New app introduced for ration card 2022
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி மத்திய அரசின் புதிய செயலி அறிமுகம்..!
மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக மேரா நேஷன்.
செயலி பதிவிறக்கம் பயன்பாடு மற்றும் அம்சங்கள் பற்றி விரிவான தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.
மேரா நேஷன் செயலி
இந்தியா முழுவதும் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, திட்டத்தை இந்திய அரசாங்கம் சில மாதங்களுக்கு முன்பு நாட்டில் அறிமுகப்படுத்தியது.
புது இடத்திற்கு இடம்பெயர் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தக்க வைக்க உதவும் வகையில், இந்த திட்டம் இந்தியாவில் அமல்படுத்தப்படுகிறது, என மோடி தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.
மேலும் ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒரே ரேஷன் கார்டை பயன்படுத்த உதவி செய்கிறது.
இந்த சேவையைப் பெறுவதற்கு கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆண்ட்ராய்டு போன்களில் இதற்கான பிரத்யேகமான செயலியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பிடிஎஸ் எனப்படும் பொதுவிநியோக முறை மூலம் உணவு தானியங்களை பெறுவது வழக்கம்.
ஆனால் அவர்கள் வெவ்வேறு மாநிலங்களுக்கு செல்லும் போது PDS நன்மைகளைப் பெறுவதில் சில பெரிய தடங்கள் அல்லது சிக்கல்கள் ஏற்படுகிறது.
இந்தச் சிக்கல்கள் அனைத்தும் மேரா நேஷன் செயலி மூலம் தீர்க்கப்படும் பயனாளிகள், இதன் மூலம் நாடு முழுவதும் ரேஷன் கார்டு சேவைகளை எளிமையாக பெற முடியும்.
கூடுதலாக பயனாளர்கள் தங்கள் விரல் நுனியில் அனைத்து நன்மைகளையும் பெற முடியும்.
அவர்களின் தற்போதைய பரிவர்த்தனைகள் மற்றும் அவர்களின் உரிமை விவரங்களை அனைத்தும் எளிமையாக சரிபார்த்துக் கொள்ள முடியும்.
ஆரம்பத்தில் இந்த செயலியில் இந்தி மற்றும் ஆங்கில மொழி மட்டுமே இருந்தது, ஆனால் இப்போது 10க்கு மேற்பட்ட இந்திய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
மேரா நேஷன் செயலியின் புதிய அம்சங்கள் என்ன
பதிவு
பயனாளர்கள் தங்கள் ரேஷன் கார்டு எண்ணை சமர்ப்பிக்க இதன்மூலம் செயலில் தங்களை பதிவு செய்து கொள்ள முடியும்.
பயனாளர்கள் தங்கள் இருப்பிடத்தை தொலைபேசியில் இயக்குவதன் மூலம் அவர்களுக்கு அருகில் அமைந்துள்ள நியாயவிலைக் கடைகளை பற்றி தெரிந்துகொள்ள முடியும்.
ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, வசதி உள்ள மாநிலங்களில் பயனாளர்கள் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பரிவர்த்தனைகள் என்ன
ரேஷன் கார்டு எண்ணை உள்ளிடுவதன் மூலம் பயனாளிகளிள் பரிவர்த்தனை விவரங்களையும் பெறலாம்.
தகுதிகள்
ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டு எண்ணை பயன்படுத்தி காரரின் தகுதியை சரிபார்க்க முடியும்.
TNPSC 5000+ காலிப்பணியிடங்களுக்கு இணையதளம்
ஆதார் பதிவு எண்
ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டு எண்ணை வழங்கும் அதே முறையில் ஆதார் பதிவு செய்து கொள்ள முடியும்.
how to apply new uzhavar Card online 2022
உள்நுழைவு
பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் மூலம் நீங்கள் வசிக்கும் தற்போதைய மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகளால் உள்நுழைவு செய்யப்படுகிறது.