OLA S1 AIR electric scooter best review
ஒருமுறை சார்ஜ் செய்தால் குறைந்தபட்சம் 100 கிலோ மீட்டர் ஓடும் மின்சார புதிய மாடல் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது ஓலா நிறுவனம்..!
இந்தியாவின் எதிர்காலத்தில் மின்சார வாகனங்கள் தான் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தும் என்பதில் எந்தவித மாற்றமுமில்லை அதற்கேற்றார்போல்.
இப்பொழுது இந்தியாவில் பல்வேறு சிறிய நிறுவனங்கள் மின்சாரத்தால் இயங்கும் இரண்டு சக்கர வாகனங்களை தயாரிக்க தொடங்கிவிட்டது அதில் வெற்றியும் பெற்றுவிட்டனர்.
கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களும் இப்பொழுது மின்சாரம் மூலம் இயக்கப்படுகிறது.
டாடா நிறுவனம் மின்சாரத்தால் இயங்கும் காரை அதிக அளவில் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.
சிறந்த பட்ஜெட்டிற்குள் (Electric Scooter) ஸ்கூட்டர் வாங்க நினைக்கும் மக்களை இலக்காகக் கொண்டு எலெக்ட்ரிக் வாகனம் தயாரிப்பு நிறுவனமான ஓலா நிறுவனம் புதிய மாடலை இப்பொழுது அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையும் பல மடங்கு அதிகரித்துள்ளது ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் குறைந்தபட்சம் 100 கிலோமீட்டர் வரை செல்லும்.
இந்த புதிய (OLA S1 AIR) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்யாக இருக்கிறது என ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 79,000/-மட்டுமே.
அதுமட்டுமில்லாமல் தற்போதைய எக்ஸ்ஷோரூம் விலை 84,999/-ரூபாய் ஆகும்.
இந்த விலை நிலவரங்கள் அக்டோபர் வரை முன்பதிவு செய்யப்பட்ட நபர்களுக்கு மட்டும் செல்லுபடியாகும்.
இந்த ஸ்கூட்டர் டெலிவரி வருகின்ற 2023 ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் தற்போது வாடிக்கையாளர்கள் 999 ரூபாய் செலுத்தி இந்த ஸ்கூட்டரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
வருகின்ற பிப்ரவரி மாதம் 2023ல் நீங்கள் மறுபடியும் இந்த ஸ்கூட்டரை இணையதளம் மூலம் புக் செய்து கொள்ளலாம்.
இந்த ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் என்ன
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டர் (OLA S1 Pro) அடிப்படையில் உருவாக்கப்பட்டது இது 4.5 KW ஹப் மோட்டாரை உள்ளடக்கியிருக்கும்.
இது மணிக்கு அதிகபட்சம் 85 கிலோமீட்டர் வேகத்தை தொடும் அதுமட்டுமில்லாமல் ஓலா நிறுவனம் கூறியிருக்கும் விதிமுறைகளை பின்பற்றினால் ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை மீட்டர் செல்லும்.
OLA S1 AIR electric scooter best review இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எடை 99 கிலோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நியூ மின்ட், கோரல் ஜெட், பிளாக்,போர்சிலியன் ஒயிட்,லிக்விட் சில்வர்,உள்ளிட்ட கலர் விருப்பங்களில் கிடைக்கிறது.