பவுடர் வடிவில் கொரோனா வைரஸுக்கு மருந்து இதனை தண்ணீரில் கலந்து குடிக்கலாம் அவசர பயன்பாட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.( New Drug Has been introduced against covid-19)
மத்திய அரசின் பாதுகாப்பு மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organization) தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையில் பவுடர் வடிவில் கொரோனா நோயாளிகளுக்கு புதிய மருந்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த மருந்துக்கு மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அவசரகால பயன்பாட்டின் அடிப்படையில் ஒப்புதல் அளித்துள்ளது இது சிகிச்சையில் புதிய மைல்கல்லாக அமையும் என நம்பப்படுகிறது இதனால் வரும் காலங்களில் எளிதாக கொரோனா நோய் தொற்றுக்கு மருந்துகள் கிடைக்கும்.
கொரோனா வைரஸின் 2வதுஅலை இந்தியாவை உழுகிக் கொண்டிருக்கிறது அன்றாட பாதிப்பு 4 லட்சத்தை சர்வ சாதாரணமாக கடந்து செல்கிறது மேலும் உயிரிழப்புகளும் தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,187 இறந்துள்ளார்கள்.

இந்தச் சூழலில் இந்தியாவிற்கு இப்பொழுது கொரோனா வைரஸுக்கு எதிரான பேராயுதமாக தடுப்புசி பார்க்கப்படுகிறது இந்தியாவில் தயாரிக்கப்படும் சீராம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்புசி மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பு மருந்துகள் மக்கள் பயன்பாட்டில் உள்ளன மேலும் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசியும் மக்கள் பயன்பாட்டில் உள்ளன.
கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைக்கான மருந்து என்றால் இந்தச் சூழலில் ரெம்டெசிவிர் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது அதனால் இந்த மருந்துக்கு மிகவும் கட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இந்தியாவில்.
இந்த நிலையில்தான் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு கொரோனா வைரசுக்கு எதிராக புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளது இந்தப் புதிய மருந்து பவுடர் வடிவில் உள்ளது.
இந்த மருந்தை தண்ணீரில் கலக்கி குடிக்கலாம் இந்த மருந்தை (டிஅர்டிஓ) ஹைதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் அமைப்புடன் சேர்ந்து உருவாக்கினார்கள் இந்தப் புதிய மருந்துக்கு டிஆக்ஸிடி -குளுக்கோஸ் (2-Deoxy-D -Glucose (2-DG )என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 2020 மே மாதம் முதல் அக்டோபர் வரை இடைப்பட்ட காலகட்டத்தில் இந்த மருந்து இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தெரிவிக்கிறார்கள்.

110 கொரோன நோயாளிகளுக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்டது மருந்தை எடுத்துக்கொண்டால் நோயாளிகள் கொரோனா தொற்றிலிருந்து வேகமாக குணமடைந்து தெரியவந்துள்ளது.
பின்னர் அவர்கள் (ஆர்டிபிசிஆர்) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது நெகட்டிவ் என வந்துள்ளது. இந்த மருந்தின் 3 கட்ட பரிசோதனைகள் தற்போது நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த மருந்து மருத்துவ ஆக்சிஜனை சார்ந்திருக்கும் நிலையை வெகுவாகக் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்ட பின்பு நமது உடலில் நிகழும் மாற்றங்கள் என்ன.
இந்த மருந்து மட்டும் விரைவில் சந்தைக்கு வந்தால் ரெம்டெசிவிர் மட்டுமே நம்பியிருக்கும் சூழல் மாறலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.