் 114 கோடி ஆகும் அதிக பொருட் செலவில் கட்டப்படும் இந்த தொழில் பூங்கா வினால் தமிழகத்தில் புதிதாக 60 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
நம் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு முக்கியமான ஒரு பிரச்சனை என்றால் அது வேலை வாய்ப்பு மட்டுமே பள்ளி, கல்லூரிகளில் முதல் மதிப்பெண் பெரும் இளைஞர்கள் வேலைவாய்ப்பில் அதற்கான வாய்ப்பு இல்லாமல் அல்லது சரியான வழி தெரியாமல் இருக்கிறார்கள். இதனை போக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தீவிர முயற்சிகளை எடுக்கிறது குறிப்பாக மனிதவள மேம்பாடு துறைக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கிறது நமது அரசு இருந்தாலும் வேலைவாய்ப்பு பிரச்சனையை தீர்க்க முடியாமல் திணறுகிறது நமது அரசுகள்.
தமிழக அரசு தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்த கடந்த ஜூலை மாதம் புதிய வலைதளத்தை ஒன்றை அறிமுகம் செய்தது www.Tamil Nadu Private job portal.com அதன்மூலம் தனியார் துறையில் உள்ள வேலைவாய்ப்பினை அந்தந்த துறைகள் பதிவேற்றம் செய்ய கூடிய வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் குறிப்பிட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இப்பொழுது கிடைத்துக் கொண்டிருக்கிறது.
தமிழக அரசு எடுத்துள்ள பல்வேறு முயற்சிகள்.
கொரோனா வைரஸ் காரணமாக சீனாவிலிருந்து பல்வேறு நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலையை வேறு நாட்டுக்கு மாற்றுகிறது இதனை அறிந்த தமிழக அரசு ஆப்பிள் நிறுவனத்துடன் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தி ஆப்பிள் நிறுவன தொலைபேசிகளை சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் தயாரிக்க ஒப்பந்தம் செய்தது. இதன் மூலம் குறிப்பிட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.TATA நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் மூலம் ஓசூரில் ரூபாய் 7,000 கோடி ரூபாய்க்கு எலக்ட்ரிக்கல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவங்கியுள்ளது TATA நிறுவனம்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து கொண்டு வருகிறது. அதன் வகையில் 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவை மாவட்டத்தில் புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதன் மூலம் மதுரை, திருச்சி, திருப்பூர், தமிழகத்தின் இரண்டாம் கட்ட நகரங்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்த இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது தமிழக அரசு.
கோவை மாவட்டம் சரியான தீர்வு.
மத்திய மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இல்லாமல் தங்களின் சொந்த முயற்சியால் உலகில் மிகப்பெரிய பம்ப் (Pump) உற்பத்தி மையமாக கோவை மாவட்டம் திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொத்த பம்ப்களில் (Pump) 43.5 % இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக சென்னைக்கு அதிக அளவில் இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்படுகிறது இதனால் தொழில்துறை நிறுவனங்கள் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பாதிப்படைகிறது இதனை கருத்தில் கொண்டு புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கு கோவை மாவட்டத்தை தேர்வு செய்துள்ளது தமிழக அரசு,
கோவை மாவட்டம் விளாங்குறிச்சி சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் ரூபாய் 114 கோடி மதிப்பீட்டிலான தொழில் பூங்கா ஒன்று அமைக்கப்பட உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது மேலும் திருச்சி மாவட்ட நவல்பட்டு சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் 48 கோடி மதிப்பிலான மற்றொரு புதிய தொழில் பூங்கா அமைக்கப்படும் இதனை தமிழக மின்னணு நிறுவனம் நிறுவுகிறது.
ஓராண்டுக்கு 3 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை லாபம் பார்க்க முடியும் இந்த தொழிலில்.!!!
60,000 பேருக்கு வேலைவாய்ப்பு.
இந்தப் புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்கா மூலம் நேரடியாக மற்றும் மறைமுகமாக 60 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழக அரசு நடத்திய முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் இந்த வாய்ப்பு அமைந்துள்ளது.