New wage code bill full details in India 2021
மாத சம்பளத்தில் நாளை முதல் முக்கிய மாற்றங்கள் அமலாக்கம் செய்யப்படுகிறது புதிய சட்டத்தினை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
அக்டோபர் 1ஆம் தேதி முதல் புதிய ஊதிய சட்டம் அமல்படுத்தப் படலாம் நாடுமுழுவதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இந்த சட்ட விதிகள் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட இருந்தது,ஆனால் அக்டோபர் 1ஆம் தேதி அமல் படுத்தப்படுவதாக அப்பொழுது தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் நாளை முதல் இந்த புதிய விதிகள் அமல்படுத்தப்படலாம் என்ற நிலை இருந்து வருகிறது.
இப்பொழுது சமூக வலைத்தளங்கள் மற்றும் யூட்யூப் சேனல்களில் இந்த சட்டங்கள் பற்றி பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இந்தப் புதிய சட்டம் நாளை முதல் அமல்படுத்தப்படலாம் என்று கூறி வரும் நிலையில் இதனால் ஊழியர்களின் சம்பளத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது ஊழியர்களுக்கு சாதகமாக இருக்குமா அல்லது பாதகமாக இருக்கும் என்பதை முழுவதும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
புதிய மாற்றங்கள் எப்படி இருக்கும்
புது சம்பள விதிப்படி (New wage code Bill) மசோதா மூலமாக வருங்கால வைப்பு நிதி, கிராஜுவிட்டி,டிஏ,பயன்பாட்டின்படி மற்றும் வீட்டு வாடகை கொடுப்பான என அனைத்திலும் மாற்றம் ஏற்படலாம்.
புதிய தொழிலாளர் சட்டத்தின் மூலமாக வருங்கால வைப்பு நிதி,கிராஜுவிட்டி,டிஏ,பயன்பாட்டின்படி மற்றும் வீட்டு வாடகை கொடுப்பான என என அனைத்துக்கும் 50% மேல் இருக்கக்கூடாது.
அடிப்படை சம்பளம் அதிகரிக்கலாம்
இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் சம்பளத்தில் பங்கு 50% அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும் அவ்வாறு இல்லாமல் 50% க்கும் குறைவாக இருந்தால் அவை மாறிவிடும்.
பல நிறுவனங்களும் அடிப்படை சம்பளத்தை மிகக் குறைவாகக் கொடுத்து மற்ற அலவன்ஸ்களை அதிகமாக கொடுத்து வருகின்றது, இனி அதையெல்லாம் குறையும்.
முக்கியமாக அடிப்படை சம்பளம் அதிகமாக கொடுக்க வேண்டும் அல்லது சமமாக கொடுக்க வேண்டும் என்பதே இந்த சட்டத்தின் நோக்கம்.
சேமிப்பு தொகை அதிகரிக்கலாம்
இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் அதன் பின்னர் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளம் (Take Home Salary) குறையும் மாறாக உங்களுடைய சேமிப்பு அதிகரிக்கும்.
அடிப்படை சம்பளம் 50% கீழ் இருக்கும் போது அந்த சம்பளத்தில் தான் வருங்கால வைப்பு நிதி கணக்கு 12+12=24 தொகை பிடித்தம் செய்யப்படுகிறது.
ஆனால் புதிய விதிகளின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும், அடிப்படை சம்பளம் அதிகரிக்கும்போது வருங்கால வைப்பு நிதி தொகை செலுத்துவது அதிகரிக்கும்.
இதனால் வருங்கால வைப்பு நிதி(PF ) செலுத்தும் தொகை அதிகரிக்கும், உங்கள் சேமிப்பு அதிகமாகும், எனினும் ஊழியர்களின் கையில் கிடைக்கும் சம்பளம் முன்பைவிட தற்போது குறைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
அளவன்ஸ்களில் ஏற்படும் மாற்றம்
உதாரணமாக ஒரு ஊழியரின் சம்பளம் விகிதம் 50,000 ரூபாய் என தோராயமாக வைத்துக்கொண்டால் அதில் சம்பளதாரரின் அளவன்ஸ்கள் 25,000 ரூபாய்க்கு மேல் இருக்க கூடாது.
ஆனால் அவரின் அடிப்படை சம்பளம் 25,000 ரூபாயாக அல்லது அதற்கு அதிகமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும் பொருட்டு நிறுவனங்கள் மற்ற அளவன்ஸ்களை குறைக்க வேண்டும்.
உங்களுக்கு கிடைக்கும் சம்பளம் குறையும்
இந்தப் புதிய விதிகளால் உங்களது வருங்கால வைப்பு நிதி சேமிப்புகள் அதிகரிக்கும் என்பது ஒரு நல்ல செய்தியாக பார்க்கப்பட்டாலும்.
கையில் கிடைக்கும் சம்பளம் என்பது குறையும் கட்டாயம் ஏனென்றால் வருங்கால வைப்பு நிதிக்கு முன்பைவிட இப்போது அதிகமான பணத்தை நீங்கள் செலுத்துவீர்கள்.
