NPS scheme full details in tamil 2022
அனைவருக்கும் மத்திய அரசின் சிறந்த ஓய்வூதிய திட்டம்..!
நமது மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள அனைவருக்கும் ஓய்வூதியம் திட்டத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் இந்த திட்டம் கண்டிப்பாக உங்கள் வாழ்நாளில் பயனளிக்கும்.
இந்த இடத்தைப் பற்றி தெரியாத நபர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், தேசிய ஓய்வூதியத் திட்டம் இதனை ஆங்கிலத்தில் (National Pension Scheme) என்று அழைப்பார்கள்.
PFRDA திட்டத்தின் கீழ் நாம் நமது நாட்டில் செயல்படுத்தப்படுகிறது, பொதுவாக அரசாங்கத் துறையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் தான் அரசு ஓய்வூதியம் பெற முடியும்.
மற்றபடி தனியார் துறை அல்லது சுயதொழில் செய்யும் நபர்களுக்கு அரசு ஓய்வூதியம் பெற முடியாது, என்று பல நபர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
சுயதொழில் புரியும் நபர்களுக்கும் அல்லது பென்சன் பெற முடியாத நபர்களும் பயனடையும் வகையில் நமது மத்திய அரசாங்கம் இந்த தேசிய ஓய்வூதிய திட்டத்தை நாடு முழுவதும் அமல் செய்து உள்ளது.
அதாவது தாங்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.
சரி இந்த திட்டத்தில் யாரெல்லாம் பயனடையலாம், இந்த திட்டத்தில் எப்படி முதலீடு செய்யவேண்டும், இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்ன என்பதை பற்றி, இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த திட்டத்தில் யாரெல்லாம் இணையலாம்
இந்திய குடிமகனாக இருந்தால் போதும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்
வெளிநாடுகளில் வாழ்கின்ற இந்தியர்களும் (NRI ) மூலம் இந்தத் திட்டத்தில் இணையலாம்.
18 வயது முதல் 60 வயது உட்பட்ட அனைத்து நபர்களும் இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம்.
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணையும் நபர்கள் கட்டாயம் தங்களுடைய நாமினியாக ஒருவரை நியமிக்க வேண்டும்.
இரண்டு வகையான கணக்குகள் இருக்கிறது
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் TIER-1 மற்றும் TIER-2 என இரண்டு வகையான கணக்குகள் இருக்கிறது, அவற்றில் ஒரு சந்தாதாரர் தங்களுடைய நாமினியாக மூன்றாவது நபர்களை நியமித்து கொள்ள வேண்டும்.
இந்த திட்டத்தில் நீங்கள் இணைந்தவுடன் உங்களுக்கு ஒரு PRAN நம்பர் கொடுத்து விடுவார்கள்.
அதனை ஓய்வூதிய கணக்கு என்று சொல்வார்கள் இந்த 12 Digit நம்பர் தான் தங்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான அடையாளமாக (Identification) இருக்கும்.
இந்த கணக்கில் நாமினியை மாற்ற வேண்டுமென என்று நீங்கள் நினைத்தால் இந்த PRAN எண்களை பெற்றவுடன் மாற்றிக்கொள்ள முடியும்.
தேவைப்படும் ஆவணங்கள் என்ன
இந்த திட்டத்தில் இணைந்து கொள்வதற்கு ஆதார் அட்டை, பான் கார்டு, ரேஷன் கார்டு, அல்லது ஓட்டர் ஐடி, இந்திய அரசு வழங்கிய ஏதேனும் ஒரு அடையாள அட்டை கட்டாயம் தேவைப்படும்.
அதன்பிறகு முகவரி சான்றிதழ், இறப்பு சான்றிதழ், போன்றவையும் தேவைப்படும்.
இந்த திட்டத்தில் வரி சேமிப்பு இருக்கிறதா
இந்தத் திட்டத்தில் ரூபாய் 1,50,000/-வரை முதலீடு செய்யும் பொழுது 80-சி வரி விலக்கு கட்டாயம் அளிக்கப்படும்.
அதேபோல் பிரிவு 80CCDIB-யின் கீழ் கூடுதலாக ரூபாய் 50,000/- முதலீட்டிற்கு வரி விலக்கு பெற முடியும்.
