New year rasi palan best tips in tamil 2023
ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் 2023
2023ம் ஆண்டு அனைத்து ராசிகளுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இந்த கட்டுரையில் மூலமாக முழுமையாக காணலாம்.
எதிர்காலத்தில் நடக்கக் கூடிய நிகழ்வுகளைப் பற்றி தோராயமாக தெரிந்து கொள்வதற்கு அனைவருக்கும் மிகவும் ஆர்வமாக இருக்கும்.
கடந்த இரண்டு வருடங்களாக உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் கஷ்ட காலம் என்று சொல்லலாம் ஏனென்றால் வைரஸ் பாதிப்பால் அனைத்து நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இப்பொழுது மெல்ல மெல்ல ஒரு அளவுக்கு இயல்பு நிலை திரும்பி விட்டது இந்த 2023 ஆம் ஆண்டு உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும்.
உங்களுக்கு பணவரவு, தொழில், காதல், திருமணம், வீடு கட்டும் யோகம், வாகனம் வாங்கும் யோகம்,படிப்பு, வெளிநாடு செல்லும் வாய்ப்பு, அரசாங்க உத்தியோகம், போன்றவை எப்படி இருக்கும் என்பதை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் காணலாம்.
மேஷம் ராசி பலன் 2023
செவ்வாய் பகவானை ராசிநாதனாக கொண்ட உங்களுக்கு இந்த ஆண்டு வீடு மனை வாங்கும் யோகம் இருக்கிறது, பொருளாதாரத்தில் அதிக முன்னேற்றம் ஏற்படும்.
உங்கள் உடல்நலத்தில் அதிக முன்னேற்றம் ஏற்படும், குடும்பத்தில் ஓரளவு நிம்மதி ஏற்படும், நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்.
தொழிலில் அதிகப்படியான லாபம் கிடைக்கும், பெண்களுக்கு உங்களுடைய வாழ்வு உன்னதமாக அமையும் இந்த காலகட்டம் உதவும், குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் அதிகமாக இந்த ஆண்டு நடைபெறும்.
ரிஷபம் ராசி பலன் 2023
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டு என்று சொல்லலாம் ஏனென்றால் ஒரு அதிர்ஷ்டத்தை அனுபவிக்க கூடிய ராசிக்காரர்கள் என்று சொல்லலாம்.
உங்கள் ஜாதகத்தில் தசா புத்திகள் சிறப்பாக அமைந்திருப்பதால் இந்த ஆண்டு உங்களுக்கு மிகவும் சிறப்பானதாக அமையும்.
தொழில் மற்றும் உத்தியோகம் பொருத்தவரை இந்த ஆண்டு நீங்கள் எந்த விஷயத்தையும் தைரியமாக மேற்கொள்ளலாம், உங்களுக்கு முழுமையான வெற்றி கிடைக்கும்.
ரிஷப ராசிக்காரர்கள் உங்கள் திருமணத்தை வருகின்ற மே மாதத்திற்குள் முடித்துக் கொள்ளுங்கள் இவ்வாறு செய்வதினால் திருமணத்தில் உங்களுக்கு எந்த ஒரு தடையும் ஏற்படாது.
மேலும் திருமணம் ஆனவர்கள் அவர்களது திருமண வாழ்க்கையும், இந்த ஆண்டு சிறப்பாக, நிம்மதியாக, இருவருக்கும்,இருவருக்குள் பிணைப்பு அதிகமாக இருக்கும்.
ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
மாணவர்களும் 2023ஆம் ஆண்டு கல்வியில் சிறந்து விளங்குவார்கள், மேலும் பொருளாதாரத்தை பொறுத்தவரை பணவரவு உங்களுக்கு எப்பொழுதும் சாதகமாக இருக்கிறது இந்த ஆண்டு.
மிதுனம் ராசி பலன் 2023
மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், உங்கள் பொருளாதாரம் இந்த ஆண்டு சீராக வளர்ச்சி அடையும்.
இந்த ஆண்டு உங்கள் கடன்தொல்லையில் இருந்து நீங்கள் விடுபடுவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம், தொழில் மற்றும் பணி நிம்மதியாக அமையும்.
திருமண வாழ்க்கை பொருத்தவரை கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்பு கருத்துவேறுபாடுகள் அனைத்தும் நீங்கும்.
திருமணம் நடைபெறாத நபர்களுக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் மற்றும் நல்ல வரன் அமையும்.
