OLA introduction new e-bike 2022 in tamil
அனைவரும் வாங்க கூடிய மலிவான இ-ஸ்கூட்டரை உருவாக்கும் ஓலா எலக்ட்ரிக் பைக் தயாராகிறதாம்..!
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தற்போது பல்வேறு வகையிலான பேட்டரியில் இயங்கக்கூடிய இரு சக்கர வாகனங்களின் மூலம் அதன் எலக்ட்ரிக் இயக்க பிரிவை எதிர்காலத்தில் அதிகமாக விரிவுபடுத்த, புதிய டெக்னாலஜியை விரிவுபடுத்த, திட்டமிட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் இந்திய மக்களை கவரும் வகையில் வாகன பிரிவிலும் நுழைய ஓலா நிறுவனம் தயாராகி வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இதற்காக எலக்ட்ரிக் கார்களை உருவாக்கும் பணியிலும் இந்த நிறுவனம் விரைவில் ஈடுபட உள்ளது.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சுதந்திர தினத்தின் போது அதன் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை S1&S Pro என்ற இரு வகையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் காண முன்பதிவுகள் இப்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் S1 காட்டிலும் மலிவான எலக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்க ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இது தொடர்பாக டுவிட்டரில் வெளியான புதிய தகவல்களுக்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் இதற்கு ஆம் என்று அடுத்த ஆண்டில் இது தொடரும் என பதிலளித்துள்ளார்.
எலக்ட்ரோ கோ என்ற டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்த பதிவில் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களை உருவாக்கும் பணியில் இப்பொழுது ஓலா நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இதனையும் சேர்த்து தான் பாவிஷ் அகர்வால் ஆம் என உறுதி செய்துள்ளார், இதனால் அடுத்த 2022 ஆம் ஆண்டின் முதல் எலக்ட்ரிக் பைக் அறிமுகத்தையும் எதிர்பார்க்கலாம்.
ஆனால் இதற்கு முன்னதாக s1 என்ற பெயரில் ஓலாவின் புதிய இ-ஸ்கூட்டர் அறிமுகம் ஆகும் என தெரிகிறது.
இப்பொழுது s1 மற்றும் s1pro பெயர்களில் பதிவு செய்யப்பட்ட போதே s என்ற பெயரையும் தனது எதிர்காலத்திற்காக ஓலா நிறுவனம் பதிவு செய்து கொண்டுள்ளதாக இணையதளத்தில் செய்திகள் வெளியாகிவருகிறது.
தோற்றத்தை பொறுத்தவரையில் தற்போது s1 மாடல்களுக்கு புதிய s மாடலுக்கு பெரிய அளவில் எந்த ஒரு வித்தியாசமும் இருக்காது என அந்த நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஓலா எஸ் மாடலின் ரேஞ்ச் 100 கிலோ மீட்டராக இருக்கலாம் அதாவது இதன் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக்கொண்டு அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் தொலைவிற்கு பயணிக்க முடியும் இதன் உச்ச வேகம் 75 கிலோ மீட்டர் முதல் 80 கிலோமீட்டர் வரை இருக்கலாம்.
பேட்டரியின் திறனை குறைப்பது மட்டுமின்றி, தொடுதிரை, க்ரூஸ் கன்ட்ரோல், ஸ்பீக்கர்கள் மற்றும் சாவிஇல்லாத ஸ்டார்ட் போன்ற பிரிமியம் தரத்திலான வசதிகளும் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தவிர்க்கப்படலாம்.
ஏனென்றால் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை அதிகமாக இருக்கிறது என்று இணையதளத்தில் ஒரு செய்திகள் வெளியாகி வருகிறது.
இவற்றுடன் இருக்கைக்கு அடியில் பொருட்களை வைக்கும் பகுதியை திறந்தால், மூடுதல், அருகாமையில் இருந்தபடியே ஸ்கூட்டரை லாக் செய்யவும் வசதி, குரல் கட்டுப்பாடு, இணையதள இணைப்பு, போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் எதிர்பார்க்க முடியாது என ஓலா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை அரிசி உங்களின் வாழ்நாளை அதிகரிக்கும் ஏன் தெரிந்து கொள்ளுங்கள்.
கடும் போட்டி காரணமாக ஓலா நிறுவனம் புதிய ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
How to make biscuit in home new idea 2021
இதன் விலை என்பது அனைத்து மக்களும் வாங்கும் வகையில் 1,00,000/- ரூபாய்க்குள் நிர்ணயிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.