அக்டோபர் 1 முதல் மாத சம்பளத்தில் மாற்றம் புதிய தொழிலாளர் சட்டம் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.( New Labour law changes effects in India 2021)
மாதச் சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்களும் கவனிக்க வேண்டிய முக்கியமான செய்தி இது. புதிய தொழிலாளர் சட்டம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் மத்திய அரசு அமலாக்கம் செய்ய உள்ளது. புதிய சட்டம் நடைமுறைக்கு வருவதன் மூலம் ஊழியர்கள் பணியாற்றும் நேரம் அதிகரிக்கும்.
அதேபோல் சம்பளம் பல முக்கியமான மாற்றங்கள் செய்து உள்ளார்கள், குறிப்பாக சில ஊழியர்கள் கையில் பெரும் சம்பளத்தின் அளவு குறையவும் வாய்ப்புள்ளது அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது இந்த சட்டத்தின் மூலம்.
புதிய சட்டம் சொல்வது என்ன.
புதிய தொழிலாளர் சட்டத்தில் ஒரு நிறுவனம் தங்கள் ஊழியர்களின் பணி நேரத்தை தங்களது நிறுவனத்தின் விருப்பத்தின் அடிப்படையில் எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம், தற்போது இருக்கும் 9 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக அதிகரித்துக் கொள்ளலாம்.
இது இந்தியாவில் இருக்கும் அனைத்து நிறுவனத்திற்கும் கட்டாயம் இல்லை அதேபோல் விருப்பத்தின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்து கொள்ளலாம்.
மேலும் பணியாற்றும் நேரத்திற்கு ஈடாக சம்பளமும் அதிகரிக்கிறது இந்த முக்கிய மாற்றம் வருகின்ற அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் இந்தியாவில் நடைமுறைக்கு வருகிறது.
இந்த மாற்றம் மூலம் வாரத்தில் 4 நாள் மட்டுமே வேலை செய்யலாம் என்ற கட்டமைப்பு இந்தியாவில் உருவாக்கப்படும்.
சம்பளம் அடிப்படை 50%
இந்த புதிய தொழிலாளர் சட்டம் கொண்டுவரும் நிபந்தனை என்னவென்றால் ஊழியர்களின் மொத்த சம்பளத்தில் குறைந்தபட்சம் 50% பேசிக் பே சம்பளமாக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கிறது.
சம்பளம் அல்லாத கொடுப்பனவு போன்ற இதர பிரிவுகளில் மொத்த சம்பளத்தில் 50% குறைவாக இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
வருகின்ற அக்டோபர் 1-ஆம் தேதி முதல் இந்தியாவில் பெரும்பாலான ஊழியர்களின் சம்பளம் மாறுபட அதிக வாய்ப்புள்ளது.
பிடிக்கும் தொகை எவ்வளவு.
இந்த புதிய சட்டத்தின் மூலம் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் பிராவிடண்ட் பண்ட் பணத்தின் அளவு அதிகரிக்கும் அடிப்படை சம்பளத்தில் 12+12=24 வருங்கால வருங்கால வைப்பு நிதி கணக்கிற்க்கு பிடித்தம் செய்து செலுத்தப்படும்.
இதனால் ஊழியர்களின் சம்பளம் குறைய அதிக வாய்ப்பு உள்ளது, இருந்தாலும் பிஎஃப் கணக்கு மூலம் ஊழியர்களுக்கு அதிக அளவில் ஓய்வு பெறும் போது பணம் வரும்.
அதிக நேரத்திற்கு கூடுதல் சம்பளம்.
ஒரு ஊழியர் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை கூடுதலாக பணியாற்றிய நேரம் 30 நிமிடம் கணக்கிற்கு எடுத்துக்கொள்ளப்படும். இதன் மூலம் கூடுதலாக பணியாற்றும் ஒவ்வொரு ஊழியருக்கும் சற்று பணம் அதிகமாக கிடைக்கும்.
இடைவெளி கொடுக்க வேண்டும்.
இந்த புதிய தொழிலாளர் சட்டத்தில் ஊழியர்களின் நலனுக்காக 5 மணிநேரத்திற்கு ஒரு முறை கட்டாயம் இடைவெளி கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Click here to view our YouTube channel
ஒவ்வொரு 5 மணிநேரத்திற்கும் ஊழியர் கட்டாயம் குறைந்தது 30 நிமிடம் ஓய்வு எடுக்க வேண்டும் என சட்டமாகவே கொண்டுவரப்பட்டுள்ளது.
Best 5 symptoms of lung cancer in tamil
இது உற்பத்தி தொழிற்சாலையில் பணியாற்றும் உடல்சார்ந்த ஊழியர்களுக்கு மிக நன்மை அளிக்கக்கூடிய விஷயமாகும்.
ஊக்கத் தொகை அதிகரிக்கும்.
பொதுவாக ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் ஒரு நிறுவனத்தில் ஊழியர்களுக்கு 15 நாட்கள் விடுமுறை அளிப்பார்கள் இதை ஊழியர்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் அல்லது அதற்கு சமமான தொகையாக பெற்றுக்கொள்ளலாம் அடிப்படையில் சம்பளம் அதிகரிக்கும் போது இந்த ஊக்கத் தொகையும் அதிகரிக்கும்.