வரிவிலக்கு உடன் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைக்கும் நபர்கள் இந்த NPS திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.
TIER-1 திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்ன
அரசாங்கத்தில் வேலை செய்யும் நபராக இருந்தாலும் 10 % Basic Salary + (DA) Daily Allowance இரண்டையும் சேர்த்து முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும் உங்களுடைய PAY செய்யும் 10% முதலீடுகள் உடன் அரசாங்கமும் தனது பங்குக்கு இதேபோல் 10% சதவீத கட்டணத்தை செலுத்துகிறது.
ஒருவேளை நீங்கள் தனியார் துறையில் பணிபுரியும் நபராக இருந்தால் உங்களுக்கு இரண்டு வகையான வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது.
அதாவது NPS அல்லது EPS என இரண்டு வகையான வாய்ப்புகள் இவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்துப் பயன்பெறலாம்.
இவற்றில் 10 % Basic Salary + (DA) Daily Allowance உங்களுடைய முதலீட்டினை செலுத்த வேண்டியதாக இருக்கும்.
நீங்கள் PAY செய்யும் 10% முதலீடுகள்யூடன் உங்களுடைய நிறுவனமும் தனது பங்குக்கு இதுபோல் 10% கட்டணத்தை கட்டாயம் செலுத்தும்.
இந்த TIER 1 திட்டம் பொருத்தவரை ஓய்வு காலத்திற்கு பின் தான் இந்த கணக்கில் இருந்து பணத்தை பெற முடியும் இருப்பினும்.
தேசிய ஓய்வூதிய திட்டம் விதிமுறைகளுக்கு உட்பட்டு வெளியே வரும்பொழுது தங்கள் முதலீடு செய்த தொகையை திரும்ப பெற இயலும்.
இந்தத் திட்டத்தில் ஒருவேளை நீங்கள் முதலீடு செய்வதாக இருந்தால் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூபாய் 500/- மாதம் செலுத்த வேண்டும்.
இதற்கு வருடத்திற்கு 6,000/- ரூபாய் முதலீடு செய்ய வேண்டும், இவ்வாறு முதலீடு செய்யாவிட்டால் இந்த ஓய்வூதிய கணக்கு முடங்கிவிடும்.
மீண்டும் இந்த கணக்கினை நீங்கள் செயல்படுத்த வேண்டும் என்று நினைத்தால் தங்கள் செலுத்த வேண்டிய தொகை உடன்.
சிறிய அளவிலான அபராத தொகையை செலுத்தினால் மீண்டும் இந்த திட்டத்தில் நீங்கள் இணைந்து கொள்ள முடியும்.
TIER-2 திட்டத்தின் சிறப்பம்சங்கள்
இந்த திட்டத்தில் கணக்கு துவங்கினால் முதலீட்டாளர்கள் தங்களுடைய வசதிக்கேற்ப எப்பொழுது வேண்டுமானாலும் முதலீடு செய்யும் அதனை திரும்பவும் பெற முடியும்.
முதலீட்டாளர்கள் TIER 1 ஓய்வுதிய கணக்கு திறந்து இருந்தால் மட்டுமே அடுத்து TIER 2 கணக்கு தொடங்க முடியும்.
இந்த கணக்கில் நீங்கள் ஒரு நிதி ஆண்டிற்கு குறைந்தபட்சம் 20,000/-ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.
எவ்வளவு லாபம் கிடைக்கும்
உதாரணத்திற்கு ஒருவர் 30 வயதிலிருந்து மாதம் 500 ரூபாய் சேமிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளலாம், ஒரு வருடத்திற்கு 500 X 12 = 6,000/- செலுத்த வேண்டியதாக இருக்கும்.
கணையப் புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது அதன் அறிகுறிகள் என்ன..!
இவர் செலுத்தும் முழு தொகையை அவருடைய 60 வயதில் முழுமையாக பெற முடியாது.
What are the symptoms of worst allergies 2022
இந்த தொகையில் 60% தொகையினை அவருடைய 60 வயதில் பெற முடியும், மீதமுள்ள 40% தொகையினை மாதாமாதம் அவர்களுக்கு பென்ஷன் தொகையாக வழங்கப்படும்.