Niccolo Tesla’s Best Discoveries in tamil 2021
நிக்கோலா டெஸ்லா கண்டுபிடிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு தமிழில்(Niccolo Tesla’s Best Discoveries in tamil 2021)
நிக்கோலா டெஸ்லா இவர் ஒரு பொறியாளர் மற்றும் தலைசிறந்த விஞ்ஞானியாக அமெரிக்காவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தார் இவர் கண்டுபிடித்த பல தொழில்நுட்பங்கள் இவர் வாழ்ந்த காலங்களில் அங்கீகரிக்கப்படாமல் இருந்தது.
ஆனால் இப்பொழுது அந்த தொழில் நுட்பங்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது இப்பொழுது இருக்கும் காலகட்டங்களில்.
நிக்கலோ டெஸ்லா கண்டுபிடித்தது முக்கியமானது சுருள் மாற்று மின்னோட்டம் ஏசி (AC current) மின்சாரம் மற்றும் சுழலும் காந்தப்புலத்தின் கண்டுபிடிப்புகள்.
நிக்கோலா டெஸ்லா யார் ?
இவர் ஒரு தலைசிறந்த பொறியாளர் மற்றும் தாமஸ் எடிசன் உடன் இவர் சில ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினார் இன்று நாம் ரேடியோ தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் டெஸ்லா சுருளை அவர் உருவாக்கினார்.
நவீனகால குரோஷியாவில் பிறந்த டெஸ்லா 1884 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு தாமஸ் எடிசன் உடன் பணியாற்ற வந்தார்.
பல மாதங்களுக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக நிக்கோலா டெஸ்லா மற்றும் தாமஸ் எடிசன் இருவரும் பிரிந்தனர் எடிசன் கண்டுபிடிப்புகளை சந்தைப்படுத்துதல் மற்றும் அதற்கு காப்புரிமை பெறுவதில் தனி கவனம் செலுத்தியதால் அவர் சக்தி வாய்ந்த நபராக மாறினார்.
இதனால் டெஸ்லா வணிக ரீதியாக தொடர்பு இல்லாமல் அவர் கண்டுபிடிப்புகளில் பாதிக்கப்பட்டார்.
நிக்கோலா டெஸ்லா கண்டுபிடிப்புகள்.
நிக்கோலா டெஸ்லா யோசனைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் டைனமோஸ் பேட்டரிகளை போன்ற மின் ஜெனரேட்டர்கள் மற்றும் தூண்டல் மோட்டார் உள்ளிட்ட சில கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றார் அமெரிக்காவில்.
ரேடார் தொழில்நுட்பம், x-ray தொழில்நுட்பம், ரிமோட் கண்ட்ரோல், மற்றும் சுழலும் காந்தபுலம் ஆகியவற்றை கண்டுபிடிப்பதில் அவரின் தனித்திறமையை 19ம் நூற்றாண்டில் வெளிப்படுத்தினார்.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் டெஸ்லா கண்டுபிடித்த சுருள் காப்புரிமை பெற்றது இது இப்பொழுது நாம் பயன்படுத்தப்படும் ஒயர்லெஸ் தொழில்நுட்பங்களுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது மற்றும் இன்று வானொலி தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படுகிறது மின்சுற்றின் இதயம் டெஸ்லா சுருள்.
சிறந்த முடி வளர்ச்சிக்கு நீங்கள் எடுக்க வேண்டிய 5 விட்டமின்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
நிக்கோலா டெஸ்லா வீழ்ச்சிக்கான காரணங்கள்.
நிக்கோலா டெஸ்லா கண்டுபிடித்த பல தொழில்நுட்பங்களை எப்படி காப்புரிமை பெறுவது மற்றும் சந்தை படுத்துதல் போன்றவற்றிற்கு அவர் தனி கவனம் செலுத்தாததால் மேலும் அவரின் போட்டியாளராக இருந்த தாமஸ் எடிசன் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டதால் டெஸ்லாவின் வீழ்ச்சிக்கு இதுவே முதன்மையாக அமைந்தது.
ஒயர்லெஸ் தொழில் நுட்பத்தில் அதிகம் ஆர்வத்தை வெளிப்படுத்திய நிக்கோலஸ் டெஸ்லா .
அதற்காக தைரியமான திட்டத்தில் பணியாற்ற தொடங்கினார் ஒரு பெரிய மீன் கோபுரம் வழியாக தகவலை அனுப்ப முடியும் என்று அவர் முன்மொழிந்தார் ஆனால் இவருடைய கருத்துக்களை யாரும் அங்கீகரிக்கப்படவில்லை.
இவருக்கு போட்டியாக இருந்த தாமஸ் எடிசன் இவருடைய அனைத்து கண்டுபிடிப்புகளுக்கும் எதிராக சில கருத்துக்களை வெளியிட்டார் மேலும் நிக்கோலா டெஸ்லா அவருடைய தொழில்நுட்பங்களை சந்தைப்படுத்துவதில் வெற்றி என்பது சிறிதாகவே இருந்தது.
5 most Wonderful Little Birds in tamil
இதன் காரணமாகவே நிக்கோலா டெஸ்லா வின் அனைத்து கண்டுபிடிப்புகளுக்கும் உரிய அங்கீகரிக்க கிடைக்காமல் போனது