New DellMicro virus coming year details 2022
2022ஆம் ஆண்டை மிரட்ட வரும் டெல்மைக்ரான் என்னும் புதிய வைரஸ் வில்லன்..!
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து வெளியே வருவதற்குள் டெல்டா, வகை உருவாகி அடுத்த அலையை ஏற்படுத்தி, அதில் இருந்து முழுவதும் மீள்வதற்குள் ஓமிக்ரான் வந்து.
தற்போது 2022 ஆம் ஆண்டிற்கான நம்பிக்கையை தவிடுபொடியாகியுள்ளது டெல்மைக்ரான் என்ற புதிய வில்லன் வைரஸ் உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா, ஆல்பா,ஓமிக்ரான், அது என்ன டெல்மைக்ரான் என்று புரிந்து கொள்ள அதிக சிரமப்பட வேண்டாம், உருமாறிய டெல்டா மற்றும் ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ்களின் கூட்டு சேர்க்கை.
இது டெல்டா, ஆல்பா,ஓமிக்ரான், விட அதி தீவிரமாக பரவும் தன்மை கொண்டு இருப்பதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெளிவரும் சில செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிர மாநில கொரோனா வைரஸ் சிறப்பு குழுவை சேர்ந்த மருத்துவர் தெரிவிக்கையில் டெல்மைக்ரான் டெல்டா மற்றும் ஓமிக்ரான்,கூட்டு சேர்க்கையாக இது உள்ளது.
இதன் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் சுனாமி ஏற்பட்டுள்ளது என்று அவர் அறிவித்துள்ளார்.
இது வரை டெல்டா, ஆல்பா,வைரஸ்களால் ஏற்பட்ட வந்த அலைகளையே உலகம் தாங்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் நிலையில்.
டெல்மைக்ரான் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது 2022ஆம் ஆண்டின் மீதான முழு நம்பிக்கையும் தவிடுபொடியாகியுள்ளது.
ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக அதிகரித்து வருவதற்கு டெல்மைக்ரான் முக்கியமானதாக கூறப்படுகிறது.
டெல்டா வகை இந்திய நாட்டில் பரவலாக பரவி இருந்த நிலையில் தற்போது உலகம் முழுவதும் அதிக அளவில் ஓமிக்ரான் பரவி வருகிறது.
ஓமிக்ரான் இந்த நோய் தொற்று முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது, இது பல மடங்கு உருமாற்றம் அடைந்து தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ் தன்மை கொண்டிருப்பதாகும்.
அதே வேளையில் டெல்டா வைரசை விட குறைந்த பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, ஓமிக்ரான் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இதுவரை குறைவாகவே பதிவாகியுள்ளது.
ஆனால் தற்போது டெல்டா மற்றும் ஓமிக்ரான் கூட்டு சேர்க்கையாக டெல்மைக்ரான் இரண்டு வைரஸ்களின் அமைப்பை பெற்றுள்ளது என ஐரோப்பிய நாட்டு மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதையடுத்து தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு உடனடியாக போர்க்கால நடவடிக்கைகளில் தடுப்பு செலுத்துவதிலும், செலுத்தியவர்களுக்கு கூடுதல் தடுப்பூசியும் செலுத்தவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக திட்டமிட்டு வருகிறது.
இந்தியாவின் நிலை என்னவாக இருக்கும்
2020 ஆண்டைவிட 2021 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக கடுமையான பாதிப்பை நம் நாடு கண்டது, இது நம் நாட்டுக்கு மிகப்பெரிய ஒரு வரலாற்றை ஏற்படுத்திவிட்டது.
மார்கழி மாதத்தின் சிறப்புகள் என்ன
இப்பொழுது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளை ஒப்பிடுகையில் நம் நாடு மிகவும் பாதுகாப்பாகவும் சுகாதாரத்துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் மூலமாகவும் இருக்கிறது.
Best two wheeler 10 insurance companies
வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மட்டுமே நம் நாட்டுக்குள் வைரஸ்களை பரப்புகிறார்கள் என்பது ஒரு உண்மையான விஷயம்.
அரசாங்கம் கூறும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றினால் மட்டுமே, உங்களையும் உங்கள் குடும்பத்தையும், நீங்கள் பாதுகாத்துக்கொள்ள முடியும்.