New Ayushman Bharat Yojana health ID 2021

New Ayushman Bharat Yojana health ID 2021

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் எனும் புதிய திட்டத்தை அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி செங்கோட்டையில் இந்த திட்டத்தினை பற்றிய அறிவிப்பு அறிவிக்கப்பட்டு சோதனையை திட்டமாக 6 யூனியன் பிரதேசங்களில் நடைமுறை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் நாடு முழுவதும் இந்த திட்டத்தை அமலாக்கம் செய்ய உள்ளார்.

நாட்டில் இருக்கும் தேசிய சுகாதார ஆணையம் (NHA) அறிமுகம் செய்த ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜான் ஆரோக்கிய திட்டம் 3 ஆண்டுகள் முடிந்த.

அதே நாளில் மோடி பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் மிஷன் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளார் என்பது ஒரு கூடுதல் சிறப்பாக அமைகிறது.

சரி பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் திட்டம் என்பது என்ன இந்த திட்டம் மூலம் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது என்பதை முழுமையாக இந்த கட்டுரையில் காணலாம்.

New Ayushman Bharat Yojana health ID 2021

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் சேவை

ஜான் தான், ஆதார் மற்றும் தொலைபேசி எண் ஆகிய மூன்று டிஜிடல் தளத்தை அடிப்படையாக கொண்டு கூடுதலாக சில டிஜிட்டல் சேவைகளுடன் உருவாக்கப்பட்ட திட்டம் தான் இந்த ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சேவை திட்டம்.

மக்களின் சுகாதாரம் சார்ந்த பல தரவுகள், தகவல்கள் சேகரிப்பு, உள்கட்டமைப்பு, சேவைகள் திறனை மேம்படுத்துதல், பல தளத்துடன் இணைந்து இயங்க கூடிய தளத்தை உருவாக்க உதவும், அதே வேலையில் பாதுகாப்பு, இரகசியத்தன்மை, தனி உரிமை, தரவுகளை நிர்வாக செய்யப்படும் திட்டம் தான் இந்த ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சேவை.

New Ayushman Bharat Yojana health ID 2021

சுகாதாரத் தரவுகள்

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் சேவை மூலம் மக்களின் சுகாதார தரவுகளை அவர்களின் அனுமதியுடன் மட்டுமே பயன்படுத்தமுடியும்.

அதுமட்டுமில்லாமல் இத்துறை அமைப்புகள் மத்தியில் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பது முக்கிய இலக்காக அமைந்துள்ளது நாட்டிற்கு.

சுகாதார அட்டை

பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் சேவை மூலம் ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஒரு சுகாதார அட்டை உருவாக்கப்படும்.

இந்த சுகாதார அட்டை ஒரு வங்கிகணக்கு போல இயங்கும், இந்த கணக்கில் ஒருவரின் உடல் நலம் குறித்த தகவல்கள் சேமிக்கப்படும் மேலும் சேமிக்கப்படும் தரவுகள் உங்களுடைய கைபேசி வாயிலாக எளிதாக நீங்கள் சோதனை செய்து கொள்ளலாம்.

தகவல் களஞ்சியம்

இந்தத் தரவுகளை மருத்துவ சேவை அளிக்கும் நிறுவனங்கள் மற்றும் களஞ்சியம் பயன்படுத்த முடியும்.

👉  முகக்கவசம் அணிந்தால் வாய் துர்நாற்றம் அடிக்கிறதா

ஒரே தளம் அல்லது ஒரே இடம்

இந்தக் கட்டமைப்பு மூலம் அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மருத்துவ சேவை அளிக்கும் அமைப்புகள், இணைந்து எளிதாக தொடர்புகளை செய்து கொள்ளலாம், அதுமட்டுமில்லாமல் வர்த்தகம் செய்து கொள்ளலாம் மற்றும் கண்காணிப்பில் வைக்க முடியும் என தெரிகிறது.

👉     Click here to view our YouTube channel

ஆதார் அட்டை போன்று

இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள அனைத்து மக்களின் சுகாதார அமைப்பு அல்லது ஒவ்வொருவரின் உடல் நலம் குறித்து அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

👉   which fixed deposit best in India 2021

ஆதார் அட்டை போன்று நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களுக்கும் விரைவில் சுகாதார அட்டை வழங்குகிறது மத்திய அரசு. இதை வைத்து மாநில மற்றும் மத்திய அரசுகள் வழங்கும் மருத்துவ காப்பீடு, அவசர காலங்களில் எளிதாக இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Leave a Comment