அடுத்த மாதம் 3வது அலை 2 லட்சம் படுக்கைகள் தேவை இல்லை என்றால் மிக கஷ்டம்தான் நிதி ஆயோக் பகீர் தகவல்(Niti aayog recommended about 3rd wave corona)
இந்தியாவில் வரும் காலத்தில் நாடு முழுவதும் 2 லட்சம் ICU படுகைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என நிதி ஆயோக் மத்திய அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 23% வரை உயரலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் தொடங்கிய கொரோனா 2ம் அலை மார்ச்-ஏப்ரல் மாதங்களில் உச்சம் தொட்டது. அப்போது தினசரி வைரஸ் பாதிப்பு 4 லட்சம் வரை சென்றது.
அந்த நேரத்தில் நாட்டில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிந்தன. அந்த சமயத்தில் ஒரு புறம் கொரோனா மறுபுறம் சரியான நேரத்தில் படுக்கை மற்றும் ஆக்ஸிஜன் வசதி கிடைக்காமல் நோயாளிகள் பலர் உயிரிழந்தார்கள்.
மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது.
யாரும் எதிர்பார்க்காத வகையில் 2ம் அலை இந்தியாவில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன குறிப்பாக கொரோனா டெல்டா பாதிப்பால் வைரஸ் அதிவேகமாக பரவியது என்றாலும் கூட தேவையான முன்னெச்சரிக்கைகளை மத்திய அரசு எடுக்கத் தவறியதே இதற்கு காரணம் என எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சனம் தொடுத்தார்கள்.
தடுப்பூசிக்கு ஏற்றுமதி அனுமதி அளித்தது ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க படாமல் இருந்தது என பல்வேறு குற்றச்சாட்டுகள் மத்திய அரசின் மீது பசுமத்தப்பட்டன.
மீண்டும் தயார் நிலையில் இருக்க வேண்டும்
இப்பொழுது இந்தியாவில் கொரோனா 3வது அலை குறித்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. சில ஆய்வாளர்கள் 3வது கொரோனா அலை மிக மோசமானதாக இருக்கும் என கணித்துள்ளார்கள். அதேநேரம் பெரும்பெரும்பாலான ஆய்வாளர்கள் 2ம் அலை அளவுக்கு 3ம் அலை பாதிப்பை ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளார்கள்.
இந்தச் சூழலில் அடுத்து வரும் காலங்களில் கொரோனா பாதிப்பு குறித்தும் கொரோனா படுக்கைகளின் தேவை எந்த அளவு அதிகரிக்கும் என்பது குறித்து மத்திய அரசுக்கு நிதி ஆயோக் அளித்த பரிந்துரையை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் 2 லட்சம் ICU படுக்கையில் தேவை.
நிதி ஆயோக் ஒரு கணக்கை வெளியிட்டுயுள்ளது அதில் தினசரி பாதிப்பு 4 லட்சம் முதல் 5 லட்சம் வரை உயரும் பட்சத்தில் எத்தனை படுக்கைகள் தேவை என்பது குறித்துநிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.
23 % பேருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம் என்பதால் அடுத்த மாதத்திற்கு நாடு முழுவதும் 2 லட்சம் ICU படுகைகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அவற்றில் 1.2 லட்சம் படுக்கைகளில் வென்டிலேட்டர் வசதி கட்டாயம் இருக்க வேண்டும் என கணித்துள்ளது.
Amazing Benefits of Eating Tuna Fish
ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 5 லட்சம் கொரோனா படுக்கைகள் உட்பட 7 லட்சம் சாதாரண படுக்கைகள் மற்றும் 10 லட்சம் தனிமைப்படுத்த படுக்கைகள் தேவைப்படலாம் என மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை அளித்துள்ளது.
Salmon Fish Nutrients and 8 Amazing Benefits
அடுத்த மாதம் முதல் கொரோனா 3வது அலை தொடங்கா சாத்தியக்கூறுகள் இருப்பதால். முடிந்தவரை தடுப்பூசிகளின் போடும் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.