New Best scheme Stalin started village 2022
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்..!
தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள 1997 கிராம பஞ்சாயத்துகளில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் பயன்பெறும் வகையில்.
227 கோடி செலவில் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாட்டு திட்டத்தை ஸ்டாலின் திங்கட்கிழமை தொடங்கி வைத்தார்.
ஐந்து ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் உள்ள 12,524 கிராம பஞ்சாயத்துகளிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும்.
ஊரக வளர்ச்சித்துறை உடன் இணைந்து வேளாண் துறை இணைந்து செயல்படுத்தப்படும் என்றும் திட்டத்தை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின்கீழ் தென்னை மரக்கன்றுகள், வீட்டு வளர்ப்பு மரக்கன்றுகள், தோட்டக்கலை மரக்கன்றுகள், விவசாயத்திற்கு தேவையான இயற்கை மற்றும் செயற்கையான மருந்து தெளிப்பான்.
காய்கறி தோட்டத்திற்கு தேவையான மூலப்பொருட்கள் விநியோகிக்கப்படும், மற்றும் ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு வறண்ட நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு சொட்டு நீர் பாசனம்.
போன்றவற்றுக்கும் 100% மானியம் வழங்கப்படும் மற்றவற்றுடன் பண்ணை குட்டைகளை தோண்டி எடுக்க வேண்டுமென்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்குவதன் மூலம்.
உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை அமைப்பது விவசாயத்துறையில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை வலுப்படுத்த உதவும்.
என்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பிற துறைகளில் ஈடுபடுவதால் கிராமங்களில் தன்னிறைவு பெறும் என்றும் திரு மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி சட்டசபையில்.
விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய அடுத்த 5 ஆண்டுகளில் தொலைநோக்குப் பார்வையுடன் அவர்களின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில்.
மாநிலத்தில் புதிய கலைஞர் அனைத்து கிராமம் ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாட்டு திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
என்ன பயன் கிடைக்கும்
New Best scheme Stalin started இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளின் உற்பத்தி என்பது பல மடங்கு அதிகரிக்கும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரிக்கும் குறிப்பாக பணப்பயிர்கள் நெல், கரும்பு, மஞ்சள், வாழை, போன்றவைகளின் உற்பத்தி அதிகரிக்கும்.
இந்த சட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்களுடைய பொருட்களை நகரங்களுக்கு எடுத்துச் செல்வது குறைக்கப்படும்.