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இந்த ஆண்டு குழந்தை பிறக்கும் நீங்கள் உங்களுடைய குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வரலாம்.
மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.
கடகம் ராசி பலன் 2023
கடகம் ராசிக்காரர்கள் இந்த ஆண்டு அனைத்து விஷயத்திலும் மிகவும் நீங்கள் கவனமாகவும் நிதானமாகவும் செயல்பட வேண்டும்.
இந்த ஆண்டு திருமணத்தில் சில தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம், உங்களுடைய திருமண வாழ்க்கை பொருத்தவரை.
கணவன் மனைவி இருவருக்குள் நீங்கள் புரிந்துகொண்டு அனுசரித்து பொறுமையாக விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கினாலும் எதிர்பாராத சில பிரச்சனைகள் ஏற்படும் நீங்கள் உங்களுடைய படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது சிறந்ததாக அமையும்.
உங்களுடைய நிதிநிலை பொருத்தவரை கடகம் ராசிக்காரர்களுக்கு, இந்த ஆண்டு பணம் வரவு உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான அளவுக்கு அமைந்துவிடும்.
உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் இந்த ஆண்டு நீங்கள் மிக மிக அதிகமாக கவனம் செலுத்த வேண்டும்.
சிம்மம் ராசி பலன் 2023
இந்த ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு ஓரளவு நிம்மதியான ஆண்டாக அமைந்து விட்டது குறிப்பாக 2023 ஆம் ஆண்டு வேலை, தொழில், பணம் முன்னேற்றம், நெடுந்தூர பயணங்கள், இவை எல்லாம் வெற்றிகரமாக அமையும்.
திருமண வயதில் இருக்கும் இளைஞர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் மிக நன்றாக அமையும்.
இந்த ஆண்டு நீங்கள் உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
குழந்தை இல்லாத தம்பதிகள் உங்களுடைய குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வரவும்.
மாணவ-மாணவிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே இந்த ஆண்டு வெற்றி பெறமுடியும்.
உங்களுடைய நிதிநிலை பொருத்தவரை வீண் செலவுகள் எதுவும் இந்த ஆண்டு இல்லை, இருப்பினும் அதிக சுப செலவுகள் செய்வதற்கு வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
கன்னி ராசி பலன் 2023
புதன் பகவானை ராசிநாதனாக கொண்ட கன்னி ராசி நபர்களுக்கு இந்த ஆண்டு உங்களுக்கு சில பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
இருந்தாலும் அதை நீங்கள் திறம்பட செயல்பட்டு சமாளித்து விடுவீர்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும், உங்கள் இல்லற வாழ்க்கையும் சிறப்பாக அமைந்து விடும்.
உங்களது கஷ்டங்கள் இந்த ஆண்டு சற்று குறைவாகவே அமையும் உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதற்கு நீங்கள் அதிகமாக பணி செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
உங்கள் பொருளாதாரத்தில் எந்த பிரச்சனையும் இல்லை, மாணவ-மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
துலாம் ராசி பலன் 2023
சுக்கிரனை ராசிநாதனாக கொண்ட துலாம் ராசி நண்பர்களுக்கு இந்த ஆண்டு உங்கள் குடும்பத்தில் அனைத்து நேரங்களிலும் மகிழ்ச்சி இருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்..
உங்கள் வீட்டு பொருளாதார நிதி நிலை தொடர்ந்து வளர்ச்சி கரமாக இருக்கும், பணி சம்பந்தமாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.
கணவன் மனைவி உறவுகளில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை, உங்களுடைய உத்தியோகத்தில் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் நல்லதாக இருக்கும்.
வியாபாரிகளுக்கு அளவான லாபம் கிடைக்கும், குறிப்பாக இந்த ஆண்டு குடும்ப நலன், தொழில் வளம், பதவி உயர்வு, போன்ற நற்பலன்கள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும்.
விருச்சிகம் ராசி பலன்
செவ்வாய் பகவானை ராசிநாதனாக கொண்ட விருச்சிக ராசி நண்பர்களுக்கு இந்த ஆண்டு அதிக நல்ல பலன்கள் கிடைக்க கூடும் செவ்வாய் நன்றாக இருக்கும்.
திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் நன்றாக அமையும் இந்த ஆண்டு உங்கள் குடும்பத்தில் அதிக சுபகாரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் கணவன்-மனைவி உறவுக்குள் விட்டுக்கொடுத்து நிதானமாக அனுசரித்து செல்வது நல்லது அமையும்.