கிராஜுவிட்டி அதிகரிக்கும்
புதிய சட்டத்தின்படி அடிப்படை சம்பளம் உயர்ந்தால் அவரின் பிஎஃப் பங்களிப்பு ரூபாய் அதிகரிக்கும். இதனால் ஊழியரின் கையில் கிடைக்கும் சம்பளம் என்பது 24% குறையும்.
ஏனெனில் அடிப்படை சம்பளம் அதிகரிக்கும்போது கிராஜுவிட்டி அதிகரிக்கும், ஒவ்வொருவருக்கும் கடைசியாக கொடுக்கப்பட்ட அடிப்படை ஊதியத்தில் 15 நாட்களுக்கு சமமான தொகையாக நிறுவனங்கள் கொடுக்கும் ஊழியர்களுக்கு.
அடிப்படை சம்பளம் அதிகரிக்கும் போது கிராஜுவிட்டி தொகையும் அதிகரிக்கும்.
பல நபர்களுக்கு இந்த சலுகைகள் கிடைக்கும்
புதிய தொழிலாளர் சட்டங்களில் கிராஜுவிட்டியும் புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது, ஏற்கனவே இருந்த விதிகளின்படி 5 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்களுக்கு மட்டுமே கிராஜுவிட்டி வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் புதிய தொழிலாளர் சட்டத்தின் படி குறைந்தது 1 ஆண்டு பணிபுரிந்தால் கிராஜுவிட்டி தொகை வழங்கப்பட வேண்டும் என சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனால் பெரும்பாலான ஊழியர்கள் நிச்சயம் பயன்பெறுவார்கள் இந்த சட்டத்தில்.
வரி சலுகை குறையும்
இந்த ஆண்டு 2021 பட்ஜெட்டில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு செய்யப்பட்டு இருந்தால் அதற்கு வரி விதிக்கப்படும்.
பொதுவாக இந்த திட்டம் வரி சலுகை உண்டு என்பதால்தான் பலரையும் ஈர்த்தது இதுவரைக்கும்.
ஆனால் இனிவரும் காலங்களில் இதில் வரி பிடித்தம் செய்யப்படும் என்பதால் ஊழியர்கள் இதனை கவனத்தில் கொண்டு செயல்படலாம்.
தற்போது புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் அடிப்படை ஊதியம் அதிகரிப்பதால் அதிக சம்பளம் வாங்கும் நபர்களுக்கு இது கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
வரிவிலக்கு குறையலாம்
ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கும் என்பதால் வீட்டு வாடகைப் கொடுப்பன (HAR) குறையும் இதனால் கீழ் கொண்டு வரப்படும் வரிவிலக்கு குறையும்.
ஆகமொத்தத்தில் ஊழியர்களின் ஓய்வூதியம் அதிகரிக்கும் என்பதால் இதுவும் ஒரு நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது எனினும் அதிக அளவில் சம்பளம் வாங்கியவர்களுக்கு வரி சலுகை குறையும்.
மேலும் வீட்டிலிருந்து பணிபுரியும் நபர்களுக்கு ஊதியமும் குறையும்.
வேறு என்ன புதிய மாற்றங்கள்
புதிய சட்டத்திருத்த விதியின்படி ஊழியர்களின் வேலை நேரம் ஒரு நாளைக்கு 12 மணி நேரமாகவும் வாரத்தில் குறைந்தது 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்கலாம் என ஒரு சுதந்திரம் தொழிற்சாலைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மீதமிருக்கும் 3 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட வேண்டும் இது தொழிலாளர்களின் ஒப்புதலுடன் கட்டாயம் நடைபெற வேண்டும்.
ஏனெனில் அனைவராலும் ஒரு நாளைக்கு குறைந்தது 12 மணி நேரம் வேலை செய்ய இயலாத சூழ்நிலையில் இருக்கும் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும் தொழிற்சாலைகள்.
இரவு தூங்கும் பொழுது நடுராத்திரியில் அடிக்கடி விழித்துக் கொள்வது ஏன்
விடுமுறை அதிகரிக்கும்
ஒருவேளை தொழிலாளர்களுக்கு உடல்நலம் பாதிப்பு, பிரசவம், போன்ற காரணங்களுக்காக அதிகபட்சமாக ஒரு ஆண்டுக்கு 240 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்.
Click here to view our YouTube channel
என்ற நிலையில் இனிவரும் காலங்களில் இந்த விடுமுறை நாட்கள் 300 நாட்களாக உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Mathi meen fish 14 health benefits in tamil
மொத்தத்தில் இந்த புதிய சட்டம் எந்த அளவுக்கு ஊழியர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பது அமுலுக்கு வந்து சிறிது நாட்கள் ஆகும் பொழுது அல்லது சம்பளம் வாங்கும் பொழுது தான் இதனுடைய சாதகம் மற்றும் பாதகம் பற்றி நேரடியாக ஊழியர்கள் புரிந்துகொள்வார்கள்.