North State Workers News Best tips 2023
சொந்த ஊர் செல்லும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு கோவையில் இருந்து புறப்படுகிறது முழு விவரம்..!
வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் வதந்தி பரப்புதல் வன்முறை தூண்டுதல் அண்ணாமலை மீது பாய்ந்தது 4 வழக்குகள்.
வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது இன்று இரவு கோவையில் இருந்து இந்த ரயில் சேவை இயக்கப்படுகிறது.
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சிறப்புக் குழு தமிழகத்தில் ஆய்வு நடத்தி வருகிறது.
ஹோலி பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து தினம் தோறும் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கிவிட்டனர்.
இதையடுத்து வடமாநிலத் தொழிலாளர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயிலை இயக்க போவதாக அறிவித்தது.
அண்ணாமலை மீது 4 வழக்குகள் பாய்ந்தது
வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பியதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது நான்கு பிரிவுகளில் காவல்துறையினர் அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.
மேலும் வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வன்முறை தூண்டும் வகையில் அறிக்கை வெளியிட்டதாகவும் அண்ணாமலை மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிரான ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
தமிழகத்தில் பெரும்பான்மையான வேலைவாய்ப்புகளை வடமாநில தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்தில் செய்வதற்கு தயாராக இருப்பதால்.
தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை என்ற ஒரு செய்தி வேகமாக கடந்த சில ஆண்டுகளாகவே பரவிவருகிறது.
அதிலும் குறிப்பாக சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இதனை வெளிப்படையாக அறிவித்து போராட்டங்களையும் நடத்தினார்.
North State Workers News Best tips 2023 கடந்த சில மாதங்களாக வடமாநில தொழிலாளர்கள் தமிழக இளைஞர்களை தாக்குவது போன்ற வீடியோ இணையதளத்தில் வெளியானது.
இதனால் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு எதிரான ஒரு மனநிலை தமிழகத்தில் உருவானது.
வடமாநில தொழிலாளர்களால் தமிழகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து இருப்பதாக தொடர்ந்து அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள் சில இடங்களில் இதற்கான போராட்டம் நடைபெற்றது.
சமூக வலைத்தளங்களில் வட மாநில தொழிலாளர்களை தாக்குவது போன்ற தவறான வீடியோ மற்றும் தகவல்கள் பரவுவதை மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் பல மாநில தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு கூட்டம் கூட்டமாக புறப்பட ரயில் நிலையங்களுக்கு படையெடுத்தார்கள்.
North State Workers News Best tips 2023 இதனை கண்டு அதிர்ந்து போன தமிழக காவல்துறை தமிழக அரசு மற்றும் பீகார், ராஜஸ்தான் போன்ற மாநில அரசுகள் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு இதற்கான பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்தார்கள்.
தமிழக அரசு மற்றும் காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிக்கை
North State Workers News Best tips 2023 வட மாநிலத் தொழிலாளர்களுக்கு எதிரான வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு ஒரு செய்தியை வெளியிட்டது.
அதற்கு பின்னால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று இன்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.