உங்களுடைய ஆரோக்கியம் இந்த வருடம் சிறப்பாக இருக்கும், தொழில் மற்றும் பணி வளர்ச்சி அடைவீர்கள், மேலும் அதன் மூலம் நல்ல பணவரவு இந்த ஆண்டு கைகூடும்.
தனுசு ராசி பலன் 2023
குருபகவானை ராசிநாதனாக கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு உங்களுக்கு பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி நிலையில் இருக்கும்.
பிள்ளைகள் கல்வியில் சிறந்து முன்னேறுவார்கள் புதிய தொழிலை இந்த ஆண்டு நீங்கள் தொடங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
உங்களுடைய உத்தியோகத்தில் இந்த ஆண்டு அதிகமான முன்னேற்றம் இருக்கும்.
கணவன் மனைவி உறவில் ஒற்றுமை பல மடங்கு அதிகரிக்கும் இருப்பினும் இந்த ஆண்டு நீங்கள் உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
இந்த ஆண்டு வேலை தொடர்பாக அதிக பயணங்கள் நெடுந்தூரம் இருக்கும், இந்த ஆண்டு உங்களுக்கு வளர்ச்சிக்கான ஆண்டாக அமையும்.
மகரம் ராசி பலன் 2023
மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மிகப்பெரிய வளர்ச்சி ஆண்டாக இருக்கிறது, உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் இப்பொழுது நெருங்கி வருவார்கள்.
குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும் வேலை தேடிக்கொண்டிருக்கும் நபர்களுக்கு சிறந்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
வீட்டின் தேவைகளை இந்த ஆண்டு அதிகமாக பூர்த்தி செய்வீர்கள் கணவன் மனைவி உறவுகள் சில கருத்து வேறுபாடுகள் திடீரென்று ஏற்பட்டு சுலபமாக நீங்கும்.
குழந்தைகள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும், உங்களுடைய பொருளாதார நிதி நிலை பொருத்தவரை உங்களுடைய தேவைகளை சரியான நேரத்தில்,தேவையான அளவு, பூர்த்தி செய்யுமளவிற்கு பணவரவு அமைந்துவிடும்.
கும்பம் ராசி பலன் 2023
சனிபகவானே ராசிநாதனாக கொண்ட உங்களுக்கு இந்த ஆண்டு மிகப் பெரிய முன்னேற்றமாக அமையும் உங்கள் பணிகளில் அதிக கவனம் செலுத்துங்கள்.
வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் இருக்காது, நீங்கள் உங்களுடைய வியாபாரத்தில் சிந்தித்து செயல்படுவது நல்லது.
வீட்டில் சந்தோஷம் அதிகமாக நிலைத்திருக்கும், கணவன் மனைவி உறவுகள் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், அதற்கேற்ப உங்களுடைய செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
பெண்களுக்கு குடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டாலும், அவை தானாகவே மறைந்துவிடும்.
மாணவ மாணவிகளைப் பொறுத்த வரை ஒரு முறைக்கு, பலமுறை உங்களுடைய கல்வியில் கவனத்தைச் செலுத்துவது மிக நன்றாக அமையும்.
மீனம் ராசிபலன் 2023
மீனம் ராசிக்காரர்கள் புதன் பகவானை ராசிநாதனாக கொண்டவர்கள் உங்களுக்கு இந்த ஆண்டு பலவிதமான தர்மசங்கடங்கள் ஏற்படும் மனதில் நீங்கள் அதிகம் தைரியத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த ஆண்டின் ஆரம்பம் உங்களுக்கு மிகவும் சோதனை காலமாக இருக்கும், உங்களுக்கு பல பிரச்சனைகள், தோல்விகள், ஏமாற்றங்கள், துரோகங்கள், ஏற்படலாம்.
உங்களுடைய வளர்ச்சியை பாதிக்கும் வகையில் உங்கள் மீது பல நபர்கள் பொறாமைப்படுவார்கள்,உங்கள் மீது கண் திருஷ்டி ஏற்படும்.
கணவன் மனைவி உறவுகள் நல்ல புரிதல் இருக்கும், ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்வது நல்லது.
மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு கல்வில் அதிக கவனத்தை செலுத்தினால் மட்டுமே வெற்றி பெற வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.